Monday, 11 August 2014

'ஐ' படத்துக்கு ஆப்பு வைத்த ஆசாமி..!

வந்தவரைக்கும் லாபம் என்ற மனநிலையுடன் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததால் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவன அதிபர் ரவிச்சந்திரனால் திட்டமிட்டபடி எந்தப் படத்தையும் சரியான நேரத்துக்கு வெளியிடமுடியவில்லை. அவரது தவறான முடிவின் காரணமாக 'திருமணம் எனும் நிக்காஹா' படம் மிகத் தாமதமாக...

வெளியாகி தோல்வி அடைந்தது. அடுத்து அவரது கையில் இருக்கும் 'பூலோகம்' படத்தின் மீது அவருக்கே நம்பிக்கையில்லையாம். இந்த நிலையில் நம்முடைய படமும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று போராடும், இயக்குநர் ஷங்கர், இந்தப் படத்தை ரிலையன்ஸ் அல்லது வேறொரு மும்பை நிறுவனத்திடம் கைமாற்றிக் கொடுத்துவிடுங்கள் அதுபற்றி அந்நிறுவனங்களிடம் நானே பேசுகிறேன் என்றெல்லாம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவியிடம் சொல்லியிருக்கிறார்.

முதலில் இருக்கிற சிக்கல்களுக்கு அப்படிப் படத்தைக் கைமாற்றிக்கொடுத்துவிட்டு நாலுகாசையும் பார்த்துக்கொண்டு நிம்மதியாகவும் இருக்கலாம் என்று நினைத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதுபற்றி யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னாராம். அதன் பின், நம் கைவசம் இருக்கும் ஒரே பெரிய படம் இதுதான், இந்தப் படம் நிச்சயமாகப் பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படமாக இருக்கும்.

அப்படிப்பட்ட படத்தை இப்போதைய சிக்கல்களிலிருந்து மீளவேண்டும் என்பதற்காக இன்னொருவரிடம் கொடுத்துவிட்டால் இதன் மூலம் கிடைக்கும் பெருமை கிடைக்காமல் போகும். அது மட்டுமின்றி இப்போது எவ்வளவு கசப்புடன் இருந்தாலும் படம் வெளியாகி வெற்றி என்றால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறும்.

படம் வெற்றி பெற்ற நேரத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் நாயகன் விக்ரம் ஆகிய இருவரில் யாரோ ஒருவருடைய சம்மதம் கிடைத்தாலும் அடுத்து ஒரு படத்தைத் தொடங்க வசதியாக இருக்கும், படத்தை இப்போதே கொடுத்துவிட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று யோசித்த ஆஸ்கர் ரவி, இந்தப் படத்தை நானே வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதனால் ஷங்கர் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

'பாகுபலி' என்கிற 'மகாபலி'யில் அப்படி என்னதான் நடக்குது..! பில்டப் ஓவராதான் போவுது..!

'நான் ஈ' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக்

கடந்திருக்கிறது. இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில ஹிந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால், தமிழ், தெலுங்கைப் பொறுத்தவரை ஒரு படத்தை ஏறக்குறைய ஒரு வருடத்திற்குள் எடுத்து முடித்து வெளியிட்டு விடுவார்கள்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பமான 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக் கடந்தும் நடந்து வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சரித்திரக் காலப் படம் என்பதால் பிரம்மாண்டமான அரங்க அமைப்பு, ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் என இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத அளவில் படம் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் எடிட்டிங், மற்ற கிராபிக்ஸ் வேலைகள் அனைத்துமே படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததுமே உடனுக்குடன் நடந்து வருகிறது. இந்தப் படம் வெளிவந்த பிறகு தெலுங்குத் திரையுலகத்தின் இமேஜ் உலக அளவில் அதிகமாக உயரும் என தெலுங்குத் திரைப்படத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

அவ்வப்போது படத்தைப் பற்றிய 'மேக்கிங்' வீடியோவையும் வெளியிட்டு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள். இப்படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாகிறது.

மொட்டைக்கு மொட்டைப் போட்ட நம்ம ஊரு கில்லாடிகள்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் என்று பிஸியாக இருக்கும் பிரபல நகைச்சுவை நடிகர் பாஸ்கியின் பெயரில் போலியான டிவிட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இதனை அறிந்த பாஸ்கி, தனது பெயரில் போலியான டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் சில தவறான கருத்துக்களை வெளியிட்டு எனது நற்பெயருக்கு கலங்கத்தை சிலர் உண்டாக்கி வருகிறார்கள், என்று கூறிய
அவர், கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ள எனது நற்பெயருக்கு கலங்கும் ஏற்படுத்தும், இந்த போலியான டிவிட்டர் பக்கம் குறித்து தான், சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்க போகிறேன்ம், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவைக்குப் போனால் 'தூ' வென்று துப்பாதீர்கள்.. ரூ. 100 நட்டமாயிடும்..!

கோவை நகரில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. நகரைச் சுத்தமாக வைத்திருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேயர் பொறுப்பு வகிக்கும் லீலாவதி உன்னி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகரை தூய்மையாக, சுத்தமாக வைத்திருக்கத் தேவையான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மூச்சா போனா ரூ. 100 அபராதம்.. துப்பினாலும் 100 அதன்படி பொது இடத்தில் குப்பை கொட்டுதல், சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புதல், மலம் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

நடு ரோட்டில் "கெள பாத்" எடுத்தால் ரூ. 500! பறவைகளின் தீனி கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ரூ.100, மாடுகளை நடுரோட்டில் குளிப்பாட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

வாகனங்களைக் கழுவினால் ரூ. 500 மோட்டார் சைக்கிள்களை கழுவினால் ரூ.500, வேன், கார்களை கழுவினால் ரூ.500, கனரக வாகனங்களை கழுவினால் ரூ.1000.

பாத்திரம் பண்டங்களைக் கழுவினாலும் அபராதம் சமையல் பாத்திரங்களை கழுவினால் ரூ.100, மருத்துவக் கழிவுகளை தரம் பிரிக்காமல் மாநகராட்சி குப்பைதொட்டியில் போட்டால் ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

கூட்டம் போட்ட இடத்தை சுத்தம் செய்யாவிட்டால் குப்பைகளை உருவாக்குவோருக்கு ரூ.10 ஆயிரம், கட்டுமான இடிப்புகளை தரம் பிரிக்காமல் ஒப்படைத்தால் ரூ.25 ஆயிரம், பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை 24 மணி நேரத்தில் சுத்தம் செய்யாவிட்டால் ரூ.25 ஆயிரம் என 24 இனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளன

இருமலுக்கு கை கண்ட மருந்து சிற்றரத்தை---கை மருந்துகள்..!

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம்.

சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில்  போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும். 

சிகரம்தொடு படத்தில் சிவகார்த்திகேயனா?

விக்ரம் பிரபு அரிமா நம்பி வெற்றிக்கு பிறகு நடித்து வெளிவரயிருக்கும் படம் சிகரம்தொடு. இப்படத்தை தூங்காநகரம் படத்தை இயக்கிய கௌரவ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விசாரித்தால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையாம்.

இப்படத்தில் நடித்திருக்கும் சதீஸ், சிவாவின் நெருங்கிய நண்பர் என்று அனைவருக்கும் தெரியும், இவரை பார்ப்பதற்காகவே படப்பிடிப்புக்கு சென்றதாகவும், மேலும் படக்குழுவை வாழ்த்து விட்டு வந்ததாக கூறுகின்றனர்.

மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் மாதவிடாய் சுழற்ச்சி பிரச்சனை முதன்மையானது.

பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

அந்த ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ,

பச்சை காய்கறிகள், கீரைகள் :

கீரைகள், ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள் ஆகியவற்றை தினமும் உணவுடன் சேர்த்து கொள்ளவது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.

எள்

சீரான மாதவிடாய் சுழற்சியை பெற எள் சாப்பிடலாம். எள்ளை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

சோம்பு

சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

மீன் அல்லது மீன் எண்ணெய்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.

பாதாம் பருப்பு

பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க..! இய‌ற்கை வைத்தியம்..!!

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும்.

ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம்.
பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் இதனால் அரிப்பும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும்.
பனை வெல்லம்

பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்..

குப்பைமேனி இலை

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.

குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.

ஊமத்தம் இலை

பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால்லிட்டர் நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

விஜய்யின் ரீமேக் படத்தில் ஸ்ருதிஹாசன்..! சரியா போச்சி போ..!

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா ஜோடியாக நடித்த படம் கில்லி. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வெற்றியடைந்தது.

இப்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. படத்தை அமித் ஷர்மா இயக்க, அர்ஜுன் கபூர், சோனாக்ஷி சின்ஹா, மனோஜ் பாஜ்பாயி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசன் பாடல் பாட இருக்கிறார். இது ஸ்ருதிஹாசன் ஹிந்தியில் பாடும் மூன்றாவது பாடல்.

இந்த ரீமேக் படம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி வெளிவரவுள்ளது.

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யின் 58வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

பழமொழியில் ரீமிக்ஸ்!! ரீமிக்ஸ்!!


பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
 புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்

 பழசு: இளங்கன்று பயமறியாது
 புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது

 பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
 புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்

 பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
 புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு

 பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்
 புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே அனுப்பும்

 பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
 புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்

 பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு
 புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்
 பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது
 புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது

 பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு
 புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு

 பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு
 புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு

 பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது
 புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது

 பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
 புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்

 பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
 புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்

 பழசு: குரைக்கிற நாய் கடிக்காது
 புதுசு: கொரியன் போன் உழைக்காது

 பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
 புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்

 பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது
 புதுசு: டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது

 பழசு: கடை தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
 புதுசு: அடுத்தவன் போன எடுத்து உன் ஆளுகிட்ட பேசாதே

 பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே
 புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே

 பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
 புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை

 பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்
 புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்
 பழசு: பேராசை பெருநஷ்டம்
 புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்

வெற்றிமாறன் இயக்கத்தில் 'குற்றவாளி'யாக அவதாரம் எடுக்கும் தினேஷ்..!

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன் பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் 'ஆடுகளம்' படத்தை இயக்கினார். பல விருதுகளை வென்ற 'ஆடுகளம்' தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

தற்போது தனுஷ் நடிப்பில் 'சூதாடி' படத்தை இயக்கி வருகிறார், வெற்றிமாறன். இதைத் தொடர்ந்து இன்னொரு படத்தையும் இயக்க உள்ளார்.  இதில், 'அட்டகத்தி' தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு 'குற்றவாளி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் தனுஷ்.

படத்தின் ஹீரோயின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்றுவருகிறது.