Friday 27 September 2013

Tagged Under: , ,

புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!

By: Unknown On: 18:02
  • Share The Gag


  • உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.



    அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.



    சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும்.



    குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணினி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



    இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியாளரும், கணிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில்,


    “புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த கார்பன் நானோடியூப், சிலிக்கானைவிட சிறப்பானது என பேசப்பட்டு வந்தது.



    அந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், அந்த கணினியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் அமைந்துள்ளன’ என்றார்.


    0 comments:

    Post a Comment