Wednesday, 13 August 2014

ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா..?

தினமும் நாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே காண முடியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இதோ….

• ஆண்களின் மத்தியில் நம்முடைய நடையும், நிற்கும் ஸ்டைலும், எந்த அளவிற்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்பதைக் வெளிக்காட்டும். எனவே எப்பொழுதும் முதுகை நிமிர்த்தி, கழுத்தை நேராக வைத்து இருந்தால், அது தன்னம்பிக்கையுடன் இருக்கும் தோற்றத்தைத் தரும்.

• ஆண்களை ஈர்க்க, மற்றொரு வழி நன்றியுடன் இருத்தல். சில பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு, திமிராக நடந்து கொள்வார்கள். ஆனால் அது தேவையற்றது. ஆகவே அடக்கத்துடனும், அமைதியுடனும் நடந்து கொண்டாலே போதுமானது.

• தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள அனைவருடனும், அடக்கத்துடன் பழக வேண்டும். எல்லா விதமான மனிதர்களுடனும் பழக முடியும் என்ற நிலையை அடைய, அனைவருடனும் சகஜமாக பழக வேண்டும் என்பது மிக முக்கியம். பொதுவாக அனைவருடனும் பழகுவது என்பது, ஒருவரை முன்னோக்கி எடுத்து செல்லும். இதன் மூலம் ஆண்களிடையே, நன்றாக பழகக் கூடியவர் மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உடையவர் என்ற எண்ணங்கள் உண்டாகும்.

• பல பெண்கள் வெளி இடங்களில் பேசுவதே இல்லை. முக்கியமாக ஆண்களிடம் பேசுவதே இல்லை. இது முற்றிலும் தவறு. தோழமையோடு பேசினால் தான் அனைவருடனும், முக்கியமாக ஆண்களிடம் தன்னம்பிக்கையுடன் பழக முடியும்.

செல்வராகவன் இயக்கத்தில் விஜய்! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என தங்கள் மனதில் எண்ணிக்கொண்டு இருக்க. அந்த ஜோடி உண்மையிலேயே ஒரு படத்தில் இணைந்தால் கொண்டாட்டம் தான்.

அந்த வகையில் ஒவ்வொரு படத்தையும் தன் வித்தியாசமான கற்பனையை கொண்டு இயக்குபவர் செல்வராகவன். இவர் தற்போது தன் தம்பி தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் செல்வா யதார்த்தமாக நடிகர் விஜய்யை பார்க்க, ஒன் லைன் கதை மட்டும் சொல்லியிருக்கிறார். இதை கேட்ட விஜய்க்கும் பிடித்து போக முழு கதையும் தயார் செய்ய சொல்லிவிட்டாராம்.

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கத்தி படத்தை முடித்த கையோடு சிம்புதேவன் படத்தில் நடிக்கயிருக்கிறார் இளைய தளபதி. இதை அடுத்து செல்வராகவன் படத்தில் நடிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சரத்குமார் செய்த ஊழல்! அம்பலப்படுத்த போகிறாரா விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் சரத்குமார். இந்நிலையில் வரும் ஞாயிறு அன்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடக்கயிருக்கிறது.

ஏற்கனவே விஷால் தலைமையில் ஒரு இளைஞர் அணி உருவாகியிருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் , அன்றைய தினம் நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கண்டிப்பாக விஷால், இதுவரை நடந்த ஊழல் விவகாரத்தையும், நடிகர் சங்க தலைவருக்கான மறு தேர்தலையும் நடத்த சொல்லி வலியுறுத்துவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…?

உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா… முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா… இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும்.

மீண்டும் உங்கள் பக்கம் உங்களது கணவரைத் திருப்ப முடியும். அதற்கு நம்பிக்கையும், சில மெனக்கெடல்களும் மட்டுமே தேவை.

முதலில் ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்…

படுக்கை அறை விளையாட்டில் மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக உந்தலாம்.

திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் ஏகத்துக்கும் குண்டடித்து விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் மெஜாரிட்டி ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் அப்பீல் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பிறப்புக்குப் பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு தளர்ந்து, பெரிதாகி விடும். இதனால் உடல் உறவின்போது போதுமான சந்தோஷம் ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்ததைப் போல பெண்ணுறுப்பு இறுக்கமாக இல்லாதது பல ஆண்களுக்கு சோர்வைத் தருகிறதாம்.

கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை அப்செட் ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

பல கணவர்களுக்கு அலுவலக வேலை மண்டையைப் பிய்ப்பதாக இருக்கும். மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்புபோதும் பிழியப்பட்ட கரும்பு போல மாறியிருப்பார்கள். எனவே செக்ஸ் மூடு அவர்களை அண்டுவது கடினம். இதுபோன்ற ஆண்களுக்கு செக்ஸ் மீதே ஒரு வெறுப்பு வந்து மனைவியரிடம் நெருங்காமல் தள்ளிப் போக ஆரம்பிப்பார்கள், உறவுகளை தள்ளிப் போடவும் செய்வார்கள்.

இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…

மலையாள படத்தின் ரீமேக்கில் ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்..!

திருமணமாகி 8 வருடங்களுக்குப்பின், ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார். அவர் நடிக்கும் படத்தை கணவர் சூர்யாவின் சொந்த பட நிறுவனம் தயாரிக்கிறது.

காதல் திருமணம்

சூர்யாவும், ஜோதிகாவும் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்தார்கள். தொடர்ந்து, 'உயிரிலே கலந்தது,' 'காக்க காக்க,' பேரழகன்,' 'மாயாவி,' 'ஜூன் ஆர்,' 'சில்லுன்னு ஒரு காதல்' ஆகிய படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

மீண்டும் நடிக்கிறார்

திருமணத்துக்குப்பின், ஜோதிகா நடிக்கவில்லை. சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு 7 வயதில் தியா என்ற மகளும், 4 வயதில் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.
8 வருடங்களுக்குப்பின், ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார். மஞ்சுவாரியர் நடித்து, கேரளாவில் வெற்றி பெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற மலையாள படத்தின் தமிழ் பதிப்பில் ஜோதிகா நடிக்கிறார். திருமணத்துக்குப்பின், மஞ்சுவாரியர் திரையுலகில் மறுபிரவேசம் செய்த படம் இது. இந்த படத்தில், பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு கருத்து சொல்லப்பட்டு இருக்கிறது.

சூர்யா தயாரிக்கிறார்

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' மலையாள படத்தை டைரக்டு செய்த ரோஷன் ஆன்ட்ரூசே இந்த படத்தையும் டைரக்டு செய்கிறார். சூர்யாவின் '2டி' என்ற சொந்த பட நிறுவனம் தயாரிக்கிறது.

'2டி' என்பது சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா, மகன் தேவ் ஆகியோரின் பெயர்களில் முதல் எழுத்தை கொண்டு தொடங்கப்பட்ட பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏற்கனவே பாண்டிராஜ் டைரக்ஷனில் ஒரு படத்தை தயாரித்து வருகிறது.

பிடிக்காத படங்களாக இருந்தாலும், தொழிலுக்கு துரோகம் செய்யமாட்டேன்..இளையராஜா ..!

சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா’. இப்படத்தில் அஷ்வின் நாயகனாகவும், ஸ்ருஷ்டி நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆல்பர்ட் தயாரித்துள்ள இப்படத்தை ஜெ.எஸ்.கே நிறுவனம் வெளியிடவுள்ளது.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் கார்த்திக் ரிஷி, நடிகர் அஷ்வின், நடிகை ஸ்ருஷ்டி, இசையமைப்பாள இளையராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது இளையராஜா பேசும்போது, படத்தின் தயாரிப்பாளர் ஆல்பர்ட்டை வெகுவாக பாராட்டினார். மேலும், படத்தை சிறப்பாக இயக்கியிருப்பதாக கார்த்திக் ரிஷிக்கும் தனது ஆசீர்வாதத்தை அளிப்பதாக கூறினார்.

தனது இசைப் பயணத்தின் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்ட இளையராஜா, மோசமான படங்களாக இருந்தாலும், தனக்கு பிடிக்காத படங்களாக இருந்தாலும், சரஸ்வதி தேவி தனக்குகொடுத்த இசையை சிறப்பாக அளித்து வருவதாகவும், தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யமாட்டேன் என்றும் கூறினார்.

அத்துடன், கார்த்திக் ரிஷி தனது முதல் படத்தையே சிறப்பாக இயக்கியிருப்பதாக பாராட்டிய இளையராஜா, இப்படம் வெற்றியடைய ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நான் ஏன் மதம் மாறினேன்…? மனம் திறந்தார் யுவன்சங்கர் ராஜா..!

பிரபல நாளிதழ் ஒன்றில் தான் ஏன் இஸ்லாமை தழுவினேன் என்பது குறித்து யுவன் விளக்கமாக கூறியிருக்கிறார். தாங்க முடியாத சோகத்திலிருந்த யுவன் தனது நண்பர் மூலம் கிடைத்த திருகுர்ஆன் மூலமாகதான் மன அமைதியை அடைந்தார் என்று நாம் அப்போது சொல்லியதை இப்போது அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் யுவன்.

அதன் விபரம் வருமாறு-

“என் அப்பாவும், அம்மாவும் தீவிர கடவுள் பக்தி உள்ளவர்கள். வீட்டில் சும்மா கண்ணாடி விழுந்து உடைந்தால்கூட ஐயர்களை அழைத்து பூஜை செய்வார் என் அப்பா. ஆனால் சிறு வயதிலிருந்தே எனக்குள் ஒரு கேள்வி உண்டு.. இந்த உலகத்தை ஆட்டுவிக்கும் எல்லாவற்றுக்கும் மேலான அந்தக் கடவுள் எப்படியான உருவத்தில் இருப்பார் என்பதுதான் அது..! அந்தத் தேடல் என் அம்மாவின் மரணத்தின்போது வேறுவிதமா எனக்கு உணர்த்தியது..

ஒரு நாள் நான் மும்பையிலிருந்து சென்னை திரும்பியபோது வீட்டில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக இரும தொடங்கினார்.. நானும், என் தங்கையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நான்தான் காரை ஓட்டினேன்.. மருத்துமனையை அடைந்தபோது என் பக்கத்தில் இருந்த அம்மாவின் கையைப் பிடித்தபடியே இருந்த நிலையில்… என் அம்மா என் கண்ணெதெரிலேயே உயிர் துறந்தார். நான் கதறியழுதேன்.. சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்தவர் இப்போது இல்லை… அவரது ஆத்மா எங்கே போயிருக்கும் என்று அப்போதே நினைத்தேன்.

அதற்கான பதிலை நான் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடம் இருந்து எனக்கு நேரடியாகவே அழைப்பு வந்தது.. அதுவொரு இனிமையான அனுபவம். எனது நெருங்கிய நண்பர் மெக்காவில் இருந்து அப்போதுதான் திரும்பியவர், தொழுகை செய்யும் விரிப்பை எனக்கு பரிசாகக் கொடுத்தார்… அவர் மெக்கா சென்றிருந்தபோது அங்கிருந்து கொண்டு வந்தது என்றும் இது ‘மெக்காவை தொட்ட தொழுகை பாய்’ என்றும் சொன்னார்… “எப்போதெல்லாம் மனக்கஷ்டமா இருக்கியோ, அப்போது இதன் மேல் அமர்ந்து கொள். மனம் சாந்தியாகும்…” என்றார். அவர் கொடுத்த அந்த தொழுகை பாயை, அப்போதைக்கு சுருட்டி என் அறையில் ஒரு மூலையில் வைத்துவிட்டு அதைப் பற்றி மறந்தும்விட்டேன்.

அதன் பின் 2002-ம் ஆண்டில் ஒரு நாள்.. என் தாய் பற்றி எனது உறவினருடன் பேசினேன். சட்டென்று எனது அம்மாவின் நினைவுகள் வர அழுது கொண்டே எனது அறைக்கு திரும்பினேன். அப்போது அந்த தொழுகை விரிப்பை மறுபடியும் பார்த்தேன்… அதுவரை அது அங்கிருந்ததையே மறந்திருந்தேன். அன்றைக்கு அதைப் பார்த்தவுடன் ஏதோ தோணியது.. அதை விரித்து அதன் மேல் அமர்ந்து ‘கடவுளே என் பாவங்களை மன்னித்தருளும்’ என்றேன். அந்த கணமே என் மனபாரம் குறைந்து லேசானதை போல உணர்ந்தேன், அதன் பின் குரானையும் மொழி பெயர்ப்புகளையும் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன்… தொடர்ந்து இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தேன்… 2014 ஜனவரி மாதத்தில் தொழுகை செய்வதையும் கற்றுக் கொண்டேன்.

தற்போது ‘யுவன்சங்கர் ராஜா’ என்ற பெயரிலேயே திரைப்படங்களில் நான் பிரபலமாக இருப்பதால் உடனடியாக பாஸ்போர்ட் உட்பட்ட ஆவணங்களில் எனது பெயரை மாற்றப் போவதில்லை. பின்பு மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறேன்..

கடைசியாத்தான் அப்பாவிடம் இது பற்றிச் சொன்னேன். அப்பா, “யுவன்.. நீ இஸ்லாத்துக்கு மாறுவது எனக்குப் பிடிக்கலை” என்று மட்டுமே சொன்னார். எனது அண்ணனும், அண்ணன் மனைவியும் இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

நான் தொழுகை செய்யும் நேரங்களில் எனது அம்மாவே என் கையைப் பிடித்து, ‘யுவன் நீ தனிமைல இருக்குற.. நான் இஸ்லாம் என்ற பெயரில் உனக்கு அடைக்கலம் தரும் மரமா இங்க இருக்கிறேன்…’ என்று சொல்வதாக உணர்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

டாணா’வில் உள்ளே நுழைந்தார் இளையதிலகம்..! ரகசியம்னு சொன்னாலே அது வெளிய தெரிஞ்சா தான அதுக்கு மதிப்பே..

முன்னாள் ஹீரோயின்களில் நடிகை சரண்யா எப்படி தவிர்க்கமுடியாத ‘அம்மா’வாகிப்போனாரோ, அதேமாதிரி தற்போது இளைய திலகம் பிரபுவையும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கச்சொல்லி தங்களது படத்தின் மெரிட்டை ஏற்றிக்கொள்ள பல இயக்குனர்கள் விரும்புகின்றனர்.

அந்த வகையில் இப்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தில் பிரபு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். ஆனால் இதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். ரகசியம்னு சொன்னாலே அது வெளிய தெரிஞ்சா தான அதுக்கு மதிப்பே..

ஆகஸ்ட் 22ல் வெளியாகும் 10 படங்கள்! உங்களுக்காக..!

தமிழில் ஆகஸ்ட் 15 மற்றும் 29ம் தேதிகளில் சில பெரிய படங்கள் வெளியாவதால் சில சின்ன பட்ஜெட் படங்கள் ஆகஸ்ட் 22ம் தேதியில் ரிலீஸ் ஆகின்றன.

தமிழில் மட்டும் இதே நாளில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

பரத்தின் 25வது படமான 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி', இளையராஜா இசையில் அஸ்வின், ஷ்ருஸ்டி நடிக்கும் 'மேகா', மற்றும் விதார்த் நடித்த 'ஆள்' ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

இதே தேதியில் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான, ராணி முகர்ஜி நடித்து 'மர்தாணி' வெளியாக உள்ளது. மேலும் 'மும்பை கனெக்‌ஷன்' , மற்றும் 'மேட் அபௌட் டான்ஸ்' படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

ஆகஸ்ட் 22ம் தேதியை குறிவைத்து ஹாலிவுட்டில், 'சின் சிட்டி-2' படமும்,  வார்னர் பிதர்ஸின் 'இஃப் ஐ ஸ்டே', மற்றும் 'வென் தி கேம் ஸ்டான்ட்ஸ் டால்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.

இந்த ஒன்பது முக்கிய படங்களுடன் இணைந்து தெலுங்கில் ஸ்வாதி நடித்த 'ஸ்வாமி ராரா' என்னும் படம் 'கார்த்திகேயன்' என தமிழிலும் டப்பாகி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடுப்பேற்றும் சூர்யா! கோபத்தை காட்டிய விஷால்! அட போங்க, அதெல்லாம் சும்மா பேச்சு மட்டும் தான்..?

இன்றைய சூழ்நிலையில் எல்லா நடிகர்களும் ஒற்றுமையாக தான் இருந்து வருகின்றன. ’அட போங்க, அதெல்லாம் சும்மா பேச்சு மட்டும் தான், படம் என்று வந்து விட்டால் அனைவரும் போட்டி, பொறாமையுடன் தான் இருக்கிறார்கள்’ என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருணத்தில் அடுத்து மார்க்கெட்டிங் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கும் தருவாயில், சூர்யா சிங்கம்-3 பற்றி பேட்டிகளில் சொல்ல எல்லோருடைய கவனமும் அதன் பின் திரும்பியது.

ஹரியும் சிங்கம் படத்தை பற்றி பேச உச்சகட்ட கோபத்திற்கு ஆளான விஷால், கோபத்தை காட்டவேண்டியவர் மேல் காட்டாமல் இயக்குனரிடம் முகத்தை காட்டுகிறாராம்.