Saturday 19 October 2013

Tagged Under: ,

ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்! -சீன கண்டுபிடிப்பு!

By: Unknown On: 12:32
  • Share The Gag
  • இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பலப்’ மூல்ம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.


    19 - tec bulb internet

     


    ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
    விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது. 


    வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது. 



    சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா. 


    A light bulb could be your next wireless router
     

     Beijing: Chinese scientists have successfully developed a cheaper way of getting connected to internet by using signals sent through light bulbs instead of radio frequencies as in ‘Wi-Fi’, a move expected to radically change process of online connectivity.

    0 comments:

    Post a Comment