Friday, 12 September 2014

கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய ருசிகர தகவல்

ஜிகர்தண்டா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் என்ன என்பது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.

ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ்க்கு பிறகு அவர் அளித்த சில பேட்டியில் "என்னுடைய அடுத்த படம் முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட ஒரு படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தற்போது இயக்குனர் தரப்பிலிருந்து ஒரு புது செய்தி வந்துள்ளது, அதாவது அவர் இயக்க போகும் அடுத்த படத்தின் பெயர் இறைவி என்றும் இதை தவிர வேறு சில தலைப்புகளும் பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தை சி.வி குமார் தயாரிக்க உள்ளதாகவும் ஏறக்குறைய பாபி சிம்ஹா தான் ஹீரோவாக நடிப்பார் என தகவல் கசிந்து உள்ளது.

No comments:

Post a Comment