Monday, 14 July 2014

ஆம்பள விஷால்..?

பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பான 'பூஜை' படத்தில் நடித்து வருகிறார்.

விஷாலுடன் , சத்யராஜ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்த படம் முடிந்தவுடன், சுந்தர் சி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அறிந்ததே.

படத்திற்கு 'ஆம்பள' எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் கதையை கேட்ட விஷால் உடனே ஒப்புக் கொண்டாராம். காரணம் படத்தின் பெயரைப் போன்றே கதையும் ஆக்‌ஷன் படமாம்.

இந்த படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க இருக்கிறார். சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்த படத்திலும் ஒரு நடிகர் பட்டாளம் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்திற்கு மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment