Saturday, 2 August 2014

பார்ட்டிக்கு போறீங்களா? அப்ப இத படிங்க..?

பார்ட்டிக்கு போறதுக்கு முன்னாடி நம்ம முகத்துக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பொருந்தும்னு பார்க்கணும். பார்ட்டிக்கு போறப்ப, முன் பக்க முடி கலையாம இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். பார்ட்டிக்கு போகும் போது மிதமான காம்பேக்ட் பவுடர், ஐ லைனர், காஜல், லிப்ஸ்டிக் அவசியம்.

இடத்துக்கும், பார்ட்டிக்கும் ஏத்தபடி, இதையே இன்னும் அதிகமா போட்டுக்கலாம். டிரெடிஷனல் பார்ட்டின்னா பொட்டு வச்சுக்கலாம். வெஸ்டர்ன் பார்ட்டிக்கு தேவையில்லை. நகங்களை அழகா ஷேப் பண்ணி, மேட்ச்சிங் நெயில் பாலீஷ் போடணும்.

அது பிடிக்காதவங்க, நகங்களை சின்னதா வெட்டி, நகங்களோட நிறத்துலயே நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ளலாம். சேலை கட்டறவங்களா இருந்தா, சேலையை மட்டுமில்லாம, உள் பாவாடையையும் இஸ்திரி செய்துதான் கட்டணும்.

மெல்லிசான மெட்டீரியல்ல, ஃபிஷ் கட் உள் பாவாடைகள், சேலை கட்டறவங்களோட உடம்பை அழகான ஷேப்ல காட்டும். குண்டானவங்களுக்கு மெல்லிசான, சாஃப்ட் சில்க் மற்றும் காட்டன் புடவைகள் அழகா இருக்கும்.

சல்வார் போடறவங்களா இருந்தா, அனார்கலி மாடலை தேர்ந்தெடுக்கலாம். ‘ஹை நெக்’, பேன்ட் அடில நிறைய சுருக்கம், கண்ணாடி மாதிரி துப்பட்டா... இதுதான் இப்ப ஃபேஷன். துப்பட்டாவை கழுத்தோட ஒட்டி போடணும். அதுக்குக் கீழேதான் நகைகள் தெரியணும்.

பெரிய மோதிரம் போடறது இப்ப ரொம்பப் பிரபலம். ஒரு கைல வாட்ச், இன்னொரு கைல வளையல் போடலாம். ரெண்டு கைகளுக்கும் வளையல் போடறது ஹோம்லியான தோற்றத்தைத் தரும். லேசா ஹீல்ஸ் வச்ச செருப்புகள், ஒருத்தரோட தோற்றத்தையே மாத்திக் காட்டும்.

பார்த்துப் பார்த்து டிரெஸ்சையும் மேக்கப்பையும் பண்ணிட்டு, செருப்பு விஷயத்துல அலட்சியம் கூடாது. பார்ட்டிக்குனு தனியா சில செட் ஸ்பெஷல் செருப்புகள் வச்சிருக்கிறது அவசியம். நீளமான கை வச்ச டிரெஸ், டார்க் நிற நெயில் பாலீஷ், பளபள கல் வச்ச நகைகள், மாட்டல், பெரிய பொட்டு... இதெல்லாம் பார்ட்டிக்கு வேண்டவே வேண்டாம்.

ஆயில் சருமத்திற்கான மிக எளிமையான அழகு குறிப்புகள்...!

* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்புக்கு பதிலாக கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.

பவுத்ரம் என்ற நோயின் முழு தகவல் தெரிந்துகொள்ளுங்கள்?

மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் ‘ஆனல் கிளான்ட்‘ எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன.

அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின்சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘பைப்‘ போன்று உருவாகிவிடும். மலம் கழிக்கும்போது அந்த ‘பைப்‘க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் உருவாகி வெடிக்கும்.

அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். மூல நோய், ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். ஆண், பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.

ராஜமவுளியை வருத்தப்பட வைத்த சூர்யா!

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுளி. இவர் தற்போது பாஹுபலி படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இப்படம் தான் இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் படம் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில் அஞ்சான் படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது, இதில் சிறப்பு விருந்தினராக ராஜமவுளி கலந்து கொண்டார்.

இதில் பேசிய சூர்யா ‘சில வருடங்களுக்கு முன் ராஜமவுளி ஒரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன். என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுவாகத்தான் இருக்கும், அதற்காக பாஹுபலி படத்தில் ஒரு காட்சிகள் நடிக்க அழைத்தாலும் நான் ரெடி’ என்று தெரிவித்துள்ளார்

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை எந்த சாதனமும் இன்றி பகிர்வது எப்படி ?

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.

இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.

இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்

Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

http://virtualrouter.codeplex.com
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்

அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.

3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு குறைந்த ‘சரபம்’ திரைவிமர்சனம்...!

தொழிலதிபரான நரேனை, சாப்ட்வேர் என்ஜினீயரான நவீன் சந்திரா தொழில் நிமித்தமாக சந்திக்கிறார். அப்போது நவீன் சொல்லும் புராஜெக்டை வெவ்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கிறார் நரேன். இதனால், கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார் நவீன். கோபம் சற்றும் தணியாத நிலையில், நரேன் வீட்டுக்கு சென்று பிரச்சினை செய்ய முடிவெடுத்து அங்கு செல்கிறார்.

அப்போது நரேனின் வீட்டுக்குள் இருந்து நாயகி சலோனி வெளியே வருகிறாள். அவளைப் பார்த்ததும் அவளுடன் பேச்சுக் கொடுத்துவிட்டு, இருவரும் காரில் ஏறி நவீனின் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு சென்றதும் சலோனி நரேனின் மகள் என்பதும், அவள் போதைக்கு அடிமையானவள் என்பது நவீனுக்கு தெரிய வருகிறது. அவள் தனது கைச்செலவுக்கு அப்பா நரேன் பணம் தர மறுக்கிறார் என்று நவீனிடம் கூறுகிறாள். நவீனும், நரேன் தன்னுடைய புராஜெக்டை நிராகரித்து விட்டதால் தனக்கு வரவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று அவளிடம் கூறுகிறான்.

இருவருக்கும் பணம் தேவைப்படுவதால், நரேனிடமிருக்கும் பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என திட்டமிடுகிறார்கள். சலோனியை கடத்திவிட்டதாக கூறி நரேனிடம் பணம் பறிக்கலாம் என முடிவு செய்து, அதன்படி, நரேனிடம் பேசி அவரிடமிருந்து 30 கோடி ரூபாயை பெற்றுவிடுகிறார் நவீன்.

இருவருக்கும் வேண்டிய பணம் கிடைத்துவிட்டதால், சலோனி வெளிநாட்டில் சென்று செட்டிலாகிவிட முடிவெடுக்கிறார். பணத்தை வாங்கிய பிறகு சலோனியை அவளது வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டில் வந்து படுத்து தூங்கி விடுகிறார் நவீன்.  மறுநாள் விழித்துப் பார்க்கும்போது டிவியில் சலோனி கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக செய்தியை பார்க்கிறான். அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் நவீனுக்கு, இறந்து போன சலோனியும், நரேனும் அவன் வீட்டிற்கு வந்து மேலும் அதிர்ச்சியை கொடுக்கின்றனர்.

இறந்துபோன சலோனி எப்படி மறுபடியும் வந்தாள்? என்பதை மீதிக்கதையாக சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸாக வைத்து படத்தை சொல்லியிருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நவீன் சந்திராவிற்கு படத்தில் வழக்கமான ஹீரோவிற்குண்டான ஹீரோயிச காட்சிகள் இல்லை. ஏமாற்றப்பட்டு வேதனைப்படும் காட்சிகளே அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சலோனி லுத்ராவிற்கு தமிழில் இது முதல் படம். முதல் படத்திலேயே இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார். இப்படத்தில் சிகரெட் பிடிப்பது, போதைப் பொருட்கள் உபயோகிப்பது என்று துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தில் திருப்பங்கள் மேல் திருப்பங்கள் இருந்தாலும் இவருடைய நடிப்பு மனதில் நிற்காமல் செல்கிறது.

பெரும்பாலான படங்களில் நேர்மையாகவும், பொறுப்பான கதாபாத்திரத்திலும் தோன்றிய நரேன், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். வேட்டி சட்டையில் பார்த்த இவரை கோட் சூட்டில் படம் முழுக்க பார்க்க முடிகிறது.

படத்தில் முக்கியமாக நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே படம் முழுக்க நகர்த்தி சென்ற இயக்குனர் அருண் மோகன், இடைவேளைக்குப் பிறகு அந்த நான்கு கதாபாத்திரங்களுக்குள் திருப்பங்களை வைத்து காட்சிகளை திரும்ப திரும்ப வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகமாக கதாபாத்திரங்களை வைத்திருந்தால் படத்தை இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். பிரிட்டோ மைக்கேல்லின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்…

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவை அனைத்தும் அன்றாட பழக்கவழக்கங்களுடன் தொடர்பில் இருப்பவை.

வறட்சியான வாய் வாய் துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொதுவாக இந்த நிலையானது வாயின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும். இப்படி வறட்சி அடைவதால், வாயில் உள்ள எச்சில் வறண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் மூக்கின் வழியாக சுவாசித்துப் பழகுங்கள்.

சரியான மௌத் வாஷ் மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் சரியான மௌத் வாஷ் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் குறைவாக உள்ள மௌத் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே கடுமையான துர்நாற்றத்தை வீசும்.

மூக்கு ஒழுகல் சளி அல்லது மூக்கு ஒழுகல் இருந்தால், மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாமல், வாயின் வழியாக சுவாசிப்போம். மேலும் காய்ச்சல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும்.

காலை உணவு பெரும்பாலானோர் காலையில் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று காலை உணவை உட்கொள்ளாமல் கூட செல்வார்கள். ஆனால் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.

கார்போஹைட்ரேட் குறைவான உணவு டயட் என்ற பெயரில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே சரியான முறையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து வாருங்கள்.

ஆல்கஹால் சாதாரணமாக ஆல்கஹால் பருகினாலேயே நாற்றம் வீசும். ஏனெனில் ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது. ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்துங்கள்.

உணவில் சேர்க்கும் பொருட்கள் உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால் கூட, வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை உட்கொண்ட பின்னர் புதினா அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

தண்ணீர் குடியுங்கள் முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்படி போதிய அளவில் தண்ணீரை குடிக்காமல் இருந்தால், அது கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீரானது வாய் வறட்சியை தடுப்பதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும்.

கல்லீரல் கோளாறு இன்னொரு காரணம் என்னவென்றால், கல்லீரலில் பிரச்சனை இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாயை நன்கு பராமரித்து வந்து, மேற்கூறியவற்றை பின்பற்றிய பின்னரும் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது.