Friday 17 May 2013

Tagged Under:

ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்

By: Unknown On: 23:28
  • Share The Gag




  • கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா


     தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா?
      


           உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது.  




                 அறிவியல் பாடங்கள் அனைத்தும் ..டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.



                 பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.




          பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.





          மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக் கரம் நீட்டுகிறது.






    இணைய தளத்திற்குச் செல்ல http://www.learnerstv.com/

    0 comments:

    Post a Comment