Saturday, 26 July 2014

30 முறை காதலில் தோற்ற ‘கழுகு’ கிருஷ்ணா!

கழுகு’ கிருஷ்ணா நடித்துவரும் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவின் தம்பியாக, இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார் விஜய் டிவி புகழ் மா.கா.பா. இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார்  ராஜமோகன்.

படம் பற்றி இயக்குனர் ராஜமோகனிடம் கேட்டால், “14 முறை தோற்ற கஜினி முகமதுவை மிஞ்சி 30 முறை காதலில் தோற்ற வானவராயன் (கிருஷ்ணா),  யாருமே என்னை காதலிக்கவில்லையே என்று ஏங்கும் வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்), மோனல் கஜாரின் காதல்,  வயதான சௌகார்ஜானகியின் அழிச்சாட்டியம் என காமெடி கலாட்டா தான் இந்த படம்” சிம்பிளாக இப்படி சொல்கிறார் ராஜமோகன்..

சுருக்கமாக சொன்னால் இது நம்ம வீட்டில் நடந்த, நடக்கும், நமக்கு அடுத்த வீட்டில் நடந்து கொண்டிருக்கும் கதையாம். இந்தப்படத்தை பார்த்த டாக்டர் எல்.சிவபாலன் அவர்கள் படத்தின் முழு உரிமையையும் வாங்கி விரைவில் வெளியிடுகிறார்

No comments:

Post a Comment