Thursday 17 October 2013

Square Cash ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்!

By: Unknown On: 18:51
  • Share The Gag
  • தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தோற்றம் பெற்ற ஒரு சேவையாக ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை விளங்குகின்றது.

    தற்போது உள்ள ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் Paypal ஆனது பிரபல்யம் வாய்ந்ததாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் காணப்படுகின்றது. 

    இந்நிலையில் Paypal - ற்கு நிகரான Square Cash எனும் பிறிதொரு ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

    மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் இச்சேவையானது முதன் முதலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. 

    இதற்காக iOS மற்றும் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

    மேலும் இதன் மூலம் பயனர் ஒருவர் வாரம் ஒன்றிற்கு 2,500 டொலர்களை ஆகக்கூடுதலான தொகையாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


    Flipkart இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி S3 ரூ.19,499 விலையில் கிடைக்கும்!

    By: Unknown On: 08:08
  • Share The Gag


  • கடந்த ஆண்டு கொரியாவின் மிக சிறந்த ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3, இப்போது இணையத்தில் ரூ.20,000-க்கும் குறைவாக கிடைக்கின்றது. சாம்சங் தயாரிப்பாளர் ரூ.25,400-ல் விற்பனை செய்துகொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி S3 கடந்த வாரத்திலிருந்து கைப்பேசிகளின் விலை குறைத்துள்ளது.


    ஆனால் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart இணையதளத்தில் இப்போது ஒரு பெரிய தள்ளுபடி விலையில் கேலக்ஸி S3 விற்பனை செய்கின்றது. அதாவது இந்தியாவில் கேலக்ஸி S3 விலை ரூ.24,899-க்கு விற்பனை செய்தாலும் அதனை Flipkart இணையதளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் பரிமாற்றம் செய்துகொண்டால் மட்டுமே, ரூ.5,400 தள்ளுபடி செய்து ரூ.19,499 விலையில் வழங்கி வருகிறது.



    இந்திய சந்தையில் உத்தரவாத இழப்பு இல்லாமல் ரூ.19,499-க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. சாம்சங் கேலக்ஸி S3 தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர்-ல் இப்போதும் ரூ.25,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அமேசானில் சாம்சங் கேலக்ஸி S3 கைப்பேசி ரூ.23,950-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இது மற்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடம் சுமார் ரூ.25,000 விலையில் கிடைக்கின்றது.

    செவ்வாய் கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம்28ம் தேதி ஏவப்படுகிறது!

    By: Unknown On: 08:03
  • Share The Gag


  •  இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய்கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம் 28ம் தேதி அனுப்பப்படுகிறது. புவி வட்டப்பாதை வரை பி.எஸ்.எல்.வி, சி,25 ராக்கெட்டில் செலுத்தப்படும் இந்த விண்கலம் மங்கல்யான், அதன்பிறகு அதிலேயே பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மூலம் புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் நுழையும்.

    இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் ( இஸ்ரோ) சார்பில் இதுவரை 105 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் இந்திய  மற்றும் வெளிநாடுகளின் செயற்கை கோள்களை எடுத்துச்சென்று விண்ணில் நிலைநாட்டியுள்ளன. இதில் அதிகளவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன. கல்விப்பயன்பாடு, சுற்றுச்சூழல்பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, வாகனங்கள் கண்காணித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்திய செயற்கை கோள்கள் பெரிதும் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் ஏவும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

    அதற்காக மங்கல்யான் என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம், மற்றும் இதர துணை அமைப்புகள், பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட் ஆகியவை  ரூ.450 கோடியில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப்பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட் மூலம் மங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதை வரை கொண்டு செல்லப்படும். பின்னர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் இயங்கத்தொடங்கி, புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் வட்டப்பாதையில் விண்கலத்தை கொண்டு செல்லும்.

    இந்த ராக்கெட் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.  மங்கல்யான் விண்கலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழ முடியுமா போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். விண்கலத்தில்,  லைமேன் ஆல்பா போட்டோ மீட்டர், மீத்தேன் சென்சார் கருவி என்ற தட்பவெப்ப ஆய்வுக்கருவி, மார்ஸ் எக்சாஸ்பியரிக் காம்போசிஷன் அனலைசர் என்ற சுற்றுச்சூழல் ஆய்வுக்கருவி, மார்ஸ் கலர் கேமரா எனப்படும் செவ்வாயின் தரைத்தளங்களை படம் பிடிக்கும் கேமரா, டி.ஐ.எஸ் என்ற ஸ்பெக்ட்ரோ மீட்டர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆன்டனாக்கள், சோலார்பேனல்கள் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளன.

    பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட்டை நாளை 18 ம் தேதி விண்ணில் செலுத்துவதாக இருந்தது. ஆனால் திடீரென்று பைலின் புயல் தாக்கியதால் வானிலை நிலவரம் ராக்கெட் ஏவும் நிலையில் இல்லை. இதையடுத்து இஸ்ரோ மேற்கொண்ட ஆய்வுகளில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 19 வரையான கால கட்டங்களில் பருவநிலை சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்டோர் 28 ம் தேதி பி.எஸ்.எல்.வி சி,25 விண்ணில் செலுத்தப்படுகிறது.

    இதையொட்டி ராக்கெட்டின் இறுதி கட்டப்பணிகள் முழுவீச்சில் ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்து வருகின்றன. உதிரி பாகங்கள், உந்து இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு நிலை பணிகளும் முடிக்கப்பட்டு ஏவுதளத்துக்கு ராக்கெட் கொண்டு வரப்பட்டு, இதர பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    எக்ஸ்ட்ரா தகவல்

    செவ்வாய் கிரகத்தில் குடியேற உலக அளவில் 1.6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 8 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 87 பேர்.

    பெண்களுக்கு உதவும் நவீன சாதனம்!

    By: Unknown On: 07:55
  • Share The Gag

  • 16 - lady deviceநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிரித்து வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தனியாக செல்லும் போதோ, அலுவலகத்திலோ அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் காரணமாக அச்சம் இருக்குமானால் அதை பதிவு செய்யும் கருவி ஒன்றை தெற்கு தில்லியை சேர்ந்த யாஷ்பாட்டியா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

    தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்துள்ள இக்கருவி புளூடூத் தொழில் நுட்பத்தைக்க்கொண்டது. ஏழு கிராம் எடையுள்ள சதுர வடிவில் இருக்கும் இச்சாதனம் ரீச்சார்ஜபள் பேட்டரிகளை கொண்டது என தெரிவித்துள்ள்ளார். மேலும் இக்கருவியானது ரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாச விகிதம் போன்றவற்றையும் கண்டறிய உதவுகிறது.




    அதோடு இக்கருவியை பொருத்திக் கொண்ட பெண்களுக்கு வாழ்க்கையில் அச்சுறுத்தும் தருணங்கள் வரும் போது பயம் மற்றும் நடுக்கத்தை நீக்கி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் உடலியல் மாற்றங்களை கொடுக்கிறத. என்று பாட்டியா தெரிவித்தார்.



    பொது இடங்களில் திடீரென ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளும் பெண்கள் ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் இது உதவும். அதாவது பெண்கள் இந்த கருவியை பொருத்தியிருந்தால், அவர்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது இக்கருவியானது அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் செல் போனுக்கு மின் அணு மூலம் குறுந்தகவல் அனுப்பும் ஆற்றல் கொண்டது என பாட்டியா தெரிவித்துள்ளார்.


    Fear-sensing device to aid distressed women

    *********************************************


    Rise in crimes against women made 37-year-old south Delhi-based Yash Bhatia realise that protests alone don’t work. Putting himself in the shoes of the victims, the National Institute of Fashion Technology graduate has devised a sensor that records bodily changes that occur when a person is in a crisis.

    உங்கள் தெருவை 360 டிகிரி கோணத்தில் ஆன் லைனில் பார்க்கலாமா?

    By: Unknown On: 07:48
  • Share The Gag

  • அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தெருக்களை ‘லைவ்’வாக பார்க்க கூகுள் வசதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள தெருக்களையும் துல்லியமாக ‘லைவ்’ வாக காட்ட முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை அதை செய்ய முடியவில்லை. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் கூகுள் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், ஜெனிசிஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை இப்போது செய்துள்ளது. அதிலும் உங்கள் தெருவை அல்லது நீங்கள் போக வேண்டிய தெருவை 360 டிகிரி கோணத்தில் முபபரிமாணத்தில் பார்த்து, எந்த முகவரிக்கு போக வேண்டுமோ அதை அறிந்து கொள்ளலாம். அவ்வசதியை ‘வோனோபா’ (www.wonobo.com)-க்குள் நுழைய வேண்டுமாக்கும்..


    16 - Tec chennai_route

    இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ள ஜெனிசிஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய நகரங்களில் , பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட இடங்களில் ‘மேப்’பிங் செய்யும் பணிகளில் இறங்கி உள்ளது.தற்போது பெங்களூர், மும்பை, சென்னை உட்பட 54 நகரங்களில் இந்த நிறுவனம் ஒவ்வொரு தெருவையும் துல்லியமாக ஆன்லைனில் காட்டுவதற்கான ‘மேப்’பிங் ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் 42 நகரங்களில் உள்ள தெருக்களை ஆன்லைனில் துல்லியமாக பார்க்கும் வசதியை செய்ய உள்ளது. 




    அதிலும் ஒவ்வொரு தெருக்களை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பதுடன், அங்குள்ள ஓட்டல், தபால் அலுவலகம், வங்கி என்று மக்களுக்கு தேவையான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை தேடி பார்க்கலாம். குறிப்பிட்ட தெருவை ஆன்லைனில் கண்டுபிடித்து அதை பெரிதாக்கி, அங்குள்ள குறிப்பிட்ட ஓட்டல், அலுவலகம் போன்றவற்றை துல்லியமாக பார்க்கலாம். தகவல்களுக்கு www.wonobo.com வெப்சைட்டுக்கு போய் பார்க்கலாம்.


    INDIA’S FIRST AND ONLY 360-DEGREE VIEW PLATFORM: WONOBO.COM

    *******************************************


     Country’s leading geospatial solutions company Genesys International Corporation (NSE GENESYS) on Monday announced the launch of WoNoBo.com. Users will be able to search, explore and share ‘points of interest’ across the length and breadth of the country. At launch, the service will be available for 12 major Indian cities and will soon be expanded to 54 cities.