Wednesday 28 August 2013

Tagged Under: ,

பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்!

By: Unknown On: 17:04
  • Share The Gag

  • இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம்.

    இந்த வரிசையில் முதல் பதிவான
    பாஸ்வேர்டு குணாதிசயங்களில்பாஸ்வேர்டுக்கான இலக்கன குறிப்புகளை காணலாம்.மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் பாஸ்வேர்டு தொடர்பான பயனுள்ள தளங்களின் வரிசையில் முதல் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

    பாஸ்வேர்டு பரிசோதனை.

    பாஸ்வேர்டு பற்றி தெரிந்து கொண்டாயிற்று!. அடுத்து உங்கள் பாஸ்வேர்டு எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்த கேள்விக்கு பதில் தருகிறது, இதே கேள்வியை பெயராக கொண்ட இணையதளம்: ஹவ் செக்யூர் ஈஸ் மை பாஸ்வேர்ட்?
    இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உங்கள் பாஸ்வேர்டை சமர்பித்தால், அதன் பல்வேறு அம்சங்களை அலசி பார்த்து அந்த பாஸ்வேர்டு எந்த அளவுக்கு பாதுகாப்பாடது என இந்த தளம் அறிக்கை தருகிற‌து.

    நேர்மையான தளம்.

    மிகவும் எளிமையான தளம். உங்களை பாஸ்வேர்டின் தன்மையை பரிசோதித்து சொல்லும் இந்த தளம் கொஞ்சம் நேர்மையானதும் கூட! பாஸ்வேர்டை சமர்பிக்கும் முன் கொஞ்சம் யோசிக்க சொல்கிறது இந்த தளம். ‘இந்த தளம் உங்கள் பாஸ்வேர்டை திருடிக்கொள்ளலாம்’ என்னும் எச்சரிக்கை வாசகம் முகப்பு பக்கத்திலேயே இடம் பெறுகிறது.இப்படி அதிர்ச்சி அளித்தாலும், இல்லை ,நாங்கள் அதை செய்யப்போவதில்லை,ஆனால் உங்கள் பாஸ்வேர்டை எங்கே எல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் என்று அறிவுறுத்துகிற‌து.

    பாஸ்வேர்டு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனும் இந்த குறிப்பை படித்த பிறகு இதில் பாதுகாப்பு சோதனைகாக பாஸ்வேர்டை சமர்பித்து பார்க்கலாம்.அல்லது, உண்மை தான் ,எதற்கு ரிஸ்க் என்று பாஸ்வேர்டை சமர்பிக்காம‌லும் இருக்கலாம்.

    எப்படி பார்த்தாலும்,பாஸ்வேர்டு எளிதில் கள‌வாடப்படலாம் என அறிந்திருப்பதே முக்கியம்.
    ———-
    https://howsecureismypassword.net/

    0 comments:

    Post a Comment