Saturday 5 October 2013

கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள்!

By: Unknown On: 22:35
  • Share The Gag
  • கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள்


    நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாகிறார். இதற்காக, உடற்பயிற்சி, நடனம் என உடம்பை மெருகேற்றி வருகிறார்.


    பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா, துளசி சினிமாவுக்கு வந்துள்ளனர். இருவரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து பழைய கனவுக் கன்னியான ஸ்ரீதேவி மகள் ஜான்வியும், சினிமாவில் அறிமுகமாகிறார்.



    இரு வருடங்களுக்கு முன்பே பல இயக்குனர்கள் ஸ்ரீதேவியை அணுகி தங்கள் படங்களில் ஜான்வியை அறிமுகப்படுத்த கேட்டனர். ஆனால் சிறுமியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார். தற்போது ஜான்வி வளர்ந்து கதாநாயகிக்குரிய புது பொலிவோடு காட்சி தருகிறார்.



    மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு ஜான்வியை ஸ்ரீதேவி அழைத்து வந்திருந்தார். கூட்டத்தினரை ஜான்வி அழகு வசீகரித்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். முன்பு ஒல்லியாக இருந்தவர் இப்போது மொழு மொழு என மாறி இருப்பதாக பேசினர்.



    உடற்பயிற்சி, நடனம், உணவு கட்டுப்பாடு என அழகூட்டி இருந்தார். ஸ்ரீதேவி பிரபல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்றும் மும்பை பட உலகினர் தெரிவித்தனர்.

    'பென்சில்' படம் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாகிறார்!

    By: Unknown On: 22:19
  • Share The Gag

  • 'பென்சில்' படம் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாகிறார்

     
    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு பென்சில் என பெயரிடப்பட்டு உள்ளது.


    இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் 12–வது வகுப்பு மாணவன் கேரக்டரில் வருகிறார்.


    ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரியா ஆனந்த் ஏற்கனவே நூற்றுயென்பது, எதிர்நீச்சல், வாமணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.
     
     

    மூடருக்கு அறிவுரை கூறலாமா!! (நீதிக்கதை)

    By: Unknown On: 22:06
  • Share The Gag



  • ஒரு காட்டில்...ஒரு நாள் ...நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது.
     

    ஒரு குரங்கு குளிர் தாங்காமலும்..மழையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு மரத்தினடியில் ஒதுங்கிக்கொண்டது.
     

    மரத்தில் பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு அடக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
     

    குரங்கைப் பார்த்து பறவை மனம் பொறுக்காமல் ' குரங்காரே..என்னைப்பாரும்...வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.அதனால் தான் இந்த மழையிலும் சுகமாய் இருக்கிறேன்.நீரும் அப்படி செய்திருக்கலாமே என்றது...
     
     

    குரங்கிற்கு கோபம் தலைக்கேறியது..'உன்னைவிட வலுவானவன் நான்..எனக்கு நீ புத்தி சொல்கிறாயோ....
     

    இப்போது உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
    பறவைக்கு அப்போதுதான் புரிந்தது' 
     
     
    அறிவுரைகளைக்கூட.....அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.
     

    நாமும்...ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதன்படி நடப்பாரா என்று புரிந்துகொண்டபின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.
     
     

    வெல்ஸ் பார்க் - பன்னீர்செல்வம் பார்க்காக பெயர் மாறியது எப்படி?

    By: Unknown On: 22:00
  • Share The Gag




  • ஈரோடு நகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா எப்போதுமே பரபரப்பாக காணப்படும். பொதுவாக ஒரு இடத்தில் ஒரு தலைவரின் பெயரில் பூங்கா அல்லது சாலை பெயர் வைப்பதற்கு ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக இருக்கும். தற்போது பன்னீர்செல்வம் என அழைக்கப்படும் இடத்தில் ஒரு பூங்கா கூட கிடையாது. பன்னீர்செல்வம் சிலையும் கிடையாது. இந்த பெயர் உருவானதன் பின்னணியில் பெரிய வரலாறே உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதிக்கு வெல்ஸ் பார்க் என்று தான் பெயர். ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தவர் வெல்ஸ். அப்போது அந்த பகுதியில் ஏராளமான மரங்கள் இருக்கும். மரங்களின் மத்தியில் மாலை நேரத்தில் வெல்ஸ் செல்வது வழக்கம். இதனால் வெல்ஸ் பார்க் என்றே அழைக்கப்பட்டு வந்தது.


    ஈரோடு நகரசபை தலைவராக தந்தை பெரியார் பதவி வகித்த காலகட்டத்தில் தஞ்சாவூர் நகரசபை தலைவராக ஏ.டி பன்னீர் செல்வம் பதவி வகித்தார்.பின்னாளில் இருவரும் நீதிக்கட்சியில் இணைந்து இந்தி மொழி திணிப்பை கண்டித்து 1938ல் போராட்டம் நடந்தது. தந்தை பெரியார் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை மாகான சட்டமன்ற தலைவராக இருந்த பன்னீர்செல்வமும் இந்தியை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பன்னீர்செல்வம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நீதிக்கட்சி சார்பில் மாநாடு ஈரோட்டில் நடந்தது.


    இந்த மாநாட்டில் தந்தை பெரியாருக்கு மாலை அணிவிக்க வந்தார்கள். இதை தடுத்த பெரியார், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறையில் உள்ள ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு மாலை அணிவிப்பது போல அவரது படத்தை நாற்காலியில் வைத்து பன்னீர்செல்வம் படத்திற்கு மாலை அணிவித்த பிறகே கூட்டத்தை நடத்தினார். 1940ம்ஆண்டு மார்ச் 1ம்தேதி ஏ.டி.பன்னீர்செல்வம் கராச்சியில் இருந்து விமானத்தில் வந்தபோது திடீரென விமானம் கடலில் விழுந்தது. இந்த விபத்தில் பன்னீர்செல்வம் உயிரிழந்தார். படத்தை வைத்து மாலை அணிவித்ததன் அடையாளமாக அன்று முதல் அந்த பகுதி பன்னீர்செல்வம் பூங்கா என அழைக்கப்பட்டது. பூங்கா என்பதற்கான எந்த அடையாளமும் இப்போது அந்த இடத்தில் இல்லை.

    நடிகர் திலகத்தை உதாசீனபடுத்துவதா? சிவாஜி பேரவை ஆவேசம்!

    By: Unknown On: 21:17
  • Share The Gag

  • “நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட மகா கலைஞனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின் 86வது பிறந்த நாளில் (01.10.13) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எளிய அளவிலான நிகழ்ச்சிகூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயமாகும்.” என்று நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.




    5 - sivaji ganesh


    நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் விழா கடந்த 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் சிவாஜியின் பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாடவில்லை. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.


    இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு கண்டன அறிக்கையில், ‘‘நடிப்புலகின் குருவாக, தந்தையாக, நடிகர்களுக்கெல்லாம் தலைமகனாக விளங்கி மறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.


    அவர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.


    அப்படிப்பட்ட மகா கலைஞனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின் 86வது பிறந்த நாளில் (01.10.13) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எளிய அளவிலான நிகழ்ச்சிகூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயமாகும்.


    ராதாரவி தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் திலகத்தின் பிறந்த நாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘‘நடிகர் தினம்’’ ஆக கொண்டாடப்படும் என்று அறிவித்து நடத்தினார். அதன்பிறகு, அந்த நடைமுறை நின்று போனது ஏன் என்று தெரியவில்லை.
    நடிகர் சங்க பொறுப்பிலிருப்பவர்கள், படப்பிடிப்புகளில், வெளியூர்களில் இருந்திருந்தாலும்கூட, வேறு யாராவது சென்னையிலிருந்து நடிகர், நடிகைகளாவது சென்னையிலிருக்கும் நடிகர் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கலாம்.


    தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து, கட்டிக் காத்து வளர்த்த நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்யாத தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.


    நடிகர் திலகம் சிவாஜிக்கு உரிய மரியாதையை அளிக்காமல், தொடர்ந்து உதாசீனப்படுத்தினால், தென்னிந்திய நடிகர் சங்கத்தைக் கண்டித்து நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை போராட்டம் நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

    LG அறிமுகப்படுத்தும் Vu 3 Phablet சாதனம்!

    By: Unknown On: 20:34
  • Share The Gag









  • LG நிறுவனமானது Vu 3 Phablet எனும் சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.


    கூகுளின் Android 4.2.2 Jelly Bean இங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனமாது 5.2 அங்குல அளவுடையதும் 1280 x 860 Pixel Resolution உடையதுமான IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது.


    மேலும் 2.26GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
    இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.


    LG Vu 3 handled shortly in first hands-on videos


     LG recently unveiled a new version of its Vu 3 phablet. With a characteristic 4:3 screen, it stands apart from the flood of 16:9 and 16:10 devices. It's quite a capable phablet, borrowing a number of features from the LG G2 flagship, some of which can be seen in the first hands-on videos of the device.
     
    The first video shows KnockOn – a way to wake or lock the device without needing to hit the power button (even though it's not on the back like on the G2). You just double tap the screen.
    Then there's a quick peek at the LG Vu 3's dual shot camera – it can do a picture-in-picture photo with its 13MP camera on the back and the front-facing camera.


    The LG Vu 3 also packs a powerful Snapdragon 800 chipset, a stylus that sheaths into the phablet's body, LTE-Advanced connectivity, Guest mode, and will have translucent QuickView covers.


     




    lg vu3 knock on lg

    By: Unknown On: 20:31
  • Share The Gag




  • ஜி மெயிலில் இதுதெரியுமா உங்களுக்கு?

    By: Unknown On: 19:56
  • Share The Gag


  • ஒட்டுமொத்த இணையத்தையும் தன் வசப்படுத்த கூகுள் பல செயல்களை செய்து வருகிறது அதில் ஒரு முக்கியமான செயல் தான் ஜி மெயில். கூகுள்  தரும் ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அவற்றில் சில வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். இங்கு நாம் அதிகம் பயன்படுத்தாத,  சில முக்கிய வசதிகளைக் காணலாம். நாள் தோறும் பல மின்னஞ்சல் செய்திகள் நமக்கு வருகின்றன. இவற்றில் ஒரு சில முக்கியமானவையாக  இருக்கும். ஒரு சிலவற்றிற்கு கட்டாயம் சில நாட்களில் பதில் அனுப்ப திட்டமிடுவோம். மொத்த அஞ்சல்களில் இவற்றை எப்படி விலக்கிப் பார்ப்பது.

    இதற்கெனவே, இந்த அஞ்சல்களில் ஸ்டார் அமைத்து குறியிடும் வசதி தரப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸில், செய்தியை அடுத்து இடதுபக்கம் ஸ்டார்  குறியிடும் இடம் தரப்பட்டுள்ளது. அனுப்பியவரின் பெயர் அடுத்து இது காணப்படும். இதில் ஒரு கிளிக் செய்தால், அதில் ஸ்டார் அடையாளம் இடப்பட்டு  தனித்துக் காட்டப்படும். பின் ஒரு நாள் தேடுகையில், இந்த ஸ்டார் அமைந்துள்ள செய்திகளை மட்டும் தேடலாம். சரி, நீங்கள் எழுதும் அஞ்சலை எப்படி  ஸ்டார் அமைப்பது? மெசேஜ் மேலாக இருக்கும் Labels என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Add star என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமானது  என்று நீங்கள் குறிக்க விரும்பும் செய்திகளில் பல தரப்பட்டவை இருக்கலாம்.

    சில உங்கள் வேலை சார்ந்ததாக இருக்கலாம். சில உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வந்திருக்கலாம். இவற்றை வேறுபடுத்தி  முக்கியம் எனக் காட்ட, இந்த ஸ்டார்களை வெவ்வேறு வண்ணத்தில் அமைக்கலாம். பல வண்ணங்களில் அமைக்க, முதலில் அவற்றை நீங்கள்  தேர்ந்தெடுத்து உங்கள் பயன்பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும். இதற்கு, ஜிமெயில் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில், கியர் ஐகானில் கிளிக்  செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு General என்ற டேப்பில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.  இந்தப் பக்கத்தில் "stars" என்ற பிரிவைத் தேடிக் காணவும். இதில் மஞ்சள் வண்ண ஸ்டார் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். கீழாக மேலும்  சில வண்ணங்களிலும் ஸ்டார் காட்டப்படும். எவை வேண்டுமோ, அவற்றின் மீது கிளிக் செய்து மேலே, மஞ்சள் ஸ்டார் அருகே வைக்கவும். ஸ்டார்  மட்டும் இன்றி, மேலும் சில குறியீடுகளையும் காணலாம். இவற்றை விரும்பினால், அவற்றையும் அதே போல் இழுத்து மேலே வைக்கவும்.

    இதன் பின்னர், கீழாகச் சென்று Save Settings என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி ஜிமெயில் பக்கத்தில் ஒரு செய்தியை ஸ்டார்  செய்திடுகையில் முதலில் மஞ்சள் ஸ்டார் கிடைக்கும். தொடர்ந்து கிளிக் செய்திட, அடுத்தடுத்த வண்ணங்களில் ஸ்டார்கள் காட்டப்படும். எதனை  அமைக்க விருப்பமோ, அது கிடைக்கும்போது கர்சரை எடுத்துவிடலாம். இவ்வாறு ஸ்டார் அமைத்த செய்திகளைத் தேடிப் பெறலாம். குறிப்பிட்ட  வண்ணத்தில் அமைந்த செய்திகளைத் தேடுகையில் "has:" என்பதைப் பயன்படுத்தி தேடலாம். எடுத்துக்காட்டாக, தேடலை "has:yellowstar" என  அமைக்கலாம்.

    வீடியோ வழி பேச்சு ஜிமெயில் செய்திகளைக் காண்கையில்,வெளி ஊரில், வெளி நாட்டில் வாழும் உங்கள் நண்பரும் ஜிமெயில் பார்த்துக்  கொண்டிருந்தால், உடனே அவரை அழைத்து, அவர் முகத்தினைப் பார்த்து உங்கள் அன்பைத் தெரிவிக்கலாம். வீடியோ காட்சியாக இது கிடைக்கும்.  இதனை உங்கள் ஜிமெயிலில் செயல்படுத்த Gmail voice and video chat இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். இதனை எளிதாக, டவுண்லோட் செய்து  பதிந்து கொள்ளலாம்.

    லேபில்களில் மின்னஞ்சல்கள் லேபில்கள் ஜிமெயிலில் போல்டர்கள் போலச் செயல்படுகின்றன. முக்கியமான மெயில்களுக்கு நல்ல வண்ணத்தில்  லேபில்களைக் கொடுத்தால், அவற்றை எளிதாகத் தேடிப் பெறலாம். இதில் என்ன விசேஷம் என்றால், ஒரு மின்னஞ்சல் செய்திக்கு ஒன்றுக்கு  மேற்பட்ட லேபிலை வழங்கலாம். நண்பர்கள் "Friends" என்ற லேபிலையும், உடனே பதில் போடு "Reply soon" என்பதற்கான லேபிலையும், ஒரே  செய்திக்கு வழங்கலாம். லேபிலை உருவாக்க, ஜிமெயில் பக்கத்தின் இடது புறத்தில், லேபில் லிஸ்ட் கீழாக உள்ள More என்பதில் கிளிக் செய்திடவும்.  இங்கு Create new label என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் புதிய லேபிலின் பெயரை டைப் செய்து, பின்னர் Create என்பதில் கிளிக்  செய்திடவும்.

    லேபில்களில் மின்னஞ்சல்கள் செய்தியை லேபிலில் அமைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளுக்கு அடுத்து உள்ள செக் பாக்ஸைக் கிளிக்  செய்து, பின் குறிப்பிட்ட லேபிலைக் கிளிக் செய்திடலாம். செய்தியைப் படிக்கும் போது, லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலை அமைக்கலாம்.  மெசேஜ் எழுதினால், அதனை அனுப்பும் முன் லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலிடலாம். லேபிலை நீக்க, வண்ணத்தை மாற்ற, அந்த லேபில்  அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். இங்கு ஒரு மெனு கிடைக்கும். இதில் வண்ணம் மாற்றுதல், பெயர் மாற்றுதல்,  போன்ற பல மாற்றத்தை மேற்கொள்ளலாம். எப்படி போல்டர்களுக்குள், துணை போல்டர்களை உருவாக்குகிறோமோ, அதே போல இங்கு  லேபில்களுக்கும், துணை லேபில்களை உருவாக்கலாம்.

    மெயில்களை வடிகட்டுதல் ஜிமெயிலில் நமக்கு வரும் எண்ணற்ற மெயில்களை வடிகட்டிப் பயன்படுத்த, இதற்கான வடிகட்டிகள் (filters) உதவுகின்றன.  இவற்றைப் பயன்படுத்தி, மெயில்கள் தாமாகவே, குறிப்பிட்ட லேபில்களில் இணையும்படி செய்திடலாம்; ஆர்க்கிவ் எனப்படும் இடங்களில்  பாதுகாக்கலாம்; அழிக்கலாம்; ஸ்டார் அமைத்து வேறுபடுத்தலாம் அல்லது மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்திடலாம். வடிகட்டிகளை உருவாக்குதல்:  இந்த filter எனப்படும் வடிகட்டியை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

    மெயில்களை வடிகட்டுதல் ஜிமெயில் தளத்தில் உள்ள சர்ச் பாக்ஸ் ஓரமாக உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். உங்களுடைய தேடல்  வகை என்ன என்று பெற்றுக் கொள்ள ஒரு விண்டோ காட்டப்படும். உங்களுடைய தேடல் வகையினை இதில் இடவும். உங்கள் தேடல் சரியாக  அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்திட சர்ச் பட்டனை அழுத்திக் கிடைக்கும் அஞ்சல் தகவல்களைப் பார்த்து உறுதி செய்திடவும்.

    சரியாக இருந்தது என்றால், இந்த சர்ச் விண்டோவில் கீழாக உள்ள Create filter with this search என்பதில் கிளிக் செய்திடவும். இனி இந்த வடிகட்டி  மூலம் என்ன செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என்று இங்கு தேர்ந்தெடுக்கவும். பலர், இவற்றை மெயில்கள் தாமாக, குறிப்பிட்ட லேபில் கீழ்  அமையும்படி அமைக்கின்றனர். இதனால், இன்பாக்ஸ் அடைபடாமல், மெயில்கள் தாமாக, தனி லேபில் பெட்டியை அடைகின்றன. நமக்கு நேரம்  கிடைக்கையில் இவற்றைத் திறந்து பார்க்கலாம். இதற்கு Skip the Inbox (Archive it) and Apply the label என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.  இப்படியே பலவேறு வேலைகளுக்கான வடிகட்டிகளை உருவாக்கலாம்.

    அடுத்து Create filter என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வடிகட்டி தயார். நீங்கள் வடிகட்டிகளைத் தயார் செய்தவுடன், அதில் செட் செய்ததற்கேற்ற  மெயில்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டு, அந்த அந்த பிரிவுகளில் ஒதுங்கும். ஏற்கனவே கிடைக்கப்பட்ட மெயில்களும் அந்த வகையில் இருந்தால்,  அவையும் ஒதுக்கப்படும்.

    ஆனால், செயல்பாடுகள் பின்னால் வரும் மெயில்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து  வரும் மெயில்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு பார்வேர்ட் செய்யும்படி வடிகட்டி ஒன்று அமைக்கப்பட்டால், அமைக்கப்பட்டதற்குப் பின்னர்  வரும் மெயில்கள் மட்டுமே பார்வேர்ட் செய்யப்படும்.

    கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுத்தார்கள்.... ரஜினிக்கு அது கூட இல்லை...

    By: Unknown On: 02:43
  • Share The Gag



  •  பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம், ‘16 வயதினிலே‘. எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ரஜினி பேசியதாவது: அந்த காலத்தில் ‘16 வயதினிலே‘ படத்தை 5 லட்ச ரூபாயில் தயாரித்தார் ராஜ்கண்ணு. அது சாதாரண விஷயம் இல்லை. படத்தை வாங்க அப்போது யாரும் வரவில்லை. துணிச்சலுடன் அவரே ரிலீஸ் செய்தார். பெரிய வெற்றி பெற்றது. அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவி பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.


    இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை தயாரித்தார். பிறகு படம் தயாரிக்கவில்லை. சுயமரியாதை அதிகம் இருந்தால் சினிமாவில் இருப்பது கஷ்டம். ராஜ்கண்ணு கஷ்டத்தில் இருந்தாலும், சுயமரியாதை மிகுந்தவர். இவ்வாறு ரஜினி பேசினார். பிறகு கமல்ஹாசன் பேசும்போது, ‘‘16 வயதினிலே‘ படத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள்தான் அதிகம். அதையெல்லாம் மீறி தயாரிப்பாளருக்கு தங்க கிரீடமே வைத்து விட்டார்கள் ரசிகர்கள். நானும், ரஜினியும் அன்று முதல் இன்றுவரை நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதன் பெருமை எங்களையே சேரும்‘ என்றார்.



    ரஜினி சம்பளம் 3 ஆயிரம் ரூபாய்: பாரதிராஜா பேசும்போது, ‘இந்தப் படத்தில் கமலுக்கு சம்பளம் 27 ஆயிரம் ரூபாய். பரட்டை கேரக்டரில் நடிப்பதற்காக ஆள் தேடியபோது, ரஜினி கிடைத்தார். 5 ஆயிரம் சம்பளம் கேட்டார். 3 ஆயிரம் பேசி, 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தோம். 500 ரூபாய் பாக்கி இருக்கிறது. இதன் ஷூட்டிங்கில் கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுப்பார்கள். ரஜினிக்கு அது கூட தந்ததில்லை. அந்த நினைவுகள் இப்போது என் கண்முன் நிழலாடுகிறது. 



    இவ்வாறு பாரதிராஜா பேசினார். விழாவில் பாக்யராஜ், பார்த்திபன், சித்ரா லட்சுமணன், சத்யஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    “ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்!

    By: Unknown On: 02:18
  • Share The Gag

  • “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் இன்று தமிழகமெங்கும,ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது திருச்சிக்கு வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின்.


    சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆனால் இந்த படத்தின் இயக்குனரும் ,தயாரிப்பாளருமான மிஷ்கின், தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் அடிக்கும் பணியை செய்துவருகிறார்.


    4 - miskin poster



    சமீபத்தில் திருச்சிக்கு வந்த மிஷ்கின் பத்திரிகையாளர்களையும், சினிமா ரசிகர்களை சந்தித்து மனம் குமுறினார். அப்போது”இந்த படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷத்தை தருகிறது இந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை. என் கதையைக் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ‘முகமூடி’ என்ற தோல்விப்படம் கொடுத்த பண நெருக்கடி, மன நெருக்கடிகளுக்கிடையில் ‘முகமூடி’ படத்திற்கு பிறகு ஆறாவது படம் இயக்கும் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் கூட வரவில்லை. அதனால்தான் நானே இந்த படத்தை தயாரித்தேன்.



    ‘முகமூடி’க்கு பிறகு அடுத்த படம் எடுக்கலாம் என்று இருந்தபோது என்னை சுற்றி இருந்தவர்கள் நிறைய பேர் மஞ்ச சேலை, ரோஜா நிற சேலையில் இரண்டு கிளுகிளுப்பு பாட்டு ,கதைக்கு சம்பந்தமே இல்லாத காமெடி ட்ராக் இந்த வகையாறாவில் ஒரு படம் இயக்க சொன்னார்கள். ஆனால் நான் என்னை சமரசம் செய்து கொள்ளவில்லை. என் அலுவலகத்தை அடமானம் வைத்துதான் இந்த படத்தின் கதையையே எழுதினேன். உலகத்தில் அதிகமான கதையம்சம் கொண்டது ராமாயணமும், மகாபாரதமும்தான்.



    ஹாலிவுட் தரத்தில் படம் இயக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த படத்தை நான் ஒரு பாட்டு கூட இல்லாமல் இயக்க முக்கிய தூண்டுகோலாய் இருந்தது. நான் இந்த படத்தை எனக்கான சுய பரிசோதனை முயற்சியாகத்தான் எடுத்து கொண்டேன். இந்த படத்தில் ஒரு காதல் சீன் வைக்க கூட இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் எனக்கு 42 வயதாகிறது; நான் மரத்தை சுற்றிவந்து டூயட் எல்லாம் பாட முடியாது. அதனால் படத்தில் டூயட் இல்லை. முதல் படத்தில் தெரியாத்தனமாக வைத்த குத்து பாட்டு தெரியத்தனமாக ஓடிபோச்சு. அடுத்த படத்திலும் தயாரிப்பாளரின் வற்புறுத்தலின் பேரில் வாய்த்த குத்து பாட்டு பயங்கர ஹிட் அடித்து, என்னை எல்லோரும் குத்துபாட்டு இயக்குனர் என அழைக்க ஆரம்பித்தார்கள். அது எனக்கு நாகரிகமாகப்படவில்லை.


    இந்த படத்திலும் குத்து பாட்டில்லை என்றால் பெட்டி வாங்க மாட்டோம் என சொல்லிவிட்டார்கள். இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு நான் ‘நந்தலாலா’ தந்த அனுபவத்தால் போட்டு காட்டவில்லை. ஆனால் அதையும் மீறி ரிலீஸ் ஆனது பத்திரிகையாளர்களின் நேர்மையான பாராட்டுகளால்தான். இந்த கதையில் யாருமே ஓநாய் பத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் என தெரியும். அதனால்தான் என் கதையை நம்பி நானே களத்தில் இறங்கினேன்.


    இதுவரை 6 படம் செய்துருக்கிறேன். ஒரு கோடி ரூபாய்க்கு கூட இந்த படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. என்னுடைய 6 படங்களையும் பாருங்கள் ஒரு படத்திலாவது ஏதேனும் ஒரு பெண்ணை மோசமாக காட்டியிருக்கிறேனா? வயது குறைந்த இளைஞர்கள், வயதானவர்களை கிண்டல் பண்ணும் காட்சி இருந்திருக்கிறதா ? அவ்வளவு கண்ணியமாக படம் எடுத்ததுக்கு எனக்கு கிடைத்த பரிசுதான் இது.



    ஒரு கோடி ரூபாய்க்கு கூட சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. நல்ல படங்களை எடுக்கவேண்டும் என நினைத்தது தப்பா? இந்த படத்திற்காக 107 கிலோவில் இருந்து 87 கிலோவாக எடை குறைந்திருக்கிறேன். கடைசியில் இந்த படத்தை யாருமே வாங்கவில்லை. 30 லட்ச ருபாய்க்காக நாய் மாதிரி அலைந்தும் கடன் கிடைக்கவில்லை. முதல் நாள் 30 லட்ச ருபாய் கொடுக்காததால் 10 தியேட்டர்களில் எனது படத்தை எடுத்துவிட்டார்கள். சரி என நம்பிக்கை இழந்து மீண்டும் தெருவுக்கே வந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.




    அந்த ஒரே காரணத்தால்தான் இன்று ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன்வாங்கித்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின்.

    “சரக்கடி நண்பா நீ சரக்கடி” சந்தானத்தின் குரலில் உருவான பாடல்!!!

    By: Unknown On: 01:09
  • Share The Gag

  • நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன் முறையாக முழுப்பாடலை பாடியுள்ளார். 


    ஸ்ரீகாந்த்- சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நம்பியார் என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார்.
     


    விவேகாவின் எழுத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் பாடி அசத்தி உள்ளார்.
    சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா, இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார்.



    ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள்.



    நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கதைக்களம், அதற்காக வெறும் நகைச்சுவையை மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல.


    சந்தானம் சார் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.


    படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, விஜய் அண்டனி சார் சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார்.
    சந்தானம் மறுத்துவிடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட வந்துவிட்டார்.


    ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொடுத்துவிட்டார்.


    'ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி' என்று ஆரம்பிக்கும் வரிகள்.
    மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம் அந்த காட்சியை.


    அதுவரை தன் நண்பர்கள் தண்ணியடித்தால் கோக்கை வாங்கி வைத்துக்கொண்டு கம்பனி கொடுக்கும் ஸ்ரீ முதல்முறையாக தண்ணியடிக்கும் சங்கடமான சூழ்நிலை.


    இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு செமையா பொருந்தி வந்திருக்கு என்று தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீகாந்த் கூறுகையில், சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக்கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார்.


    அவரது நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்றும், சந்தானத்துக்கு நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.