Tuesday, 15 July 2014

அஜித், விஜய்யின் திருட்டு விசிடி மதிப்பு 4 கோடி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழ் திரையுலகில் சமீப காலமாக திருட்டு விசிடிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் நடிகர் விஷாலே நேரடியாக சென்று புதுப்படம் ஒளிப்பரப்பு செய்த தொலைக்காட்சியை பிடித்து போலிஸில் புகார் கொடுத்தார்.

தற்போது இதை தடுக்கும் விதத்தில் இயக்குனர் சேரன் ஆரம்பித்திருப்பது C2H. இதன் மூலம் சின்ன பட்ஜெட் படங்களை, அதன் உரிமம் பெற்று இந்நிறுவனத்தில் கீழ் வெளியிடப்படும்.

இவ்விழாவில் பேசிய சேரன் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். நேரடியாக சென்று விற்பனையாளர் ஒருவரிடம் கேட்டதற்கு விஜய் , அஜித் படம் ரிலிஸ் என்றால் 80 லட்சம் சிடிக்கள் விற்கும், 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று கூறினார்களாம்.


No comments:

Post a Comment