Thursday, 14 August 2014

இதோ..! பவர் ஸ்டாரின் அடுத்த தொல்லை ஆரம்பமாகிறது!

லத்திகா படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அதையடுத்து, அவர் ஆனந்த தொல்லை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அவரது அலம்பலைப் பார்த்த சந்தானம், அவரைத்தேடிப்பிடித்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைத்தார்.

விளைவு, அந்த படத்தில் இருந்து பவர்ஸ்டாரின் மார்க்கெட் சூடுபிடித்தது. மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமான அவர் சந்தானத்துக்கே போட்டியாக வந்து விடுவார் என்றுகூட கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து பண மோசடியில் சிக்கிய பவர், சிறைக்கம்பிகளை எண்ணச்சென்று விட்டதால், வேகமாக வளர்ந்த அவரது மார்க்கெட் சரிந்தது.

அதன்பிறகு வெளியே வந்த அவர், மீண்டும் மார்க்கெட்டை உயர்த்த கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார். அதோடு, சினிமா உள்பட பள்ளி விழாக்களுக்கு அழைத்தாலும் சென்று அங்குள்ள ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்று வரு அவர், அடுத்து தான் நாயகனாக நடித்து கிடப்பில் கிடக்கும் ஆனந்த தொல்லை படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

ஒருவேளை இந்த படத்தை வாங்குதற்கு விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை என்றால், தானே தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார் பவர்ஸ்டார்.

No comments:

Post a Comment