Tuesday, 29 July 2014

கத்தி இசை வெளியீட்டு விழாவில் விஜய், சமந்தா நடனம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள ஷெட்யூல்தான் கடைசி ஷெட்யூல். சுமார் இருபது நாட்கள் தொடர்ச்சியாய் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தீபாவளி பண்டிகை அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்த உடன் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை தொடங்கி ஒரே மூச்சில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை லண்டனில் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை தமிழ் டிவி சேனல் ஒன்று பல கோடிகள் கொடுத்து வாங்கி உள்ளது. செப்டம்பர் 20-ஆம் தேதி லண்டனில் நடக்க உள்ள இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கத்தி படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் லண்டன் செல்ல இருக்கிறார்கள்.

இந்த விழாவில் கத்தி படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு விழா மேடையில் படத்தில் நடித்த கலைஞர்கள் நடனம் ஆட இருக்கிறார்கள். அதாவது, விஜய் உடன் இணைந்து சமந்தாவும், கத்தி படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் நடனம் ஆட இருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment