Sunday 22 September 2013

Tagged Under:

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது!

By: Unknown On: 11:13
  • Share The Gag

  • இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடித்தது.இதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.

    sep 22 - srilanka. TAMIL

     


    இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது. தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது. இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்கள் அடங்கி உள்ளன.
    வடக்கு மாகாண கவுன்சிலில் மொத்தம் 36 உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஓட்டு போட்டனர். 


    பெரும்பாலான வாக்காளர்கள் நெற்றியில் விபூதி–குங்குமம் வைத்து ஓட்டுப்போட காத்து நின்றதை பார்க்க முடிந்தது. ‘‘தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் சொந்த மண்ணை எங்களிடமே திருப்பித்தர வேண்டும். இங்கு நாங்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை வேண்டும்’’ நல்லூர் வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்திருந்த 4 குழந்தைகளின் தாயாரான கோபால சுதந்திரன் புஷ்பவல்லி நிருபர்களிடம் கூறினார். 


    இந்நிலையில் மொத்தம் உள்ள 36 ‌இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சேவின் ‌ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சிக்கு 7 இடங்கள் மட்டும் தான் கிடைத்தது. இலங்கை முஸ்லீம் கட்சி 1 இடத்தை பிடித்தது. தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.


    Tamil party sweeps Sri Lanka’s regional vote

    ****************************************


     Sri Lanka’s main Tamil party has scored a landslide victory in the first semi-autonomous council elections in the island’s north after decades of ethnic war.The Tamil National Alliance (TNA) swept all five districts in the Northern Provincial Council which went to the polls on Saturday, the department of Elections results showed on Sunday.

    0 comments:

    Post a Comment