Wednesday, 13 August 2014

சரத்குமார் செய்த ஊழல்! அம்பலப்படுத்த போகிறாரா விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் சரத்குமார். இந்நிலையில் வரும் ஞாயிறு அன்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடக்கயிருக்கிறது.

ஏற்கனவே விஷால் தலைமையில் ஒரு இளைஞர் அணி உருவாகியிருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் , அன்றைய தினம் நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கண்டிப்பாக விஷால், இதுவரை நடந்த ஊழல் விவகாரத்தையும், நடிகர் சங்க தலைவருக்கான மறு தேர்தலையும் நடத்த சொல்லி வலியுறுத்துவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment