Friday 6 September 2013

Tagged Under:

கேரள கோயில்களில் உள்ள தங்கம் பற்றி விபரம் கேட்கிறது ரிசர்வ் வங்கி!

By: Unknown On: 21:39
  • Share The Gag

  • திருவனந்தபுரம் : கேரள கோயில்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கேரள கோயில் கழகத்திற்கு ரிசர்வ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

     
    ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள கடிதம் குறித்து குருவாயூர் தேவஸ்தான் போர்டு தலைமை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் இந்த வேண்டுகோள் குறித்த தகவல் கோயில் மேலாண்மை குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளோம்; கோயில்களின் விதிமுறைகளின் அடிப்படையில் மேலாண்மை குழு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரி தெரிவித்துள்ளார். 
     


    கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்கள் 5 விதமான தேவஸம் போர்டுகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் திருவாங்கூர் தேவஸம் போர்டு தான் பெரியது. கேரளாவின் பிரபலமான வழிபாட்டு ஸ்தலமான சபரிமலை, திருவாங்கூர் தேவஸம் போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தை உறுதி செய்த ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சலிம் கங்காதரன், புள்ளி விபர சேகரிப்பு அடிப்படையிலேயே இந்த தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும், கேரள கோயில்களில் உள்ள தங்கத்தை வாங்கும் திட்டம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

     திருவனந்தபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட்டு அறிக்கை சம்ர்ப்பிக்க 2011ம் ஆண்ட ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 5 அறைகள் திறக்கப்பட்டு அவற்றின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த விலைமதிப்பற்ற நகைகளை மதிப்பீடு செய்தனர். இருப்பினும் பி அறை இதுவரை திறக்கப்படவில்லை. 5 அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. பத்மநாபசுவாமி கோயில் கருவூலத்தை போன்ற மற்ற கோயில்களில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை கண்க்கிடவே ரிசர்வ் வங்கி, இந்த தகவலை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    0 comments:

    Post a Comment