Monday, 22 September 2014

விதார்த்துக்கு திருப்புமுனையை கொடுக்க வரும் காடு

விதார்த் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் ‘ஆள்’. இப்படத்தில் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த விதார்த், மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘காடு’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்டாலின் ராமலிங்கம் என்பவர் இயக்குகிறார். விதார்த்துக்கு ஜோடியாக கேரளத்து வரவான சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். அந்த மலைக் கிராமத்தில் இருந்த வீடுகளுடன் சில வீடுகளை செட் போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இந்த படம் பற்றி விதார்த் கூறும்போது, இந்த படம் என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்கும். என்னுடைய எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்த ரசிகர்கள் இந்த படத்துக்கும் ஆதரவு தரவேண்டும் என்று கூறினார். இப்படத்தை சக்ரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நந்து தயாரித்திருக்கிறார். கே இசையமைக்கிறார். 

No comments:

Post a Comment