Thursday 10 October 2013

Tagged Under: , ,

செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட 14 பேருக்கு விருது!

By: Unknown On: 18:18
  • Share The Gag


  •  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் குடியரசு தலைவரின் செம்மொழி விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் 2009, 10, 2010,11ம் ஆண்டில் செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட முனைவர்கள் 14 பேருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.



    2009,10ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது ஐராவதம் மகாதேவன், அயல்நாட்டு அறிஞருக்கு வழங்கப்படும் குறள் பீட விருது செக் குடியரசை சேர்ந்த  ஐரோஸ்லாவ் வசேக், இளம் அறிஞர் விருதுகள் டி.சுரேஷ் (மதுரை), எஸ்.கல்பனா (அண்ணாமலை நகர்), ஆர்.சந்திரசேகரன் (நாமக்கல்), வாணி அறிவாளன் (சென்னை), சி.முத்தமிழ்ச்செல்வன் (சிவகாசி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



    2010,11ம் ஆண்டுகான தொல்காப்பியர் விருது பேரா.தமிழண்ணல், குறள் பீட விருது இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ரால்ஸ்டன் மாருக், இளம் அறிஞர் விருதுகள் டி.சங்கையா (மதுரை), ஏ.ஜெயக்குமார் (ஆத்தூர்), ஏ.மணி (புதுச்சேரி), சி.சிதம்பரம் (காரைக்குடி), கே.சுந்தரபாண்டியன் (மதுரை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தொல்காப்பியர் விருது மற்றும் குறள் பீட விருது பெற்றவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்க பரிசு, சான்றிதழ், மேலும் இளம் அறிஞர் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


    0 comments:

    Post a Comment