Wednesday 25 September 2013

Tagged Under: ,

7-வது ஊதியக்குழு நியமனம் : பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு..!

By: Unknown On: 21:36
  • Share The Gag



  •  மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இடையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மட்டும் விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தப்படுவது வழக்கம். இதுவரை 6 சம்பள கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக, 6வது சம்பள கமிஷன் கடந்த 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது.


    இது தனது அறிக்கையை கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசிடம் கொடுத்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதங்கள் உயர்த்தி வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு நிலுவை தொகை வழங்கப்பட்டது இதை தொடர்ந்து, மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு 6வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பள விகிதங்களை மாற்றி அமைத்தன.



    6வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில், 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஊழியர்கள் சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.



    மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஜனவரி 1ம் தேதி முதல் 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Seventh Pay comission aoopinted by Prime minister Manmohan singh
     

    0 comments:

    Post a Comment