Wednesday, 23 July 2014

விஜய்க்காக பாலிவுட் பட வாய்ப்பை தவிர்த்த நட்ராஜ்!

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் நட்ராஜ். ஆனால் அப்படி சொல்வதை விட முத்துக்கு முத்தாக, மிளகா, சதுரங்க வேட்டை படத்தின் கதாநாயகன் என்றால் அனைவருக்கும் தெரியும்.

இவர் ஹிந்தியில் பல முன்னணி இயக்குனர்களின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இவர் தான் ஒளிப்பதிவாளர்.

ஆனால் இந்த படத்திற்காக தனக்கு வந்த பாலிவுட் படங்களின் வாய்ப்புகளை தவிர்த்துள்ளார். இவர் விஜய் நடித்த யூத் படத்தில் இதற்கு முன்பு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment