Saturday, 12 July 2014

இளையராஜாவின் 1001-ஆவது படத்தில் அரவிந்தசாமி!

இளையராஜா இசை அமைக்கும் 1001-ஆவது படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அரவிந்தசாமி. பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கும் இப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த டீஸரில் அரவிந்தசாமி ஏற்றுள்ள பிராமணர் வேடத்தை பார்க்கும்போதே இப்படம் ஏதோ ஒரு வித்தியாசமான கதையை சொல்ல வருகிறது என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம்.

ஹர்ஷத் தேவ் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை மணிகண்டன் ஏற்றுள்ளார். இளையராஜாவின் இசையில் ஒரு பாடலுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் டீஸர் இளையராஜா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரும் என்பது சந்தேகமில்லை.

50 நாளில் 25 கோடி வசூலை அள்ளியது ‘பெங்களூர் டேய்ஸ்!

மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் மே மாதம் வெளியான ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படம் வெற்றிகரமாக 50வது நாளை தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தை இன்றுவரை கேரள இளைஞர் கூட்டமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது.. அவ்வளவு ஏன் சென்னையில் உள்ள ஈகா தியேட்டரிலும் கூட தொடர்ந்து 50 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு கிட்டத்தட்ட இந்தப்படத்திற்கும் கிடைத்திருக்கிறது.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நஸ்ரியா.. இவர் தவிர மரியான்’ பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் என இன்னும் மூன்று ஹீரோயின்களும் உண்டு. இப்போது இந்தப்படத்தின் வெற்றிதான் பிவிபி நிறுவனத்தை இந்தப்படத்தின் ‘அனைத்திந்திய ரீமேக் உரிமை’யை வாங்கிஇருப்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியை பிரிந்த நேரம் ஹிரித்திக் ரோஷனுக்கு அதிர்ஷ்டம்!

இந்திய சினிமாவின் மிஸ்டர்.ஹேண்ட்சம் என்றால் ஹிரித்திக் ரோஷன் தான். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

தற்போது தன் மனைவியை பிரிந்து மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தார். இந்நிலையில் இந்த கசப்பான சம்பவத்தையெல்லாம் மறந்து படத்தில் கவனம் செலுத்திவருகிறார்.

இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம், ஆசியா கண்டத்திலேயே அதிக சம்பளம் வாங்குவது இவர் தானாம்.


விஜய்யின் நன்றியை மறந்த த்ரிஷா!

தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது போல. அதை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை த்ரிஷா.

தமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் த்ரிஷா. அங்கு சென்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு, அவருக்கு பிடித்த நடிகர் பட்டியலில் விஜய்க்கு 5வது இடத்தை கொடுத்திருக்கிறார்.

ஆனால் விஜய்யின் கில்லி, திருப்பாச்சி போன்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஒரே காரணத்தால் தான் த்ரிஷா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


திருட்டு விசிடி கண்டு கொதித்தெழுந்த விஷால்..!

காரைக்குடியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவது நமக்கு தெரியும்.

இதனால் காரைக்குடியில் தங்கி இருந்த விஷால், நேற்று அங்குள்ள கேபிள் டிவிக்களில் சமீபத்தில் வெளியான உன் சமையல் அறையில், வடகறி போன்ற படங்கள் ஒளிபரப்பாவதை கண்டுள்ளார்.

சரியான அனுமதி பெறாமல் படங்கள் ஒளிபரப்பாவதை கண்ட விஷால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஷாலின் புகாரின் பேரில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

சூப்பர் ஜி....