Tuesday, 2 September 2014

பொறியாளன் கதை வேலையில்லா பட்டதாரி படத்திலிருந்து எடுக்கப்பட்டதா?

வேலையில்லா பட்டதாரி படத்துக்கு பிறகு சிவில் இன்ஜினியர் வைத்து இந்த வாரம் வெளியாக உள்ள படம் பொறியாளன். இப்படத்தை கிராஸ் ரூட் நிறுவனம் சார்பில் வெற்றிமாறன் தயாரிக்க வேந்தர் மூவீஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது .

'உதயம் NH4' என்ற படத்தை இயக்கிய மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத படத்தை இயக்கியுள்ளார் தாணுகுமார்.

ஹரிஷ் கல்யாண், ஆனந்தி நடித்த இப்படத்தின் கதை குறித்து சமீபத்தில் வெற்றிமாறன் பேசினார்.

ஒரு சிவில் இன்ஜினீயர் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதே 'பொறியாளன்' கதை என வெற்றிமாறன் குறிப்பிட்டார்.

இதே கதைக்களத்தில் சமீபத்தில் ஹிட்டடித்தது தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி'. தற்போது அதே பாணியிலான கதையா? என சினிமா வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கான பதில் செப்டம்பர் 5ம் தேதி தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment