Thursday 5 September 2013

Tagged Under:

கண் திறந்த கணபதி!

By: Unknown On: 17:39
  • Share The Gag
  • விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களையும், கோணங்களையும், அவற்றின் சிறப்புக்களையும் நாம் அறிந்திருக்கிறோம். பார்வையற்ற பக்தனுக்கு கண் வழங்கிய கணபதியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி, தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.

    நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தரும் கண் கொடுத்த கணபதியை, அந்த பெயரால் அழைக்கப்படும் நிகழ்ச்சி முன்பு நடந்ததாக வரலாறு உண்டு.

    பிறப்பால் பார்வையற்ற ஒருவர், தனக்கு பார்வை இல்லையே என்ற சோகத்திலும், வறுமை தன்னை வாட்டி வதைக்கிறதே என்ற ஆதங்கத்திலும் துன்பத்தோடு வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் தான் சுவாமிமலையில் உள்ள விநாயகரின் பெருமைகளை அவர் உணந்து, அங்கு சென்றார். பிறர் உதவியுடன் வஜ்ச்சிர தீர்த்தம் என்ற கிணற்றில் நீராடி, கடவுளை வேண்டி விரதம் இருக்கத் துவங்கினார்.

    பார்வையற்ற பக்தரின் செயலை பலர் ஏளனம் செய்தனர். எனினும் மனம் தளராமல் அவர் தனது விரதத்தை தொடர்ந்தார்.

    தனது பக்தரின் இந்த செயலால் அகம் மகிழ்ந்த விநாயகர், பார்வையற்ற பக்தனின் குறையை நிவர்த்தி செய்தார். 'அஞ்சற்க..' என்று கூறி அவரது புறக்கண்ணையும், அகக்கண்ணையும் திறந்தார்.

    தன்னை நோக்கி விரதம் இருருதவர்களை தான் எப்போதும் கைவிடுவதில்லை என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு பின்னரே இவ்வினாயகரை கண் திறந்த கணபதி அல்லது கண் கொடுத்த விநாயகர் என்று பக்தர்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர்.

    0 comments:

    Post a Comment