Wednesday, 3 September 2014

பெண்கள் ஆண்களிடம் மறைக்க நினைக்கும் விஷயங்கள் இது தானாம்

ரகசியங்களை காப்பதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. பெண்களின் மனதை புரிந்து கொள்வதென்பது முடியாத காரியமாகவே விளங்குகிறது. இப்போது பெண்கள் என்றுமே வெளிப்படுத்தாத விரும்பாத ரகசியங்கள் பற்றி பார்க்கலாம்.

ஷாப்பிங் செய்யும் போது பெண்கள் கணக்கில்லாமல் செலவு செய்வார்கள். தங்களுக்கு பிடித்த பொருட்கள் அனைத்தையும் வாங்க முற்படுவார்கள். அதனால் அவர்களின் ஷாப்பிங் செலவை தெரிந்து கொள்ள விரும்பினால், குறிப்பாக திருமணத்திற்கு முன்னால், அதை மறந்து விடுவதே நல்லது.

பெண்களுக்கு தங்கள் மனம் கவர்ந்த ரகசிய நபர் அவர்களின் நண்பர்கள் வட்டாரம் அல்லது அருகில் இருப்பார். அதனை அவர்கள் கண்டிப்பாக வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஏதாவது ஒரு உறவில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கண்டிப்பாக அந்த அன்பரை பற்றி வெளியே சொல்லவே மாட்டார்கள்.

பெண்களின் உரையாடல்களை ஆண்கள் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். நீங்கள் திருமணமான ஆணாக இருந்தாலும் சரி, உங்கள் மனைவி உங்களிடம் அதையெல்லாம் கூறுவார்கள் என எதிர்ப்பார்க்காதீர்கள். என்ன தான் நீங்கள் முயற்சி செய்தாலும் சரி, அதனை கண்டுபிடிக்கவே முடியாது.

நீங்கள் மற்ற பெண்களிடம் கடலை போடுகிறீர்களா என்பதை கண்டறியும் அதிசயமான உள்ளுணர்வை பெண்கள் கொண்டிருக்கின்றனர். அதனை உங்களிடம் அவர்கள் நேரடியாக கூற மாட்டார்கள். ஆனால் நீங்கள் தானாகவே அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் நேரம் வரும். எனவே உஷாராக இருங்கள்!

சில நேரங்களில் வெளிப்படையாக பெண்கள் இதனை காட்டமாட்டார்கள். அதுதான் பொறாமை. பெண்கள் அதிகமாக பொறாமை படுவார்கள். பெண்களை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு ரகசியம் இது.

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் !

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில், "பின் எதற்கு ஆகவில்லை?" என்று தெரியாமல் நிறைய பேர் புலம்பிக் கொண்டிருப்பர்.

ஆனால் சிலருக்கு விந்தணு குறைவினால் கூட குழந்தையை பெற முடியாமல் இருப்பர். அவ்வாறு மருத்துவர் ஆண்களது விந்தணுக் குறைவினால் தான் தள்ளிப் போகிறது என்று சொன்னால் போதும், சிலர் அதற்காக என்னென்னவோ மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் சாப்பிட்டால், விந்தணு அதிகரிக்காது, உடல் தான் பெரிதும் பாதிக்கப்படும்.

மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ROS என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன. ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால், அந்த வைட்டமின்கள் ROS-ன் அளவைக் குறைக்கின்றன. மேலும் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும்.

ஆகவே விந்தணுவின் அளவு குறைவாக உள்ளது என்று நினைத்து மனதை தளர விடாமல், நம்பிக்கையோடு ஒரு சில இயற்கையான செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி, அதிகரிப்பதோடு உடலும் நன்கு அரோக்கியமாக இருக்கும். இப்போது அது என்னவென்று பார்ப்போமா!!!

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது.

உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியை, அளவுக்கு அதிகமாக செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே அளவோடு உடற்பயிற்சி செய்தால் போதுமான

ஊட்டச்சத்து உணவுகள்

உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள சிறந்தது. முக்கியமாக வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், விந்தணுவிற்கு மிகவும் நல்லது. மேலும் காஃப்பைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகள்

அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஸ்பெர்ம்களை அழித்துவிடும்.

மொபைல் மற்றும் லேப்டாப்

எப்போதும் மொபைல்களை காற்சட்டை பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

தளர்வான உள்ளாடை

உள்ளே அணியும் உள்ளாடையை இறுக்கமாக போடாமல், தளர்வாக போட வேண்டும். இது ஒரு மூடத்தனமாக இருக்கலாம். ஆனால் இது உண்மை.

யோகா

மனஅழுத்தம் இருந்தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, உடலும் புத்துணர்ச்சியடைந்து, விந்தணு உற்பத்திக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

நண்பருக்காக உதவி செய்த விஷால்!

திரையுலகில் எல்லோரிடத்திலும் போட்டி, பொறாமை மட்டும் தான் உள்ளது. ஆனால் இதை மாற்றும் விதத்தில் நம் இளம் தலைமுறை நடிகர்கள் பலர் நட்போடு பழகி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக விஷால் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் மட்டுமின்றி, தன் நட்பு வட்டார நடிகர்களுக்கும் உதவ கூடியவர். சமீபத்தில் இவர் நடித்த பாண்டியநாடு படத்தில் விக்ராந்திற்கு முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை கொடுத்தார்.

தற்போது அதைவிட ஒருபடி மேலே சென்று சுசீந்திரன் இயக்கதில் விஷ்ணு நடித்திருக்கும் படம் ஜீவா. இப்படத்தை விஷால் தன் சொந்த பேனரான ‘விஷால் ஃபிலிம் பேக்ட்ரி’ சார்பில் வெளியிடவுள்ளாராம்.

கடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்? ..

இந்த உலகத்தில், சமூகத்தில், அலுவலகத்தில், குடும்பத்தில், உறவுகளிடத்தில், போராடி போராடி நான் மிகவும் களைத்துவிட்டேன்.

ஒரு கட்டத்தில் “சே…. என்னடா வாழ்கை …!” என்று வெறுத்தே போய்விட்டது.

எங்காவது கண்காணாத இடத்துக்கு போனால் என்ன என்று தோன்றியது. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு ஒரு நாள் வெளியேறினேன். மனம் போன போக்கில் நடந்தேன். “எங்கே நிம்மதி?” “எங்கே நிம்மதி?” அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நடந்து நடந்து ஊருக்கு வெளியே இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் வந்துவிட்டேன். கடைசியாக ஒரு முறை கடவுளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. “கடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நீ பதில் சொல் போதும்!” காட்டுக்கத்தல் என்பார்களே அது போல அந்த அத்துவானக்காட்டில் கத்தினேன்.

திடீரென இடி இடிப்பது போல கடவுளின் குரல் கேட்டது…. “மகனே உன்னைச் சுற்றி ஒரு முறை பார்….” கடவுள் பதில் சொன்ன சந்தோஷம் ஒரு பக்கம். திகைப்பு ஒரு பக்கம். சுற்று முற்றும் பார்த்தேன்.

கடவுள் தொடர்ந்தார்… “மூங்கில்செடிகளும் நாணலும் தெரிகிறதா?” “ஆம்… அதற்கு என்ன இப்போது?” மூங்கில் செடிகளையும் நாணலையும் நான் நடும்போது மிகவும் கவனமாக அவற்றை பார்த்துக்கொண்டேன். பாரபட்சமின்றி அவை வளர்வதற்கு தேவையான சூரிய ஒளி, தண்ணீர் ஆகியவற்றை குறைவின்றி அவற்றுக்கு கொடுத்தேன். நாணல்கள் சற்று சீக்கிராமகவே வளர்ந்துவிட்டன. பச்சை பசேலென்ற அவற்றின் பசுமை பூமிக்கு அழகு சேர்த்தது.

(மூங்கில், நாணல் இரண்டுமே புல்லினத்தின் ஒரு வகைகள் தான்!) ஆனால் மூங்கில் செடிகளிலிருந்து ஒன்றுமே வரவில்லை. நான் நட்டபோது எப்படி இருந்தனவோ அப்படியே தான் இருந்தன. இருப்பினும் நான் அவற்றின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. அடுத்த ஆண்டு நாணல்கள் இன்னும் பெரிதாக வளர்ந்தன. அவை வளரும் இடத்திற்கு மேலும் மேலும் அழகையும் பசுமையையும் சேர்த்தன. ஆனால் இம்முறையும் மூங்கில் செடிகளிலிருந்து ஒன்றுமே வரவில்லை. அப்படியே தான் அவை இருந்தன. இருப்பினும் நான் அவற்றின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.

மூன்றாம் ஆண்டும் இப்படியே. மூங்கில் செடி எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. நான்காம் ஆண்டும் அதே நிலை தான். எந்த வித வளர்ச்சியையும் மூங்கி செடிகள் காட்டவில்லை. ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. ஐந்தாம் ஆண்டு மூங்கில் செடி மிக மிக சிறியதாக ஒரு முளை விட்டது.

நாணலுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை என்று கூறலாம். அத்தனை சிறியது. ஆனால் ஆறு மாதங்கள் கழித்து மூங்கில் சுமார் 100 அடி உயரத்துக்கு வளர்ந்தது. எப்படி தெரியுமா? ஐந்து ஆண்டுகளாக தனது வேரை வளர்ப்பதற்கு அது செலவிட்டது. அந்த வேர்கள் தான் தற்போது அதன் அசாத்திய உயரத்தை தாங்குகின்றன. தாங்க முடியாத சுமை என்று நான் யாருக்கும் எப்போதும் தருவதில்லை. (அறிவியல் படி மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு தாவர இனமாகும். ஒரே நாளில் 250 செமீ கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.)

“மகனே… உனக்கு தெரியுமா மூங்கில் எப்படி தன் வேரை ஆழமாக வளர்த்துக்கொண்டு வந்ததோ அதே போல நீ கஷ்டப்படும்போதெல்லாம் உனது வேரை வளர்த்து வந்தாய். நீ நிமிர்ந்து நிற்பதற்கு. (YOU HAVE BEEN GROWING YOUR ROOTS).” “நான் மூங்கில் மீது எப்படி நம்பிக்கை இழக்கவில்லையோ அதே போல உன் மீதும் நம்பிக்கை இழக்கமாட்டேன்!

யாருடனும் உன்னை ஒப்பிட்டுக்கொள்ளாதே. மூங்கிலை நான் படைத்த நோக்கம் வேறு. நாணலை நான் படைத்த நோக்கம் வேறு. ஆனாலும் இரண்டுமே காடுகளுக்கும் நதிக்கரைகளுக்கும் அழகு சேர்ப்பவை தான்.” “உன் நேரம் நிச்சயம் வரும். அப்போது நீயும் மூங்கிலை போல எல்லாரும் ஆச்சரியப்படத்தக்க அளவு உயர்வாய்!” கடவுள் ஆசி கூறினார். “எவ்வளவு தூரம் நான் உயர்வது? அதற்கு அளவு ஏதாவது இருக்கிறதா??” “மூங்கில் எவ்வளவு உயரம் வளரும்?” “எந்தளவு வேரை அது ஆழமாக விடமுடியுமோ அந்தளவு உயரமாக!” “அதே தான்…

எந்தளவு நீ சோதனைகளை சந்திக்கிறாயோ அந்தளவு மேலே உயர்வாய். உன்னால் எவ்வளவு உயரமாக போகமுடியுமோ அவ்வளவு உயரமாக நீ போகவேண்டும். அதுவே எனக்கு பெருமை!” என்றார் கடவுள். புரண்டு புரண்டு படுத்ததில் கனவு கலைந்தது. அத்தனையும் கனவா? ஆம்… கனவு தான். ஆனால் அர்த்தமுள்ள கனவு. என் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொன்ன கனவு. இறைவன் ஒரு போதும் நம்மை கைவிடுவதில்லை.

உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நாளையும் கெட்ட நாளாக நினைக்கவேண்டாம். நல்ல நாட்கள் மகிழ்ச்சியையும், மோசமான நாட்கள் அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும். இரண்டுமே வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை. மகிழ்ச்சியான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு நம்முடைய விடாமுயற்சியும், புதுமை கலந்த செயல்திறனும் தேவை. இது அதிர்ஷ்டத்திலோ அல்லது குருட்டாம்போக்கிலோ வருவதல்ல. நமது தேர்வுகளில் தான் வருகிறது. நமது செயல்களில் தான் விளைகிறது.

(It is our choice and our action!) ஒவ்வொரு நாளும் நம்மை நிரூபிக்க நமக்கு புதுப் புது வாய்ப்புக்கள் தரப்படுகின்றன. அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு செயலாற்றுவதில் தான் நமது வாழ்க்கைப் பயணம் அடங்கியிருக்கிறது. நம் கையில் அடங்கியிருக்கிறது. ஆம்… நம் வாழ்க்கை நம் கையில்! பிறகென்ன தூள் கிளப்புவோம் வாருங்கள்….!!

நான் ஏன் விபச்சாரத்திற்கு வந்தேன்? சொல்கிறார் ஸ்வேதா பாசு..?

சில நாட்களுக்கு முன் முன்னணி நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைதானார். ஆனால் அவர் யார் என்பதை எல்லோரும் மறைத்து வந்த நிலையில் தெலுங்கில் முன்னணி பத்திரிக்கை ஒன்று ஸ்வேதா பாசுவின் படத்துடன் இச்செய்தியை வெளியிட்டு அதிர்ச்சியாக்கியது.

ஸ்வேதாவும் அதை மறைக்கவில்லை, இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தெலுங்கில் பல படங்களிலும், தமிழில் ரா ரா, சந்தாமாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த தொழிலுக்கு நான் ஏன் வந்தேன் என்பது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இதில் ‘சினிமா வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தேன். எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. விடுபடவும் முடியவில்லை. என் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை. என்னைபோல் பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?


ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!


அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.
 The juice of black nightshade is sometimes used to treat fever and alleviate pain.

வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.



தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..



மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.



வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை...

அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் தண்ணீர் கீரை!

5336024868_57559abcec_o

கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம்  சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க இருக்கும் தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி  பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்: 

பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள்  மிகச்சிறந்ததாகவே விளங்குகின்றது. தண்ணீர் கீரையில் வைட்டமின், தாதுக்கள் அதிகளவு கொண்டுள்ளதால் மிகச்சிறந்த கீரையாக விளங்குகின்றது.  இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது. ஆதலால்  வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பை குறைக்கும்:

எடை பிரச்சனையால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக எடையுடன் அவதி படுபவர்கள்  தங்கள் எடையை இயற்கையாகவே கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள தண்ணீர் கீரையை சாப்பிடலாம். தண்ணீர் கீரை கொழுப்பை குறைத்து  எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் தண்ணீர் கீரையை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சிக்கல்:

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த படுகிறது தண்ணீர் கீரை. தண்ணீர்  கீரையை கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்ட போது இலையின் சாறு கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலைக்கு எதிராக செயல்படுகிறது என  கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தசோகை:
ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தண்ணீர் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் தண்ணீர் கீரை இரும்பு சத்துகளை அதிகளவு  கொண்டுள்ளதால் ரத்தசோகைக்கு எதிராக செயல்படும். கர்ப்பிணிபெண்கள் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் உடலுக்கு தேவையான ரத்த அணுக்களை உருவாக்கி ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் முக்கிய பொருளாக இக்கீரை உள்ளது.

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்:

ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.. மலச்சிக்கல்  மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதி படுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். குடல்  புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல்  சேர்த்துக்கொள்ளுங்கள்.

விஸ்வரூபத்தை தொடர்ந்து யான் படத்திற்கும் பிரச்சனை?

கடந்த வருடம் கமலின் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்தது. இதற்கு குறிப்பிட்ட ஒரு சமுகத்தினரை மட்டும் தீவிரவாதி போல் சித்தரிப்பதாக காரணம் கூறினர்.

இதை தொடர்ந்து அந்த காட்சிகளையெல்லாம் நீக்கிய பின் தான் படம் திரைக்கு வந்தது. தற்போது ஜீவா நடிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் படம் யான்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. இதில் சில தீவிரவாத அமைப்புகளை காட்டுவது போல் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. இதனால் இது குறித்து யான் மீது எதிர்ப்பு வருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

பெண்கள் அந்த நிமிடங்களில் கூட செல்போனில் பேசுகிறார்களாம் – என்ன கொடுமை இது !!

தாம்பத்ய உறவின் போது கவனம் அதில் மட்டுமே இருந்தால்தான் உறவு சுவைக்கும் என்பார்கள். ஆனால் 62 சதவிகித பெண்கள் உறவின் போது செல்போனில் வரும் மெசேஜை வாசித்துக் கொண்டிருக்கிறார்களாம். செக்ஸ் உறவின்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்தப் பெண்கள் என்று ஒரு சர்வே நடத்தி அதன் சுவாரஸ்யமான முடிவை வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு உறவின்போதும் பெண்கள் எதையெல்லாம் நினைக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே இந்த சர்வேயின் சாராம்சம்.

62 சதவீத பெண்கள் செக்ஸ் உறவின்போது அதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு செல்போனை எடுத்து யாராவது கால் பண்ணாங்களா என்று நோண்டுகிறார்களாம்.

அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை இப்படி உறவின்போது செல்போனைப் பார்ப்போர் எண்ணிக்கை 48 சதவீதம்தானாம்.

உறவின்போது செல்போனில் பேசுவது என்பது 34 சதவீதம் பேராக உள்ளது.

உறவில் ஈடுபட்டபடியே மெசேஜ் படிப்பது, அனுப்புவது ஆகிய வேலைகளில் 24 சதவீதம் பேர் ஈடுபடுகிறார்களாம்.

22 சதவீதம் பேர் செக்ஸ் உறவில் ஈடுபடும் மும்முரத்திலும் கூட இமெயில் அனுப்புவதில் கவனம் செலுத்துகிறார்களாம்.

4 சதவீதம் பேர் செக்ஸ் உறவை சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைத்து விட்டு போனை செக் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

34 சதவீத பெண்கள், தாங்கள் இப்படி செல்போனைப் பார்ப்பதிலும், பேசுவதிலும், மெசேஜ் அனுப்புவதிலும், இமெயில் அனுப்புவதிலும் ஈடுபடும்போது தங்களது துணைஅதைக் கண்டு கொள்வதில்லை என்றும் கூறியுள்ளனர்.

மிகவும் நூதனமான காரியங்களில் கூட பெண்கள் செக்ஸின்போது ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறது இந்த சர்வே.

ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுப்புகளை கண்டறிவது எப்படி?

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு முழுமையாக முழுக்கு போடும் நிலை இன்னும் வராவிட்டாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமே இமெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் போடுவதும்,கூகுலில் தேடுவதும் அதிகரித்திருக்கிறது.


இப்படி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பக்கம் வந்திருப்பது இணைய பயனாளிகள் மட்டும் அல்ல, சாப்ட்வேர் வில்லன்களும் தான். ஆம்,டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பாதிக்கும் மால்வேர்கள் இப்போது உங்கள் ஆன்ட்ராய்டு போன்களை குறி வைக்க துவங்கியிருக்கின்றன.


தீய நோக்கம் கொண்ட சாப்ட்வேர்களே மால்வேர் என்று இணைய உலகில் இகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகின்றன.விஷமத்தனமான வைரஸ்களை கம்ப்யூட்டருக்குள் நுழைப்பது,பாஸ்வேர்டு திருட்டு போன்றவற்றில் ஈடுபடுவது, பயனாளிகளின் இணைய நடவடிக்களைகளை உளவு பார்ப்பது, கிரிடிட் கார்ட் பயன்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது என பல்வேறு இணைய குற்றங்களுக்கு மால்வேர்கள் தான் நுழைவு சீட்டாக இருக்கின்றன.


பொதுவாக விண்டோஸ் சார்ந்த கம்ப்யூட்டர்களுக்கு வேட்டு வைத்டு வந்த இந்த வில்லங்கமான சாப்ட்வேர்கள் இப்போது ஸ்மார்ட்போன்களை பதம் பார்த்து வருவது தான் கவலை தரும் விஷயம்.குறிப்பாக ஆன்ராய்டு போன்களை மால்வேர்கள் அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.ஸ்மார்ட் போன் சார்ந்த பயன்பாட்டை மேம்படுத்த கைகொடுக்கும் அப் எனப்படும் செயலிகள் வழியாக மால்வேர்கள் உள்ளே நுழைந்து விடுவதாக கருதப்படுகிறது. 


எனவே நீங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராக இருந்தால் மால்வேர் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. எல்லாம் சரி, உங்கள் போனில் மால்வேட்ர் குடிகொண்டிருக்கிறதா என எப்படி கண்டு பிடிப்பது? மால்வேர்களின் ஸ்டைலே உங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போனுக்குள் நுழைந்து விடுவதாக இருக்கின்றன.எனவே அவை போனில் தங்கள் வேலை காட்டத்துவங்கும் போது தான் அவற்றை கண்டுபிடிக்க முடியும்.


ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தே மால்வேர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொண்டு விடலாம். உதாரணத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து வழக்கத்துக்கு அதிகமான தகவல்கள் (டேட்டா) பயன்படுத்தப்படுகின்றன என்றால் அது மால்வேரின் வேலையாக இருக்கலாம். பெரும்பாலான மால்வேர்கள் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவே உருவாக்கப்படுவதால் அவை போனின் பின்னணியில் இருந்து தகவலகளை திரட்டிக்கொண்டே இருக்கும்.எனவே உங்கள் போனில் இருந்து தகவல் பயன்பாடு அதிகரித்தால் மால்வேர் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.


அதே போல் உங்கள் ஸ்மார்ட் போனின் செயல்பாடு ஸ்மார்ட்டாக‌ இல்லாமல் போவதும் கூட மால்வேர் வேலையாக இருக்கலாம்.எனவே திடிரென காரணமே இல்லாமல் உங்கள் போன் செயல்பாடு மந்தமானாலோ அல்லது ஒவ்வொரு செயலுக்கும் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொண்டால் மால்வேர் பிரச்ச்னையாக இருக்கலாம்.
போனின் பேட்டரி அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போவதும் அழைப்புகளை சரியாக பேச முடியாமல் போவதும் கூட மால்வேரின் காரணமாக இருக்கலாம்.


ஆக உங்கள்  போனின் செயல்பாடு பிரச்சனைக்குறியதாக இருந்தால் மால்வேர் பாதிப்பாக இருக்கலாம் என யூகித்து கொள்ளலாம். சரி, மால்வேர் பாதிப்பை கண்டுபிடித்தாகி விட்டது. அடுத்ததாக அவற்றை நிக்குவது எப்படி? இது குறித்து கவலையே வேண்டாம். காரணம் மால்வேர்களை நீக்குவதற்கான செயலிகள் இருக்கின்றன.


 இந்த செயலிகளை கூகுல் ஸ்டோரிலேயே டவுண்லோடு செய்யலாம். 360 மொபைல் செக்யீரிட்டு, அவாஸ்ட் ஆகியவை பிரபலமாக இருக்கின்றன.நார்ட்டன்,காஸ்பர்ஸ்கி போன்ற பிரப‌ல வைரஸ் தடுப்பு சேவை நிறுவங்களும் இத்தகைய செயலிகளை வழங்குகின்றன.
ஆனால் மால்வேர்களை அப்புறப்படுவத்துவதை காட்டிலும் அவற்றை உள்ளே விடாமல் இருப்பது சிறந்த வழி. இதற்கும் மால்வேர்கள் போனுக்குள் எட்டிப்பார்க்க வழியில்லாமல் செய்ய வேண்டும். 

மால்வேர்களுக்கு செயலிகள் தான் வாகனம். கூகுல் பிலே ஸ்டோர் செயலிகளை அலசிப்பார்த்தே அனுமதித்தாலும் வில்லங்கமான செயலிகள் எப்படியோ உள்ளே நுழைந்து விடுகின்றன.எனவே செயலிகளை டவுண்லோடு செய்யும் முன் நீங்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
புதிய செயலிகளை தேடிப்பார்த்து பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் எந்த ஒரு செயலியையும் டவுண்லோடு செய்யும் முன் அவை ஆபத்தில்லாதவையா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதற்கு எளிய வழி செயலி பற்றி மற்ற பயனாளிகள் தெரிவித்துள்ள விமர்சனங்களை படித்து பாருங்கள். அந்த செயலி பிரச்ச‌னைக்குறியது என்றால் பயனாளிகள் அவை பற்றி குறிப்பிட்டிருக்கலாம். 


அடுத்ததாக செயலியை உருவாக்கிய சாப்ட்வேர் நிபுணர் அல்லது சாப்ட்வேர் நிறுவனத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவரது அல்லது அந்நிறுவனத்தின் பிற செயலிகள் பற்றியும் தகவல் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல்கள் மூலமே அவை நம்பகமானவையா என தெரிந்து கொள்ளலாம்.


மற்ற இடங்களில் இருந்து செயலிகளை டவுண்லோடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருங்கள்.சில செயலிகள் சூப்பர் யூசர் அந்தஸ்து வழங்குவதாக ஆசை காட்டும் . இவை கூட சில நேரங்களின் மால்வேருக்கான வழியாகிவிடலாம்.


எல்லாவற்றுக்கும் மேல் கம்ப்யூட்டரில் வைரஸ் ஸ்கேன் செய்வது போல ஸ்மார்ட்ட் போனிலும் அடிக்கடி வைரஸ் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க!


ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.


உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.
இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்                       *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு:


இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

ஏன் ஸ்ருதி ஹாசன் இப்படி செய்தார்.....?

கமல்ஹாசனின் மூத்த மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அசை உணவு பிரியர் ஆவார். பல வகையான அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டும் அவருக்கு, மாட்டு கறி என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆனால், தற்போது அனைத்து அசைவ உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு, முழுக்க முழுக்க சைவ விரும்பியாக மாறிவிட்டாராம்.

இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், “அசைவ உணவுகள் எனக்கு பிடித்தவைகளாக இருந்தன. மாட்டுக்கறி மிகவும் பிடிக்கும். ஜப்பான், துருக்கி உணவு வகைகளையும் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் இப்போது அவற்றை நிறுத்தி விட்டேன்.

எனது தந்தை கமல் சைவ உணவுகளை சாப்பிடும்படி வற்புறுத்தினார். சைவ உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்போது முழுமையாக சைவத்துக்கு மாறிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 வழிகள்!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பு: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

3. தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

4. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

5. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

6. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

7. சிட்ரஸ் பழங்கள்: பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

8. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

9. கிரீன் டீ: அனைவருக்குமே கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த கிரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்து வாருங்கள்.

10. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

11. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

12. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

13. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் இதற்கான பலன் உடனே தெரியும்.

14. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

15. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.