Sunday, 13 July 2014

ஜூலை 22 முதல் அஞ்சான் பாடல்கள் !

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா , சமந்தா நடித்து ஆகஸ்டு 15ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'அஞ்சான்' .

படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது யுவன் ஷங்கர் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் வரும் ஜூலை மாதம் 22ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் இசையை 'உலக நாயகன்' கமலஹாசன் வெளியிட உள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவில்  திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் முதல் பாடலை, மதன் கார்க்கியும் மற்ற பாடல்களை நா.முத்துக்குமாரும் எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment