Wednesday, 24 September 2014

கோயல் கட்டலாம..? வேணாமா..? நயன்தாரா காரசார விளக்கம்..!

தமிழ் ரசிகர்கள் குஷ்புக்கு ஏற்கனவே கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்தினர். அக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன. நக்மாவுக்கும் கோவில் கட்டினர். இது போல் நயன்தாராவுக்கு கோவில் கட்ட தற்போது ஏற்பாடுகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்கள் இணைந்து இக்கோவிலை கட்டிடுகிறார்கள். இடம் தேர்வு நடக்கிறது.

கோவில் கட்டுவதற்கு நயன்தாரா விடமும், அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நயன்தாரா இதற்கு சம்மதிக்க வில்லை. கோவில் கட்ட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நயன்தாரா கூறும்போது:–

ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு போதுமானது. இதற்கு மேல் எதையும் நான் எதிர் பார்க்க வில்லை.

எனக்கு கோவில் கட்டும் செயலில் ஈடுபடாதீர்கள் என் வேண்டுகோளையும் மீறி கோவில் கட்டினால் அது மன அமைதியை கெடுப்பதாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு, திரையுலகில் நயன்தாரா தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கிறார். புது கதாநாயகிகளை வரத்து அவர் மார்க் கெட்டை அசைக்க வில்லை.

No comments:

Post a Comment