Wednesday, 3 September 2014

நண்பருக்காக உதவி செய்த விஷால்!

திரையுலகில் எல்லோரிடத்திலும் போட்டி, பொறாமை மட்டும் தான் உள்ளது. ஆனால் இதை மாற்றும் விதத்தில் நம் இளம் தலைமுறை நடிகர்கள் பலர் நட்போடு பழகி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக விஷால் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் மட்டுமின்றி, தன் நட்பு வட்டார நடிகர்களுக்கும் உதவ கூடியவர். சமீபத்தில் இவர் நடித்த பாண்டியநாடு படத்தில் விக்ராந்திற்கு முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை கொடுத்தார்.

தற்போது அதைவிட ஒருபடி மேலே சென்று சுசீந்திரன் இயக்கதில் விஷ்ணு நடித்திருக்கும் படம் ஜீவா. இப்படத்தை விஷால் தன் சொந்த பேனரான ‘விஷால் ஃபிலிம் பேக்ட்ரி’ சார்பில் வெளியிடவுள்ளாராம்.

No comments:

Post a Comment