Friday 11 July 2014

ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார்

By: Unknown On: 22:14
  • Share The Gag
  • ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே! மக்களே!! மக்களே!!!
    Bank ATMஅவசியம் படியுங்கள்…!!! நவீன திருடர்கள்…!!!
    ATM – ல் புதுவித திருடர்கள் அராஜகம் ஆரம்பித்துள்ளது. தனியார் டிவியில் சொன்னபடி கேரளாவில் இது போன்ற நூதன திருட்டு 300 முறைக்கும்மேல் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளதாம்…!

    ATM சென்டர்க்குள் நாம் நுழையும் முன் ஒருவர் இருப்பார் MINI Stmt / Balance பார்த்துகொண்டு அல்லது வேறு எதையோ செய்து கொண்டிருப்பார்… நம்மை பார்த்ததும் எதோ பிரச்சினை போல நீங்க எடுங்க என்று அவர் வெளிலே போகாமல் உள்ளேயே தான் இருப்பார் (காரணம் அவர் முன்னே வந்தவர்) – பின்னவர் பணம் மெசினை விட்டு வெளியே வந்ததும் எடுத்து கொண்டு ஓடி விடுகிறார்… (பணத்தின் அளவை பொருத்து)…

    1. தயவு செய்து Security இருக்கும் ATM மையத்திற்கு செல்லுங்கள்.
    2. உள்ளே மற்ற ஆள் இருக்கும்போது உள்ளே நுழைய வேண்டாம் – அவர் வெளியே அனுப்பி விட்டு பணம் எடுங்கள்.
    3. தனிதாக , ஊருக்கு ஒதுக்கு புற ATM மையத்திற்கு செல்ல வேண்டாம்.
    4. அதிக பணம் எடுக்கும்போது துணைக்கு ஒருவருடன் செல்லவும்.
    5. பணம் எடுத்ததும் வெளியே வந்து எண்ணி பார்க்க வேண்டாம்.
    6. ATM / Bank வாசலில் உங்கள் கவனத்தை திசை திருப்ப தெரியாதவர் பேசினாலோ / எதையாவது வீசினாலோ கவனம் சிதறாமல் இருக்கவும்.
    7. பெண்கள் கவனமாக இருக்கவும் – கழுத்தில் கத்தி போன்றவை வைத்து மிரட்டினால் கொடுத்துவிடுங்கள்.. பிறகு எப்படியும் மாட்டி கொள்வார்கள்.
    8. தனியாக உள்ள இடத்தில இரவு / அதிகாலை நேரத்தில் பணம் எடுக்க செல்ல வேண்டாம்.
    9. சிறு பிள்ளைகளை வண்டியில் தனியாக உட்காரவைத்திவிட்டு ATM மினுள் போகவேண்டாம்.
    10. ஏதேனும் பிரச்சனை / சந்தேகம் என்றால் உடனே வங்கியை தொடர்புகொள்ளவும்…!
    விழிப்புடன் கூடிய பாதுகாப்புடன் இருங்கள்…!

    உத்தம வில்லன் டீஸரை பார்த்து கடுப்பான கமல்..!

    By: Unknown On: 21:48
  • Share The Gag
  • தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் உத்தம வில்லன் டீஸர் வெளியிடப்பட்டது.

    ஆனால் டீஸரை பார்த்த அனைவரும் இது நிஜாம் பாக்கு விளம்பரத்தின் காப்பி என்று கண்டு பிடித்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்திடம் உத்தம வில்லன் டீஸரை வாபஸ் வாங்கும்படி சொல்லியிருக்கிறார்.

    கமல்ஹாசன் கேட்டதற்கு இணங்க, ரமேஷ் அரவிந்தும் டீஸரை வாபஸ் பெற்றுவிட்டார்.

    உத்தம வில்லன் டிரைலரை திருப்திகரமாக எடுக்கவில்லை என்று கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்திடம் கூறியதாக தெரிகிறது.

    அதேபோல் டிரைலரை தயாரித்த படக்குழுவினருக்கும் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதனால் டீஸரை தயாரிக்கும் பணியில் கமல்ஹாசனே தற்போது ஈடுபட்டுள்ளார். இன்னும் ஒரு சில தினங்களில் கமல் மேற்பார்வையில் தயாரித்த உத்தம வில்லன் படத்தின் டீஸர் வெளியாகும் என கூறப்படுகிறது.


    விஜய் விருந்தில் சூர்யாவை அவமானப்படுத்திய முருகதாஸ்!

    By: Unknown On: 21:32
  • Share The Gag
  • நடிகர் விஜய் பங்கேற்கும் விழாவில் தான் அமைதியாக இருப்பார். ஆனால் அவர் வைக்கும் தனிப்பட்ட பார்ட்டியில் செம்ம குஷியாகிவிடுவாராம். அந்த அளவிற்கு தன் நண்பர்களிடம் நன்றாக கலாட்டா செய்வாராம்.

    சமீபத்தில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்த விஜய், அவருக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் தான் அழைத்தாராம், அதில் முருகதாஸ், சூர்யாவும் கலந்துகொண்டுள்ளனர்.

    சூர்யா கொஞ்சம் தாமதமாக வர, இதுவரை இவர் வருவது முருகதாஸ்க்கு தெரியாதாம், சூர்யா வந்த அடுத்த கனமே யாரிடமும் சொல்லாமல் முருகதாஸ் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

    நன்றாக இருந்த இவர்களுக்குள் அப்படியென்ன பிரச்சனை என்று ஒன்றும் புரியாமல் அனைவரும் குழம்பி போயிருக்க, 7ம் அறிவு படத்திற்கு பிறகே இருவரும் பேசிக்கொள்வதில்லை என ஒரு நெருங்கியவட்டாரம் தெரிவிக்கின்றது.


    ராமானுஜன் படம் ஒரு காலப்பெட்டகம் - திரைவிமர்சனம்!

    By: Unknown On: 17:05
  • Share The Gag

  • இந்தியாவில் பிறந்து சூரியனாய் ஒளி வீசி, உலகமெங்கும் பாராட்டப்பட்ட கணிதமேதை ராமானுஜம், தனிப்பட்ட முறையில் பல கஷ்டக்களையும் அவமானங்களையும் நம் கண்முன்னே படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் ஞான ராஜசேகரன்.

    கணிதத்தில் உலகம் போற்றும் மேதையான ராமானுஜம் கல்லூயில் படிக்கும்போது கணிதம் தவிர மற்ற பாடங்களில் தோல்வியடைவதும். வேலை கிடக்காமல் அலைவதும் தற்கால கல்வி முறையில் இருக்கும் பலவீனங்களை காட்டுவதாக இருக்கிறது.

    பயோபிக்சர் எனும்போது சினிமாவுக்குறிய சில விசயங்களை நாம் எதிர்பார்க்கக்கூடாது. நடந்த சரிந்திர நிழக்வுகளை காட்டும்போது ஏற்படும் தவறுகளை வேண்டுமேனால் சுட்டிக்காட்டலாம், விறுவிறுப்பான திரைக்கதை இருக்கவேண்டும், ட்விஸ்ட்கள் இருக்கவேண்டும் போன்ற விசயங்களை நாம் எதிர்பார்க்கக்கூடாது, இயக்குனர்களும் திணிக்கக்கூடாது. அதை உணர்ந்து மிகத்தெளிவான திரக்கதையுடன் காலப்பெட்டகமாய் பாதுகாக்கும் விதத்தில் ராமானுடன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    நடிகர்களின் தேர்வு அபாரம். அபிநய் இனி மக்களால் ராமானுஜராகவே பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. சுகாசினி, நிழல்கள் ரவி, பாமா என எல்லோரும் அந்தக்கால கதாபாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள். வசனங்கள், ராமனுஜர் பாத்திரத்தின் கணிதம் பற்றிய விவரிப்புகள் ஆகியவை மிக நன்றாக இருக்கின்றன. சிறு சிறு குறைகள் இல்லாமல் இல்லை ஆனால் நாம் முன்கூட்டியே சொன்னதுபோல் இது போன்ற படங்களில் தன்மையை கணக்கிடும்போது குறைகளை எதுவும் கண்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது

    டீ - யில் இத்தனை வகையா?

    By: Unknown On: 08:04
  • Share The Gag
  • சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

    மசாலா டீ:ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமையான தேநீர்.

    ரோஸ் டீ:தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்கவும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக்கலாம்.

    கோகோடீ: குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்.

    இஞ்சி டீ:  அஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

    ஏலக்காய் டீ:ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும் போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உபயோகப்படுத்தலாம்.

    எலுமிச்சை டீ:நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ்கட்டிகளைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

    புதினா டீ:சில புதினா இலைகள், துளசி இலைகள், இவற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்து போட்டு நீரில் கொதித்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும்.. இது ஜலதோஷம் இருமல் இவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

    தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மீறினால் நரம்புகளையும் வயிற்றையும்  பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.