Thursday 3 October 2013

Tagged Under: , ,

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டது!!!

By: Unknown On: 19:19
  • Share The Gag




  •  இம்மாதம் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக்கோளான ‘மங்கல்யான்’, பெங்களூரில் இருந்து நேற்று கன்டெய் னர் லாரி மூலம் ஸ்ரீஹரிகோட்டா எடுத்துச் செல்லப்பட்டது. ‘இந்த செயற்கைக்கோள் சிறப்பு கன்டெய்னர் லாரியில் வைத்து அனுப்பப்பட்டது’ என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். செயற்கைக்கோள் எடுத்துச் சென்ற கன்டெய்னரின் முன்னும் பின்னும், பாதுகாப்பு வாகனங்கள் சூழ்ந்து சென்றன.

    ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இன்று மாலை அந்த லாரி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால் லாரி மெதுவாக ஓட்டிச் செல்லப்பட்டது. காந்தி ஜெயந்தி பொது விடுமுறை தினம் என்பதால் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும். எனவே, செயற்கைக்கோளை கொண்டு செல்ல நேற்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளதாக சமீபத்தில் தேசிய நிபுணர் கமிட்டி ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து வரும் 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ உகந்த சூழ்நிலை நிலவுகிறதா, மீத்தேன் வாயு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ள இந்த செயற்கைக்கோள், செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்க ளையும் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்க உள்ளது.
    வானிலை ஒத்துழைத் தால் வரும் 28 மாலை 4 மணி 14 நிமிடம், 45 வினாடிகளுக்கு ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து பிஎஸ்எல்வி ,சி25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்ப டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எக்ஸ்ட்ரா தகவல்

    1,350 கிலோ எடை கொண்ட மங்கல்யான் செயற்கைக்கோள், பூமியில் இருந்து விலகிய பிறகு 10 மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடையும்.

    0 comments:

    Post a Comment