Wednesday, 9 July 2014

விஷால் ஷ்ருதி படத்தின் சென்டிமெண்ட்..?

ஒன்பது வருடத்திற்கு முன்பு வெளியான படம் 'சண்டக்கோழி' . லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, மீரா ஜாஸ்மின், மோனிகா நடித்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனால் சென்டிமென்ட் அடிப்படையில் 'சண்டக்கோழி' கிளைமாக்ஸ் எடுத்த அதே இடத்தில் 'பூஜை' படத்தின் சண்டைக் காட்சியை உருவாக்கி உள்ளனர் .

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் ஹரி இயக்கி வரும் படம் 'பூஜை'. விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியை காரைக்குடியில் எடுத்துள்ளனர். இதே இடத்தில் தான் 'சண்டக்கோழி' படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது. யுவன் இசையில் உருவாகி வரும் 'பூஜை' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஐந்தாவது முறையாக ஹரி இயக்கத்தில் சூர்யா!

லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படம் ஆகஸ்டு வெளியீடாக வரவுள்ளது.இந்நிலையில் படத்தின் புரமோஷன்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சூர்யா வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க முடிவு எடுத்துள்ளார்.

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் 'மாஸ்' படத்தில் நடித்து வரும் சூர்யா அப்படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத்  தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் 'ஆறு', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம்2' ஆகிய நான்கு படங்களில் சூர்யா நடித்துள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக ஹரியுடன் கைகோர்க்கும் சூர்யா அப்படம் 'சிங்கம்-3' ஆக இருக்குமா என்பது குறித்து தகவல் கூறவில்லை.

அதேபோல் தனது தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ஆதரவு அளிக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதன்மூலம், சூர்யா நேரடித் தெலுங்குப் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

இந்தி, தெலுங்கில் ரீமேக் ஆகும் சதுரங்க வேட்டை!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்டு நட்ராஜ், இஷாரா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'சதுரங்க வேட்டை'. இப்படத்தை இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. லிங்குசாமியின்  திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வரும் ஜூலை 25ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்கிறது.

தமிழில் 'சதுரங்க வேட்டை' ரிலீஸ் ஆகும் முன்பே, தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.  திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 'சதுரங்க வேட்டை' படத்தின் ரீமேக் மூலமாக பாலிவுட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க உள்ளது.

இந்தியில் அக்ஷய் குமார் அல்லது அஜய் தேவ்கன் ஆகிய இருவரில் ஒருவர் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 'சதுரங்க வேட்டை'யை இயக்கிய வினோத் இந்தியிலும் ரீமேக் செய்கிறார்.

தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இயக்குநர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

ரஜினி, அமீர்கான், ஷங்கர் இணையும் எந்திரன் - 2!

ஐ' படத்தை முடித்த பிறகு ஷங்கர் மீண்டும் ரஜினியை இயக்க உள்ளார். இப்படத்தில் அமீர்கானும் நடிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது.

ரஜினியை வைத்து 'சிவாஜி'. எந்திரன்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ஷங்கர் தற்போது மூன்றாவது முறையாக ரஜினியை இயக்குகிறார். 'எந்திரன்' படத்தின் இரண்டாவது பாகம் தான் இது. இதில் ரஜினியுடன், பாலிவுட் நடிகர் அமீர்கானும் நடிக்கிறார்.

கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் 'எந்திரன் - 2' படத்துக்கும் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன், அமீர்கான் இணைந்திருப்பதால் 'எந்திரன் - 2' தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூரான் கடித்தால் என்ன செய்வது ?

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

தமிழன்டா ....

Bill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்..
அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்று கூடினர்...
இதில் நமது ஊரைச்சேர்ந்த ராமசாமியும் அடக்கம்...
Bill Gates : “ Thank you for coming....
Those who do not know JAVA may leave for the day.... “
JAVA தெரியாதவங்கள போக சொன்னதும் 2000 பேர் அந்த இடத்தை காலி செய்துகொண்டு சென்றுவிட்டனர்...
ராமசாமி மனசுகுள்ளயே நினைச்சிக்குறார்,
’ நமக்கு JAVAனா என்னன்னே தெரியாதே.. சரி சும்மா இருந்து பாப்போம்.. என்னதான் நடக்குதுன்னு.. ‘
Bill Gates : “ Candidates who never had experience of managing more
than 100 people may leave.... “
இதனை கேட்டதும் மேலும் 2000 பேர் சென்றுவிட்டனர்...
ராமசாமி மறுபடியும் நினைச்சிக்குறார்,
‘நாம ஒருத்தன வச்சே வேலை வாங்குனதில்ல... இதில எங்க இருந்து 100 பேர் வச்சி வேலை வாங்கி இருக்கோம்... அவளோ ஏன் ஒரு மாடுக்கூட மேய்க்க தெரியாது நமக்கு... சரி பாப்போம் என்னதான் நடக்குதுன்னு...’
Bill Gates : “ Candidates who do not have management degrees may
leave... “
இதை கேட்டதும் இன்னும் 500 பேர் வெளியேறிவிட்டனர்..
ராமசாமி தனக்குள்ளேயே,
‘ நான் எங்க MBA எல்லாம் படிச்சேன்.. இன்ஜினியர்ங்கே முக்கி முக்கி பாஸ் பண்ணேன்.. சரி பாக்கலாம் என்ன நடக்குதுன்னு... ‘
கடைசியா,
Bill Gates சொல்றார் யாருக்கு எல்லாம் Serbo-Croat எனும் மொழியில் பேசத்தெரியாதோ அவங்க எல்லாம் போயிடலாம்...
மேலும் இருந்த 500 நபர்களில் 498 பேர் சென்றுவிட்டனர்....
இப்போ நம்ம ஹிரோ ராமசாமி யோசிக்குறார்,
‘ நமக்கு இங்கிலிஷே ஒழுங்கா பேச வராது... இதுல Serbo-Croat ன்னு என்னவோ மொழி சொல்றாரே.. ‘
இப்படி நினைத்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் மீதம் உள்ள ஒருவரை பார்க்கிறார்..
Interviewக்கு வந்த 5000 நபர்களில் மிஞ்சியது இவர்கள் இருவர் மட்டுமே...
Bill Gates அவர்கள் இருவரிடமும் வந்து கை கொடுத்துவிட்டு சொன்னார்,
” Apparently you are the only two candidates who speak Serbo-Croat, so I'd now like to hear you have a conversation together in that
language....”
இவர்கள் இருவரையும் Serbo-Croat மொழியில் உரையாடிக்கொள்ள சொன்னார் Bill Gates..
அமைதியாக பக்கத்தில் இருந்தவரிடம் திரும்பிய ராமசாமி,
பக்கத்தில் இருந்தவரை பார்த்து,
“ எந்த ஊர்ரு நீங்க....?? “ என்றார்...
அடுத்தவர் கொஞ்சமும் சளைக்காமல்,
“ மதுரை பக்கம் சார்” என்றார்.....
தமிழண்டா ....

ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்..!

ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது.

நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம்.

நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்.

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும்.

அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; Uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த IP முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான IP முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு IP முகவரியே நமக்குக் கிடைக்கும்,

இதனை டைனமிக் IP முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள Server கணினிகள் ஒரு நிலையான (Static) IP முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு IP முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

IP முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள IP முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

Binery எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே IP முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான IP முகவரிகளை வழங்கி விடலாம்

கொரில்லாவாக மாறிய விக்ரம்! ருசிகர தகவல்!

நடிப்பிற்காக எதையும் செய்ய துணிந்தவர் விக்ரம். படத்திற்கு படம், வித்தியாசமான நடிப்பை மட்டும் இல்லாமல் உடல் மொழியையும் கமலுக்கு பின் மாற்றி நடிக்கும் ஒரே நடிகர் யார் என்றால் கண்டிப்பாக சொல்லலாம் அது இவர் தான் என்று.

தற்போது இவர் நடித்து ரிலிஸ்க்கு ரெடியாகயிருக்கும் படம் ஐ. இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக 110 கிலோ எடை ஏற்றினாராம் விக்ரம். இதில் பல மிருகங்களின் கெட்டப்பில் வந்து எமி ஜாக்சனுடன் ரொமான்ஸ் செய்வாராம்.

அதில் குறிப்பிட்டு சிங்கத்தின் பற்கள், காண்டாமிருகம் அளவு எடை, கொரில்லா போல் உடற்கட்டு என செம்ம விருந்து கொடுத்திருக்கிறாராம் சீயான்.

கனவு கண்டு பயப்படாதீர்கள்!

         கெட்ட சொப்பனம் கண்டால் நல்லதில்லை என்பது பொதுவாக மக்களின் `சென்டிமென்ட்’. `ஆனால் கனவுகளை நினைத்து பயப்படாதீர்கள், அவை உதவியே செய்கின்றன’ என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

21 வயதாகும் இளம்பெண் ஜானுவுக்கு பல மாதங்களாகச் சரியான தூக்கமில்லை. அவருக்குள் எதுவோ ஒன்று சுத்தியல் போலத் தொந்தரவாக அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. எனவே மனோதத்துவவியல் நிபுணரின் உதவியை நாடினார் ஜானு. அவர், ஒரு பாம்பு தன்னைச் சுற்றி வளைப்பதை போலவும், பின்னர் அது மறைந்து விடுவதை போலவும் அடிக்கடி கனவு கண்டு வந்திருக்கிறார்.

ஜானுவுடன் சிலமுறை பேசிய மனோதத்துவவியல் நிபுணர் ஸ்ரீதாரா, ஜானுவை பாம்புகளை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்படியும், அவற்றின் இயல்பை புரிந்துகொள்ளும்படிம் கூறினார். அதன் முலம் ஒருவேளை ஜானுவின் `பாம்புக் கனவுகள்’ மறைந்துவிடலாம் என்பது மனோதத்துவவியல் நிபுணரின் எண்ணம்.

“எதிர்காலம் பற்றிய தனது பயத்தின் அடையாளமாக அந்தக் கனவுகள் இருக்கக்கூடும் என்று அந்த பெண் கூறினாள்” என்கிறார், ஸ்ரீதாரா.

ஜானுவின் அம்மா, உள்ளூரில் ஒரு மரத்தடியில் உள்ள நாகர் சிலையைச் சுற்றி தனது மகளை அன்றாடம் வலம் வரச் செய்தார்.

“ஜானுவின் எதிர்காலம் பற்றிய பயம் சீராகும் என்பதன் அடிப்படையில் இந்தச் சடங்கு அமைந்துள்ளது” என்கிறார், ஸ்ரீதாரா. இனி அவருக்கு அந்த மாதிரியான கனவுத் தொந்தரவு இருக்காது என்கிறார் இவர்.

ஜானுவின் `கெட்ட சொப்பனத்தால்’தான் அவருக்குள் உறுத்திக்கொண்டிருந்த பிரச்சினை பற்றி அறிய முடிந்தது என்கிறார் ஸ்ரீதாரா. “அவர் தனது பயத்தை என்னிடம் சொன்னதுமே நிம்மதியாகவும், இலேசாகவும் உணர்ந்தார்” என்று விளக்குகிறார்.

ஒரு கெட்ட கனவு கண்டால் அதை பற்றி உடனே தாளில் எழுதலாம் என்கிறார் ஸ்ரீதாரா. அதன் முலம், பிரச்சினையைத் தூர எறிந்துவிடலாம் என்பது இவரது கருத்து.

“ஒரு கெட்ட கனவு கண்டு விழித்தவுடனே அதை பற்றி எழுதுங்கள். முழுவதும் ஞாபகமில்லாவிட்டாலும், ஞாபகமுள்ளவரை எழுதுங்கள். அதன் முலம், மறுபடி அந்தக் கனவு வராமல் தடுக்கலாம்” என்கிறார்.

மணிபால் மருத்துவமனை மனோவியல் துறைத் தலைவர் டாக்டர் முரளிராஜும் அதை ஆமோதிக்கிறார். `தனிநபர்களுக்கு அவர்களின் மனச்சுமைகளுக்கு வடிகாலாக அமையும் ஒரு நல்ல விஷயம் கனவு’ என்கிறார் அவர்.

“அந்த வகையில் `கெட்ட கனவுகள்’ ஒருவரின் உணர்ச்சிகளை சரிபடுத்திக்கொள்ள உதவுகின்றன. ஒருவர் ஒரு கனவு கண்டால் அந்த உணர்ச்சி அவரிடமிருந்து வெளியேறி விடுகிறது. அவரும் `ரிலாக்சாகி’ விடுகிறார்” என்று விளக்கிக் கூறுகிறார், முரளிராஜ்.

கனவுகள் வடிகாலாக இருப்பது மட்டுமல்லாமல், நிஜவாழ்வின் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ளவும் அவை உதவுகின்றன. பின்லாந்து ஆராய்ச்சியாளரான ஆன்ட்டி ரிவோன்ஸோ செய்துள்ள ஆய்வின்படி, மனிதர்கள் வாழ்வுடன் இயைந்து போக உதவுவதாக கனவுகள் உள்ளன.

“பொதுவாக கெட்ட கனவுகள் அச்சுறுத்தும் நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன, அவற்றைக் கடந்து செல்லும்படி நம்மைத் தள்ளுகின்றன. எனவே, நிஜ வாழ்வில் நாம் அதுமாதிரியான அச்சுறுத்தும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, கனவில் நமக்கு `பயிற்சி’ இருப்பதால் தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் முரளிராஜ்.

“கெட்ட சொப்பனம் என்பது விமர்சனம் அறியாமல் ஒரு படத்தை பார்பது போல. எனவே அதன் அர்த்தம் என்ன என்று சம்பந்தபட்டவருக்கு புரியாது.” என்கிறார் மற்றொரு மனோதத்துவவியல் ஆலோசகரான பி. கபூர்.

சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்!

தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் எல்லோருக்கும் சிகரமாக இருப்பவர் கே. பாலசந்தர் அவர்கள். 1930ம் வருடம் ஜூலை 9ம் தேதி சினிமாவிற்கு தொண்டாற்றவும், தமிழ் சினிமா பெருமைகளை இந்திய அளவிற்கு கொண்டு செல்வதற்காகவே பிறந்தவர் கே.பி.

இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார்.

இன்று சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று நாம் மார்தட்டி சொல்லும் பலரும் அன்று இவரது பார்வையில் பட்டதால் தான் இன்று நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருக்கின்றனர். யாருமே கண்டுகொள்ளாத நடன இயக்குனர்களின் உதவியாளராக ரோட்டில் திரிந்து கொண்டிருந்த ஒரு இளைஞனை தன் படத்தில் நடிக்க வைத்தார் தைரியமாக, அவர் தான் இன்று இந்தியாவே போற்றும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.

இதே போல் கதாநாயகன் என்றால் சிவந்த தோலும், 6 அடி உயரமும் இருந்த கால கட்டத்தில், ஒரு சாதரண சாமானியனை அபூர்வ ராகங்களில் அறிமுகப்படுத்தி, இன்று இந்திய திரையுலகமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியவர் இவர் தான்.

இது மட்டுமில்லை ’சின்ன கலைவாணன்’ விவேக், பிரகாஷ் ராஜ் போன்ற எண்ணற்ற திறமை சாலிகள் இவர் மோதிரக்கையில் கொட்டு வாங்கியதால் தான், இன்று நாடு போற்றும் கலைஞர்களாக நம் கண்முன் தெரிகின்றனர்.

இன்றைய தமிழ் சினிமாவில் பெண்கள் என்றாலே வெறும் கவர்ச்சி பொருளாக தான் வந்து செல்கின்றனர், ஆனால் பெண்களின் உலகை மிக துள்ளியமாகவும், அழகாகவும், கண்ணியமாகவும், தைரியமாகவும் காட்டியவர். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும்.

மேலும் இவர் இயக்கிய சிந்து பைரவி படத்தில் நடித்த சுஹாசினிக்கு அவ்வருடத்தின் சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது கிடைத்தது . தமிழ் திரையுலகில் 10 படங்களை எடுப்பதற்குள் நம் பாதி ஆயுள் முடிந்துவிடுகிறது, ஆனால் இவர் இதுவரை 100 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகுடத்திற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் 2011ம் ஆண்டு திரைதுறையின் நாட்டின் மிக கௌரவமான விருதான தாதாசாகிப் பால்கே விருதை பெற்றார்.

வயது எண்பதை கடந்தாலும் இன்றும் சளைக்காமல் தன் அடுத்த பரிமாணத்தை உத்தமவில்லனில் நடிகனாக எடுத்திருக்கிறார். அவர் இன்று போல் என்றும் மூளை நரைக்காத கலைஞனாக விளங்கவேண்டும். இந்த மாமேதைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் ‘சினி உலகம்’ கர்வமடைகிறது.

விஜய் தர்கா சென்றது ஏன்?

கத்தி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் ‘இளைய தளபதி’ விஜய். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் படமாக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் விஜய்யும் படத்தின் இயக்குனர் முருகதாஸும் அருகில் உள்ள தர்காவிற்கு சென்று தொழுகை நடத்தி வந்திருக்கின்றனர்.

நீண்ட நாட்களாக அந்த தர்காவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த விஜய்க்கு அன்று தான் செல்லும் பாக்கியம் கிடைத்ததாகவும், தற்போது தான் மனநிறைவுடன் இருப்பதாக கூறியிருந்தார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.