Tuesday, 5 August 2014

கத்தி குறித்து தொல்.திருமாவளவன் முடிவு! முருகதாஸ் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவின் பெருமைகளை இந்திய அளவில் கொண்டு சென்றவர் முருகதாஸ். இவர் தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இந்தப்படத்தை ராஜபக்சே நண்பர் தான் தயாரிக்கிறார் என்று வதந்தி பரவ, கத்தி படத்தை வெளியிடக் கூடாது என்று சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து முருகதாஸ் விளக்கம் தந்து வருகிறார்.

இதில் விடுதலை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்த போது, ’ இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் என்று தெரிந்தால் நாங்கள் ஒரு போதும் இப்படத்திற்கு ஆதரவு தர மாட்டோம் மேலும் படத்தை வெளியிடவும் தடை செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment