Wednesday, 3 September 2014

விஸ்வரூபத்தை தொடர்ந்து யான் படத்திற்கும் பிரச்சனை?

கடந்த வருடம் கமலின் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்தது. இதற்கு குறிப்பிட்ட ஒரு சமுகத்தினரை மட்டும் தீவிரவாதி போல் சித்தரிப்பதாக காரணம் கூறினர்.

இதை தொடர்ந்து அந்த காட்சிகளையெல்லாம் நீக்கிய பின் தான் படம் திரைக்கு வந்தது. தற்போது ஜீவா நடிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் படம் யான்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. இதில் சில தீவிரவாத அமைப்புகளை காட்டுவது போல் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. இதனால் இது குறித்து யான் மீது எதிர்ப்பு வருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment