Friday, 18 July 2014

பத்து எண்றதுக்குள்ள படத்தின் அப்டேட்!

ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தில் நடித்த விக்ரம், அடுத்து நடித்து வரும் அடுத்த படம் 'பத்து எண்றதுக்குள்ள'. விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தின் தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.

விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 23ம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. சென்னையைத் தொடர்ந்து நான்காம் கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சிக்கிம் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment