Friday, 15 August 2014

உன் மொழி தமிழ் மொழியென்று !!!



தடுக்கி விழுந்தால் மட்டும்
 அ...ஆ...
சிரிக்கும்போது மட்டும்
 இ..ஈ..

சூடு பட்டால் மட்டும்
 உ...ஊ..

அதட்டும்போது மட்டும்
 எ..ஏ...

ஐயத்தின்போதுமட்டும்
 ஐ...

ஆச்சரியத்தின் போது மட்டும்
 ஒ...ஓ...

வக்கணையின்
 போது மட்டும்
 ஒள...

விக்கலின்போது மட்டும்
 ஃ


 என்று தமிழ் பேசி மற்ற
 நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம்
 மறக்காமல் சொல்வோம்
 உன் மொழி தமிழ் மொழியென்று !!!

காக்கி சட்டையா? ரொமான்ஸ்ஸா? குழப்பத்தில் இருக்கும் விஜய்!

ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ.

தனது அடுத்த படத்திற்காக எப்படியோ விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை சொல்லியிருக்கிறார் அட்லீ. பொதுவாக ஒரு கதையை கேட்டு விட்டு பல முறை யோசித்த பிறகே ஓகே சொல்வார் விஜய்.

ஆனால் அட்லீயிடம் நாம் சேர்ந்து படம் பண்றோம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனால் படுவேகமாக மற்ற வேலைகளை கவனித்து வந்த அட்லீ இப்போது வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்.

ஏனென்றால் நடுவில் சிம்புதேவன் சொல்லிய காதல் கதையும் விஜய்யை டிஸ்டிரப் பண்ணியிருக்கு.

விஜய் இதில் யாருக்கு முதல் சாய்ஸ் கொடுப்பார் என்பதுதான் இப்போதைய ஹாட் டாப்பிக்.

ரசிகர்களே உங்களின் விருப்பம் காக்கியா? காதலா? யோசிங்க….