Monday 14 July 2014

விக்ரம் பிரபுவுடன் இணையும் விஜய்!

By: Unknown On: 21:22
  • Share The Gag
  • கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை தந்தாலும் ஒரு நிலையான இடத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்.

    இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் ரிலிஸான அரிமாநம்பி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது மட்டுமின்றி, நல்ல வசூலையும் செய்தது. அடுத்து இவர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தை ‘ராடன்’ நிறுவனம் சார்பாக ராதிகா தயாரிக்கிறார். இதில் இவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பணியாற்றயிருக்கின்றனர். இது காதல் கதையம்சம் கொண்ட கதையாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித்திற்கு ஒரு வாரம் தான் கெடு!

    By: Unknown On: 21:13
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர் எப்போதும் தன் உண்டு, தான் வேலையுண்டு என்று இருப்பவர்.

    சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு கூட விருது பட்டியலில் அவர் பெயர் இருந்தும் வரவில்லை. அஜித்திற்கு விருப்பம் இல்லை என்றாலும், தற்போது எங்கும் அஜித் ‘தல’ காட்டாமல் இருப்பதன் காரணம் கௌதம் தானாம்.

    ஆம், கௌதம் இயக்கும் படத்தில் இளைமயான தோற்றத்தில் அஜித் வருகிறாராம், அதுவும் ஒரே வாரத்தில் தல-55 டீம் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவேண்டியதால் தற்போது ஜிம்மிலேயே நாள் முழுவதும் இருக்கிறாராம்.

    கண்டிப்பாக இது தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

    ஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்..!

    By: Unknown On: 18:49
  • Share The Gag
  • விருதுப்பட்டி, தமிழ் நாட்டில்  எத்தனை பேருக்கு இந்த ஊரை தெரியும் என தெரியவில்லை. ஒரே ஒரு மனிதனால் இந்த பட்டியின்  மேல்  இந்தியா மக்களின் பார்வை பட்டது. அவர் தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். அந்த பட்டி அவர் பிறந்த சில நாட்களுக்கு பிறகு நகர் ஆனது. அது தான் தற்போதைய விருதுநகர். காமராஜர் ,விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார்.

    தொடக்ககால வாழ்க்கை

    1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

    படிப்பு 

    ”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார். 

    சிறை


    காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராசு சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.


    அரசியல்

    மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

    தமிழக ஆட்சிப் பொறுப்பு

    1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

    1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

    வித்தியாசமான அமைச்சரவை

    காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

        மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

        தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

        அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)

        அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

    முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

     அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

     கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
     காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

    அகிலஇந்திய காங்கிரசு தலைமை

    மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
     கல்விக்கண் கொடுத்தவர்

    ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

    “தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

    “எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

    “பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

    “ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

    உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.

    அணைக்கட்டுகள்

    காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.நெல்லை மாவட்டம்தாமிர பரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    தொழில் நிறுவனங்கள்

    காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

    இறுதிக் காலம்

     இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

    கருவை உண்டாக்க அல்லது கருக் கலைப்பு செய்ய உதவும் மைக்ரோசிப்!

    By: Unknown On: 18:29
  • Share The Gag
  • மருத்துவ உலகம் ரொம்ப அட்வான்ஸாகி வந்தாலும் தாய்மை என்பது என்றுமே கடவுளின் அற்புதம்னு சில பேர் கூறினாலும் – டெஸ்ட் டியூப் குழந்தை சமாச்சாரம் இப்ப தெருவுக்கு தெரு ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் வடிவில் இந்தியாவில் உதயமாகிறது. இப்ப அந்த அதிசயத்தை விட குழந்தை வேண்டும் வேண்டாம்னு ஒரு பட்டனை தட்டினா போது உங்க மனைவி கர்ப்பம் ஆகுறதும் வேண்டாம்ங்கிறதும் உங்க கையில………..!

    ஆம் அமெரிக்காவின் மைக்ரோசிப்ஸ் என்னும் நிறுவனம் ஏற்கனவே சரியான நேரத்துக்கு உடலுக்குள் மருந்ந்தை செலுத்தும் மைக்ரொசிப்களை கண்டுபிடித்ததை பற்றி கூறியிருந்தேன் இப்போ ஒரு படி மேலே போய் கருத்தரிப்பு மைக்ரோ சிப்களை கண்டுப்பிடிச்சிருக்காங்க. இதனை கீழ் வயிறு / கைகளின் மேல் பகுதி அல்லது பின்புற பகுதிகளில் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி கொண்டால் எப்ப எப்ப கருத்தரிக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களோ அப்பல்லாம் உடனே ஒரு பட்டனை தட்டினா போதும் –

    இந்த மைக்ரோசிப் levonorgestrel என்னும் சுரப்பியை ரிலீஸ் செய்யும் உங்க உடம்பில் அப்ப கருத்தரிப்பு ஏற்ப்படாது. சரி குழந்தை பெற்று கொள்ளலாம்னு நினைக்கிறவங்க அன்னைக்கு பட்டனை அழுத்தாமல் இருந்தால் குழந்தை பெற முடியும். இதை ஒரு முறை உடலில் பொருத்தி கொண்டால் 16 வருஷம் வேலை செய்யும் – இதுக்கு தேவையான பேட்டரி அதுக்குள்ளேவே இருக்கு அதனால் ஒரு பிரச்சினையும் இல்லையாம்.

    தமிழில் கலக்கும் சமந்தா..!

    By: Unknown On: 18:17
  • Share The Gag
  • கௌதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா.

    தற்போது முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் மூன்று படங்களின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்குகிறார்.

    லிங்குசாமி இயக்கத்தில் சூர்யவுடன் சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் 'அஞ்சான்'. இப்படம் ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பு உறுதியாகக் கூறுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் சமந்தா நடிக்கும் படம் 'கத்தி'. விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. தீபாவளி வெளியீடாக இப்படம் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

    'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் படம் 'பத்து எண்றதுக்குள்ள'. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடி சேருகிறார் சமந்தா. இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

    மூன்று படங்களுமே முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் படம் என்பதால் தமிழில் சமந்தா மீண்டும் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

    சென்சார் ஆனது வேலையில்லா பட்டதாரி..!

    By: Unknown On: 18:09
  • Share The Gag
  • பல நாட்களாக தணிக்கைக்குழு சான்றிதழுக்காக காத்திருந்த 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு தற்போது தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

    தனுஷ் தயாரிப்பில் வேல்ராஜ் இயக்கித் திரைக்கு வரக் காத்திருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி' . தனுஷ், அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை அனிருத்.

    படத்தின் வெளியீடு ஜூலை 18 என அறிவித்த நிலையில் தணிக்கைக் குழுவின் சான்றிதழுக்காக பல நாட்களாக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தணிக்கைக் குழு தரப்பில் ஏற்பட்ட ஆட்கள் பற்றாகுறை காரணமாக பல படங்கள் சென்சார் சான்றிதழை எதிர்நோக்கி ரிலீஸ் தேதியைக் கூட அறிவிக்காமல் காத்திருந்தன.

    அவற்றில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படமும் ஒன்று . தற்போது படத்தை பார்த்த தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

    இப்படம் முன்பே அறிவித்த படி ஜூலை 18ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 330 திரையரங்குகளில் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்' இப்படத்தை வெளியிட உள்ளனர்.

    ஆம்பள விஷால்..?

    By: Unknown On: 18:03
  • Share The Gag
  • பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பான 'பூஜை' படத்தில் நடித்து வருகிறார்.

    விஷாலுடன் , சத்யராஜ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்த படம் முடிந்தவுடன், சுந்தர் சி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அறிந்ததே.

    படத்திற்கு 'ஆம்பள' எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் கதையை கேட்ட விஷால் உடனே ஒப்புக் கொண்டாராம். காரணம் படத்தின் பெயரைப் போன்றே கதையும் ஆக்‌ஷன் படமாம்.

    இந்த படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க இருக்கிறார். சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்த படத்திலும் ஒரு நடிகர் பட்டாளம் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்திற்கு மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    சென்சாருக்குக் காத்திருக்கும் 15 தமிழ்ப் படங்கள்!

    By: Unknown On: 08:09
  • Share The Gag
  • சென்சார் போடு  ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை மட்டும் 380 படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் கொடுத்துள்ளது. ஆனாலும், இன்னும் பல படங்கள் சென்சார் ஆகாததால் ரிலீஸ் ஆகவில்லை.

    தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' ,கார்த்தியின் 'மெட்ராஸ்' , ஜெயம் ரவியின் 'பூலோகம்', மற்றும் விஜய் ஆண்டனியின் 'சலீம்' ஆகிய படங்களும் தணிக்கை சான்றிதழுக்காக வரிசையில் காத்திருக்கின்றன.

    ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு முதல் ஏழு படங்கள் வரை வெளியாகி வருகின்றன. ஆனால், இத்தகைய படங்களை தணிக்கை செய்யும் அளவுக்கு  சென்சார் அமைப்பில் ஆட்கள் இல்லை.

    ஆள் பற்றாக்குறையால் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல படங்கள் சென்சார் ஆகாமல், ரிலீஸ் தேதியைக் கூட அறிவிக்க முடியாத நிலையில் உள்ளன. 'வேலையில்லா பட்டதாரி' படம் ஜூலை 18ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொறுப்பாளர் டி.சிவா அரசுக்கு  ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் 15 படங்கள் தற்போது தணிக்கைக் குழுவின் சான்றிதழுக்காக காத்திருப்பதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கும் படியும் தெரிவித்துள்ளார்.

    தணிக்கை தரப்பில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாகுறை பிரச்னையையும் விரைந்து தீர்க்கும்படியும் அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.