Friday 17 May 2013

ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்

By: Unknown On: 23:28
  • Share The Gag




  • கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா


     தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா?
      


           உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது.  




                 அறிவியல் பாடங்கள் அனைத்தும் ..டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.



                 பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.




          பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.





          மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக் கரம் நீட்டுகிறது.






    இணைய தளத்திற்குச் செல்ல http://www.learnerstv.com/

    Bio-Data தயாரிக்க அருமையான இணையதளம்

    By: Unknown On: 19:38
  • Share The Gag





  •     திறமையை தினந்தோறும் வளர்த்துக்கொண்டு மேம்படுத்துகிறோம். வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தெரிவிப்பது எப்படிஇவற்றைத் தெரிவிக்க அடிப்படையாக, ஒரு முகப்புப் பக்கத்தைபோல (Index page) இருப்பதுதான் பயோடேட்டா (Bio-Data).




        நமது திறமை என்ன தகுதி என்ன?  என்பன போன்றவை தெள்ளத்தெளிவாக நாம் விண்ணணப்பிக்கும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியவையும் இந்த பயோ-டேட்டாஅல்லது  Resume கள்பயோ டேட்டாவின் முக்கியத்துவம் வேலை தேடுபவர்களுக்குநன்றாகவே தெரியும்நல்ல பயோடேட்டாவை[ச் சார்ந்தே நல்ல வேலை கிடைக்கும் . பக்காவாக , பளிச்சென பயோ டேட்டா இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.




         ஒரு நல்ல பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி?  என்பது தான் பலருக்கும் தெரியாத விஷயம்இந்த குழப்பம் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.




         இப்படித்தான்பயோடேட்டா இருக்க வேண்டும் என்ற விதிகள் இல்லை. என்றாலும் ஒரு சிலர் பயோடேட்டா விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்து கொண்டு அதிக பக்கங்களில் பயோடேட்டாவை தயார் செய்கிறார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பலனை தராது. . கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத விஷயங்களை அதில் சேர்க்கக்கூடாது.




         அதேபோல பொய்யான தகவல்கள், கவர்ச்சிகரமான அம்சங்கள் இவைகளை தவிர்த்தல் நலம்இதனால் வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவன அதிகாரிகள் எரிச்சலடையாமல் இருப்பார்கள்.




    சரிஇப்படிப்பட்ட  Bio-dataவை எப்படி தயாரிப்பது? இதற்காகவே உள்ளது இத்தளம்.






         செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள இந்த தளம் உதவும். இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பயோடேட்டாவை சுலபமாக, எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும்.




         ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் குழப்பமே உங்களுக்குத் தேவையில்லை.   இத்தளமே அதை கையாண்டுகொள்கிறது.




        கல்வி தகுதி (Educational Qualification),  வேலை தேடுபவரின் நோக்கம் (Aim of Job Seeker), பணி அனுபவம் (Experience)  போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.




         பயோடேட்டாவை உருவாக்குவதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.  இதற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் கீழே இருப்பதைப் போன்று துறைவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.







    • Teacher Resume Samples
    • Nurse Resume Samples
    • Resume Samples for Manager
    • Retail Resume Samples
    • Accounting Resume Samples
    • Engineering Resume Samples
    • Military Resume Samples
    • IT Resume Samples



         உருவாக்கப்படும்  Resume  ஒரு பக்கம் அளவே இருந்தாலும் எளிமையாக, வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் அதிலேயே வந்து விடுகின்ற‌னஇந்த தளம் உங்கள் பயோடேட்டாவை சிறப்பாக உருவாக்கி த‌ருபவை. அதை சரியாக நிறைவேற்றுகின்றன.





          இந்த தளத்தின் மூலம் பக்காவான பயோடேட்டாவை சுலபமாக உருவாக்கி கொண்டு விடலாம்

            நீங்கள் இத்தளத்தின் மூலம் உருவாக்கிய பயோடேட்டாவை  Printசெய்துகொள்ளலாம்PDF  கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்வேலைக்குஇணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

       



          அதே சமயம் உங்கள் ப‌யோடேட்டாக்கள் வேலை தரும் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை பெறுவதற்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்குகிறது.  நமது தகுதிக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இத்தளத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.




            உங்கள் பயோ டேட்டாவை உருவாக்க நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://www.resumebaking.com/




    குறிப்பு


           இத்தளத்தில் சென்று உங்கள் -மெயில் , மற்றும் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்ட் கொடுத்து உங்களுக்காக கணக்கொன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். பிறகு தோன்றும் விண்டோவில் கேட்கும் விவரங்களை கொடுத்து தொடருங்கள். இது இலவச சேவையில்லை. குறைந்த பட்ச கட்டணத்தை வசூலித்துக்கொண்டு சேவையை தருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.



    இதிலிருக்கும்  Resume tips கள் அனைத்தையும் படிக்க  இந்த இணைப்பில்  செல்லவும்.


    Paypal கணக்கு துவங்குவது எப்படி?

    By: Unknown On: 00:25
  • Share The Gag







  •      இது வரை இந்தியர்கள்  Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது.
         


             இனிமேல் CreditCard  தேவையில்லை.  இந்தியர்கள் அதிகமாக Paypal பயன்படுத்துவதை உணர்ந்த அந்த நிறுவனம் புதிய கணக்குகளை துவங்குவதை எளிமையாக்கியுள்ளது.
     
           Paypal  கணக்கு துவங்குவத்கு CLICK HERE

    STEP 1: 


            Signup Today எனும் பொத்தானை அழுத்தவும்.
     

    STEP 2:

          “Business” எனும் மூன்றாவது பிரிவில் உள்ள “Get Started” எனும் பொத்தானை அழுத்தவும்.
    .


          Business
    கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் CreditCard வழியாக வரும் பணத்தைப் பெற முடியும்.


         
    நீங்கள் பிற முறையான “Personal” “Premier” வகையான கணக்குகளையும் ஆரம்பிக்கலாம்.

    .
    STEP 3:


        பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

    STEP 4:
     


        தங்களின் மின்னஞ்சளுக்கு ஒருverification link  அனுப்பப்படும்.

    STEP 5: 


        பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.

    STEP 6:


            இது தான் மிகவும் முக்கியமான படி., Status: Unverified Get verified   இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவும். 


     


    Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு மேல் பரிவர்த்னை செய்ய இயலும்.


    STEP 7: 


            “Add Bank Account” எனும் பகுதியில் சென்று பின்வரும் விவரங்களைக் கொடுக்கவும்.


    Account Number:



    Account Holder Name:
     
     


         உங்களின்paypal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.


    NEFT IFSC Code: 


          இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.


    http://bankifsccode.com/


    http://www.indian-banks.info/



    STEP 8:


         பிறகு “Add Bank Account” எனும் பொத்தானை அழுத்தவும்.

    STEP 9:  


             Paypal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்ணைகளை நிகழ்த்தும்.   அந்தப் பரிவர்த்ணைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். 


        பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்று மூன்று இலக்க மதிப்பில் இருக்கும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுக்கவேண்டும்
     
     
     
     

         அவ்வளவுதான், நீங்கள் இனி இணையம் வழியாக யாரிடமும் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாம். அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.