Tuesday 10 September 2013

Tagged Under:

'நன்மைக்கு நன்மையே நடக்கும்;.........குட்டிக்கதை

By: Unknown On: 22:00
  • Share The Gag


  • ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..

    'ஆ' என எதிரொலியும் கேட்டது...

    கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..

    'யார் நீ 'என்றான்.

    பதிலுக்கு 'யார் நீ' என்று கேட்டது...

    'உன்னை பாராட்டுகிறேன்; என்றான்.

    அதுவும் அப்படியே கூறிற்று.

    அப்பாவிடம் கந்தன்..'அப்பா..என்னது இது;என்றான்.

    அவன் அப்பா சொன்னார்..'கந்தா..இதன் பெயர் எதிரொலி' ஆகும். உண்மையில் நாம் என்ன சொல்கிறோமோ..அதையே இது திரும்பச்சொல்லும்.

    நீ இப்போது..'நீ சொல்கிறபடி செய்கிறேன்' என்று சொல் என்றார்..

    கந்தனும் ..அப்படியே சொல்ல..திரும்ப எதிரொலியும் 'நீ சொல்கிறபடி செய்கிறேன் 'என்றது.

    கந்தா...இதிலிருந்து தெரிந்து கொள்..நல்லதோ..தீமையோ எது நாம் செய்தாலும் அதுவே நமக்குத் திரும்ப நடக்கும்.

    இதைத்தான் இந்த எதிரொலி உணர்த்துகிறது.

    ஆகவே எப்போதும் நாம் அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்றார்

    0 comments:

    Post a Comment