Tuesday, 26 August 2014

ஜெயம் ரவியை பற்றி அவரது மனைவியிடம் புகார் செய்த ஹன்சிகா!

ஹன்சிகா தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் 1 நடிகை என்று சொல்லலாம். ரோமியோ ஜூலியட், மீகாமன், வாலு என கையில் அரை டஜன் படங்களை வைத்துள்ளார்.

இவர் படப்பிடிப்பில் யாரிடமும் எந்த பிரச்சனையும் செய்யமாட்டாராம், இதனாலேயே இவருக்கு பல படங்கள் குவிகின்றது. தற்போது ரோமியோ ஜூலியட் படத்தில் பிஸியாக உள்ள இவர், பொறுமை இழந்து ஜெயம் ரவியை பற்றி அவரது மனைவியிடம் புகார் செய்தாராம்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஷுட்டிங்கில் ஹன்சிகாவை கலாய்க்கிறாராம், இதனால் அவரது மனைவியிடம் எப்படி இவரை வீட்டில் சமாளிக்கிறீர்கள் என்று செல்லமாக புகார் செய்தாராம்.

No comments:

Post a Comment