Thursday, 21 August 2014

கத்தி படத்தை விலைபேசும் விஜய் – அதிர்ச்சியில் லைக்கா நிறுவனம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் படம் கத்தி. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

ராஜபக்சேவின் நண்பரான லைகா ப்ரொடக்ஷ்ன் நிறுவனர் ஏ.சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என தமிழ் அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரச்சனையை சுமூகமாக முடிக்க விஜய்யே களம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இப்படத்தின் ஒரே பிரச்சனை தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்பாளரிடம் பேசி வேறொரு தயாரிப்பாளரிடம் படத்தை கைமாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் கத்தியை வேறு யாரும் விலைக்கு வாங்க தயங்கினால் விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்தே படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment