Thursday, 10 July 2014

சீனாவில் 'ஐ' படத்தின் அதிரடி சண்டை காட்சிகள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் 'ஐ'.  இதில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் வருகிறார். மேலும் தன் உடல் எடையயும் கணக்கிட முடியாத அளவிற்கு இறக்கி, ஏற்றி தன் முழு உழைப்பையும் அளித்து வருவது அறிந்ததே.

விக்ரமின் பிரத்யேக தோற்றத்திற்காக நியூசிலாந்து நாட்டின் WETA எனும் நிறுவனத்தின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே இந்நிறுவனம் ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள் செய்வது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சீனா, சென்னை, கொடைக்கானல், பொள்ளாச்சி,ஒடிசா அகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தொடர்ந்து 25 நாட்கள் ஒடிசாவில் படமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 'ஐ' படம் 2014ம் ஆண்டின் மிக பிரம்மாண்ட படமாக அமையும் என தெரிகிறது.

படத்தின் பாடல்கள் ஆகஸ்டில் வெளியாகும் எனவும், படம் செப்டம்பரில் வெளியாகும் எனவும் அறிவிப்புகள் வந்தாலும் இன்னும் இறுதி முடிவுகள் வரவில்லை.

அஜீத், சிறுத்தை சிவா மீண்டும் இணைகிறார்கள்..!

அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத்.

தற்போது ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட சிவா அதனை அஜீத்திடம் காட்டி ஒகே வாங்கியிருப்பது தான் லேட்டஸ்ட் தகவல். தற்போது கவுதம் மேனன் படத்தில் நடித்து வரும் அஜீத். அதை முடித்த உடன் மீண்டும் சிவாவுடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. அஜீத், சிவா தவிர வேறெதுவும் முடிவாகவில்லை.

வீரம் படத்தின் இந்தி ஸ்கிரிப்டை முடித்துள்ள சிவா. அதில் அஜீத் கேரக்டரில் நடிக்க சல்மான்கானை அணுகி உள்ளார். அஜீத்தின் தமிழ் படத்தை முடித்துவிட்டு அதற்கு பிறகு வீரம் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று சிவா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

வேலையில்லா பட்டதாரி படத்தில் சிம்பு! ரசிகர்களுக்கு செம்ம விருந்து!

தனுஷ் நடிப்பில் இன்னும் சில நாட்களில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இவரின் போட்டி நடிகராக கருதப்படும் சிம்புவுக்கு படம் வந்தே 2 வருடம் ஆகிவிட்டது.

ரசிகர்களின் குறையை போக்க சின்ன சின்ன படங்களில் கெஸ்ட் ரோலில் தலையை காட்டினார். தற்போது இவரின் வாலு படமும் ரிலிஸ்க்கு ரெடியாகிவிட்டது.

தற்போது ரசிகர்களை குஷிப்படுத்த வாலு படத்தின் ட்ரைலர் வேலையில்லா பட்டதாரி படத்தின் இடைவேளையில் வருகிறதாம். இதன் மூலம் இரண்டு ரசிகர்களின் போட்டி நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??

                 எந்த ஒரு விசேஷத்திற்க்கு சென்றாலும் மொய்  என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பது நமக்கு வழக்கம். இவ்வாறு வைக்கும் போது முழு தொகையுடன் ஒரே ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்போம். ஏன் நம் முன்னோர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?? மிகவும் சிறிய விஷயமானலும், இதிலும் நம் முன்னோர்களின் பண்பாடு சார்ந்த மேன்மை வெளிப்பட்டிருக்கிறது.

பொதுவாக மொய்பணம் கொடுப்பது என்பது நம் பண்பாட்டில் நீண்ட நாள்களாக இருந்து வரும் மரபே. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன், மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் வடிவத்தில் தான் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்த மொய்பணமும் அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க உலோக நாணயங்களாக இருந்தன.
அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்பு மிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததான ஒரு மன நிறைவு இருந்தது. ஆனால் கரன்சி என்கிற ருபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. கரன்சி தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.

எனவே ரூபாய் தாளை மொய்பணமாக கொடுபவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.

அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான்நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்த வந்தன. எனவே தான் நம் மொய்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐநூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.

அது போலவே கூடுதாலாக சேர்த்துக் கொடுக்கப்படும் ஒரு ரூபாய் கரன்சி தாளாக இல்லாமல் ஒரு ரூபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும் என்பதும் கண்டிப்பான மரபாகவும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அது போல் ஒரு ரூபாய் தட்சணையாக கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் ஒரு ரூபாய் தாளுடன் வெள்ளியிலான கால் ரூபாயும் சேர்த்துக் கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்தது.

இன்று ஒண்ணேகால் ரூபாய் தட்சணை கொடுப்பதிலும் ஒரு சிக்கல் உண்டாகி விட்டது. கால் ரூபாய் அதாவது 25காசு நாணயம் செல்லாக் காசாகி விட்டது. மேலும் ஒண்ணேகால் ரூபாய் என்பது மதிப்பிழந்து விட்டது. பிச்சைகாரன் கூட ஒரு ரூபாயை பிச்சையாக ஏற்க மறுக்கும் காலமாகிவிட்டது இன்று.

ஆடி மாதத்தில் அப்படி என்ன விசேஷம்?

தெய்வ வழிபாடுகளுக்கு சிறப்பு பெற்றது ஆடி மாதம். நாகதேவி பூஜை என்று அழைக்கப்படும் சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் இந்த மாதம் முழுவதும் சிறப்பாக நடைபெறும். காலம் காலமாக இந்த வழிபாட்டு முறை  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணு, ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்த நிலையில் நாகம் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவு உடையவை. முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.

புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். நாக வழிபாடு அந்தந்த இடங்களில் அவரவர் வழிபாட்டு முறையில் நடக்கிறது.

புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் சொல்கின்றனர். பிரதோஷ நாட்களில் மவுன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும். ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆதிசேஷனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். உடல், மனம் நலம் பெறும்.

சகலவிதமான செல்வங்களையும் பெறலாம். நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம். வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் குறை இருக்காது. வீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

கருத்தரித்தலை தடுக்கும் அதிநவீன சிப் உருவாக்கம்..!

கருத்தரித்தலை தடுக்கக்கூடியதும், ரிமோர்ட் கன்ரோல் மூலம் இயக்கக்கூடியதுமான அதிநவீன சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டு கால முயற்சியிலும், மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில்ஹேட்ஸ்ஸின் ஆதரவுடனும் இச் சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பிட்டம், மேல் கை, அடி வயிற்றின் தோல் போன்ற இடங்களில் பொருத்த முடியும்.

இதன் மூலம் வெளியேற்றப்படும் விசேட ஹோர்மோன் கருத்தரித்தலை கட்டுப்படுத்துகின்றது.

எனினும் பெண்கள் தமக்கு தேவையான நேரத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் இதனை செயல் இழக்கச் செய்யவோ அல்லது மீண்டும் செயற்படுத்த செய்யவோ முடியும்.

இந்த சிப் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌபாய் ரஜினியுடன் சோனாக்ஷி சின்ஹா ரொமான்ஸ் டூயட்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி , சோனாக்ஷி சின்ஹா , அனுஷ்கா நடித்து வரும் படம் 'லிங்கா'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

'லிங்கா' படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் யூத்தாகவே தோன்றுகிறாராம் ரஜினி. எனவே சோனாக்ஷி மற்றும் அனுஷ்காவுடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்குமாம்.

எப்போதும் ரஜினி படம் என்றால் மற்ற படங்களை விட விரைவில் பாடல்களைக் கொடுத்து விடும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு மட்டும் சற்று நேரம் அதிகம் எடுத்துக் கொண்டு பாடல்களைக் கொடுத்துள்ளார்.படத்தின் அனைத்து காட்சிகளும் ஓரளவு முடிந்த வேளையில் தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப் பட உள்ளன.

ஒரு பாடலில் நான்கு  கெட்டப்களில் தோன்றும் ரஜினி ஒரு கெட்டப்பாக கௌபாய் வேடத்தில் சோனாக்ஷி சின்ஹாவுடன் ரொமான்ஸ் செய்து டூயட் ஆடுகிறார்.  விரைவில் இந்தப் பாடல் காட்சிசென்னையில் படமாக்கப் பட உள்ளது..

நீங்கள் எப்படித் தூங்குகிறீர்கள்?

நீங்கள் தூங்குவதை வைத்தே எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதைச் சொல்லி விடலாம்.

* தலையணை எதுவுமில்லாமல் படுத்த இடத்தில் எந்தவித செளகரியமுமின்றி மல்லாந்து படுத்தவுடன் தூங்குபவர்கள்:   இவர்கள் உடற்கட்டுடன் இருப்பவர். உடல் நலத்தைப் போற்றி காக்கும் ரகம். வாழ்க்கையில் என்றுமே அலுக்காது துருதுருவென்ற துடிப்பும், ஆர்வமும் மிகுந்திருக்கும்.

* பந்துபோல் உடம்பைச் சுருட்டிக்கொண்டு தூங்குபவர்கள்: தன்னம்பிக்கை குறைந்த மனிதர். கவலையற்ற பொறுப்பற்ற தொழிலை நாடுவார்கள். இவர்களுக்கு வரும் வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி துணிச்சல் உள்ளவராக இருப்பர்.

* தலை ஒருபக்கம் திரும்ப வயிறு படுக்கையில் படும்படி குப்புறப் படுத்துக் கொண்டு தூங்குபவர்கள்: கலகலவென்று பேசுவார்கள். நிறைய நண்பர்கள் உண்டு. யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. வேலைகளை நன்றாகச் செய்யும் திறன் பெற்றவர்.

* கைகளையும், கால்களையும் அகற்றி மல்லாந்து தூங்குபவர்கள்: பிறரை அடக்க முயல்பவர்கள். அதற்கு உதவும் பொருளை எல்லாம் தன் வசம் பெற விரும்புவர். எந்த முடிவும் சாதகமாகவே முடியும்.

* தலையணை போன்றவற்றை அணைத்துக் கொண்டு தூங்குபவர்கள்:   எல்லோரும் அன்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.

ஆண்கள் மனைவி மீது   அன்பாக இருப்பார்கள்.   பெண்களிடம்   பெண்மை மிகுந்து இருக்கும்.

இதில் நீங்கள் எந்த ரகம் பார்த்துக் கொள்ளுங்கள்.

நவ்தீப் – சுவாதி நடிக்கும் “லவ் பண்ணுங்க லைப் நல்லாருக்கும்”

நவ்தீப் -   சுவாதி நடிக்கும்

            “லவ் பண்ணுங்க லைப் நல்லாருக்கும்” 

ஆர்.பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.பி.பாலா தயாரிப்பில் ஐந்தாவது படமாக உருவாகிறது “லவ் பண்ணுங்க லைப் நல்லாருக்கும்” என்ற படம்.

இதில் நவ்தீப் கதாநாயகனாக நடிக்கிறார். அறிந்தும் அறியாமலும் படத்தின் வெற்றிக்கு பிறகு திருப்பு முனை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் என்று நம்புகிறார் நவ்தீப்.

சுப்ரமணியபுரம், வடகறி போன்ற படங்களில் நாயகி சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார்.

பாடல்கள்  -   நா.முத்துக்குமார், சினேகன், கானாபாலா.

எடிட்டிங்   -  சந்திரசேகர்.G.V.

வசனம்   -  பாலா.ஆர்

இசை   -  மகேஷ்சங்கர்

தயாரிப்பு  -  ஆர்.பி.பாலா

எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

இளமையான ஒரு காதல் கதை இது. சின்ன கதை! சுவாரஸ்யமான திரைக்கதையால் ரசிகர்களை திருப்தி படுத்த முடியும் என்கிற சூட்சமம் தெரிந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற மாதிரியான உணர்வை  இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை இந்த படமும் நிரூபிக்கும்.

ஒரு களம் மூன்று கதை என்கிற பாணியில் இத்திரைப்படத்தின் கதையோட்டம் நகரும்.

சமீபத்தில் இப்படத்திற்காக கானாபாலா எழுதி பாட

“ வாடா மச்சான் கில்லாடி

  வந்து நில்லு முன்னாடி

வாழ்க்கை ஒரு கண்ணாடி

வாழதேடா கண்மூடி ! என்ற பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் பாடலாக இது இருக்கும் என்கிறார் இயக்குனர் ராஜ்.

சும்மா இருந்தாலும் விடமாட்டாங்க போலிருக்கே!!! ராஜபக்சேவின் நண்பர் வீட்டு விழாவிற்கு செல்லும் விஜய்?

இப்போதெல்லாம் விஜய் படம் பிரச்னை இல்லாமல் வெளிவந்தால்தான் அதிசயம். இதில் கத்தியும் அடங்கும்.கத்தி படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமியில் இந்த படம் தயாரிப்பதாகவும், இல்லை அவரது தொழில் பார்ட்னர் தயாரிகிறார் என்றும் சொல்லப்பட்டன. அதற்கு தமிழர்களிடம் எதிர்ப்பும் எழுந்தவண்ணம் உள்ளன. விஜய் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது என்றும் கூறினார்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்.

அப்படியிருக்க இப்போது ஒரு செய்தி வந்த்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லபோகிறார். சூட்டிங்கிற்கு என்றால் பரவாயிலை.அவர் போவது அதற்கில்லை.ராஜபக்சேவின் பார்ட்னரும் கத்தி தயாரிப்பாளர்களில் ஒருவருமான லைக்கா புரொடக்சன் நிறுவனர் அல்லிராஜா வீட்டு விழாவிற்காக செல்லவிருப்பதாக கூறுகிறார்கள்.

அல்லிராஜாவின் தாயார் ஞானம் அம்மாளின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள விஜய்,சமந்தா உள்ளிட்ட கத்தி படக்குழுவினர் அனைவருமே அங்கு செல்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபட்சவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐங்கரன் விளக்கம் கொடுத்தாலும் அதனை ஏற்றுகொள்ள முடியவில்லை என்றே பலரும் தெரிவித்துவருகின்றனர்.

 இந்நிலையில் அவர்களது கும்ப விழாவிற்கு வேறு செல்கிறார்கள்.இப்போதுதான் அந்த பிரச்னை கொஞ்சம் அடங்கியுள்ள சூழ்நிலையில் இந்த செய்தி தமிழர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது. நம்ம ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க “சும்மா
இருக்குற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி”னு அது மாதிரி அடங்கியிருக்கும் பிரச்னையை இவர்களே கிளப்பிவிடுவார்கள் போலிருக்கே!!!

பார்ப்போம் இதற்கு என்ன விளக்கம் கூறுகிறார்கள் என்று.

ரம்ஜான் பண்டிகை ரிலீஸில் தந்தை-மகன் மோதும் அதிசயம்!!

ஒரே நாளில் தந்தை நடித்த படமும், மகன் நடித்த படமும் வெளியாகி நேருக்கு நேர் மோத இருக்கிறது. என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த மோதல் நடைபெறவிருப்பது மலையாள திரைப்பட உலகில்! சலாம் பப்பு இயக்கத்தில், மம்முட்டி நடித்திருக்கும் ‘மங்கிலிஷ்’ படம் ராம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதே நாளில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து, லால்ஜோஸ் இயக்கியிருக்கும் ’விக்ரமாதித்யன்’ படமும் ரிலீசாகிறது. இந்த இரண்டு படங்களையும் இதன் தயாரிப்பாளர்கள் ரம்ஜான் தினத்தன்று ஒரே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பது மல்லுவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

இதுதவிர திலீப் நடித்துள்ள ‘அவதாரம்’ படமும் அன்றைய தினம் தான் ரிலீசாகிறது. திலீப் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் வெற்றிகளை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குனர் ஜோஷி. கூடவே லால் ஜூனியர் (நடிகர் லாலின் மகன்) இயக்கியுள்ள ‘ஹாய்.. ஐ ஆம் டோனி’ படமும் இந்த பந்தயத்தில் சேர்ந்துகொள்ள கேரளாவில் களைகட்டப் போகிறது ரம்ஜான்.