Friday 11 July 2014

Tagged Under: , ,

ராமானுஜன் படம் ஒரு காலப்பெட்டகம் - திரைவிமர்சனம்!

By: Unknown On: 17:05
  • Share The Gag

  • இந்தியாவில் பிறந்து சூரியனாய் ஒளி வீசி, உலகமெங்கும் பாராட்டப்பட்ட கணிதமேதை ராமானுஜம், தனிப்பட்ட முறையில் பல கஷ்டக்களையும் அவமானங்களையும் நம் கண்முன்னே படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் ஞான ராஜசேகரன்.

    கணிதத்தில் உலகம் போற்றும் மேதையான ராமானுஜம் கல்லூயில் படிக்கும்போது கணிதம் தவிர மற்ற பாடங்களில் தோல்வியடைவதும். வேலை கிடக்காமல் அலைவதும் தற்கால கல்வி முறையில் இருக்கும் பலவீனங்களை காட்டுவதாக இருக்கிறது.

    பயோபிக்சர் எனும்போது சினிமாவுக்குறிய சில விசயங்களை நாம் எதிர்பார்க்கக்கூடாது. நடந்த சரிந்திர நிழக்வுகளை காட்டும்போது ஏற்படும் தவறுகளை வேண்டுமேனால் சுட்டிக்காட்டலாம், விறுவிறுப்பான திரைக்கதை இருக்கவேண்டும், ட்விஸ்ட்கள் இருக்கவேண்டும் போன்ற விசயங்களை நாம் எதிர்பார்க்கக்கூடாது, இயக்குனர்களும் திணிக்கக்கூடாது. அதை உணர்ந்து மிகத்தெளிவான திரக்கதையுடன் காலப்பெட்டகமாய் பாதுகாக்கும் விதத்தில் ராமானுடன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    நடிகர்களின் தேர்வு அபாரம். அபிநய் இனி மக்களால் ராமானுஜராகவே பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. சுகாசினி, நிழல்கள் ரவி, பாமா என எல்லோரும் அந்தக்கால கதாபாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள். வசனங்கள், ராமனுஜர் பாத்திரத்தின் கணிதம் பற்றிய விவரிப்புகள் ஆகியவை மிக நன்றாக இருக்கின்றன. சிறு சிறு குறைகள் இல்லாமல் இல்லை ஆனால் நாம் முன்கூட்டியே சொன்னதுபோல் இது போன்ற படங்களில் தன்மையை கணக்கிடும்போது குறைகளை எதுவும் கண்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது

    0 comments:

    Post a Comment