Sunday 8 September 2013

Tagged Under:

ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

By: Unknown On: 18:39
  • Share The Gag
  • அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கொள்ரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.


    கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ரூ.20 கோடி தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவராக பதவி வகித்தார். கொலம்பியா வர்த்தக பள்ளியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


    sep 7 - lady america
     



    இந்நிலையில் அஜிதா ராஜிவை ஒபாமா, அமெரிக்கா அதிபரின் ஆணைய உறுப்பினராக நியமித்துள்ளார். இவரைப் போல மேலும் 9 பேருக்கும் முக்கிய பதவிகளை ஒபாமா வழங்கியுள்ளார். முன்னதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில், அஜிதா ராஜி ஐரோப்பிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படுவார் என்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment