Saturday 26 October 2013

Tagged Under: ,

மூட்டு பிரச்னைக்கு நவீன சிகிச்சை வேண்டுமா?

By: Unknown On: 00:01
  • Share The Gag


  • பொதுவாக முதுமையை அடையும்போது ஆண், பெண் இருபாலருக்கும் மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு வலுவிழந்து வலி ஏற்படக்கூடும். மூட்டுகளிலுள்ள குறுத்தெலும்பு வளராமல் தேய்மானம் அடைந்தாலும், அங்குள்ள வழுவழுப்பான திரவம் குறைந்துபோனாலும், மூட்டுகளில் உராய்வு ஏற்படும்.


    இதனால், மூட்டுகளில் அசைவு பாதிக்கப்பட்டு இறுக்கம் அதிகரிக்கும். அப்போது வலி ஏற்படும். சிலருக்கு வீக்கத்துடன் வலி இருக்கும். அதிலும் காலையில் மூட்டுகளில் இறுக்கமும் வலியும் அதிகமாக இருக்கும்போது நீட்டவும் மடக்கவும் அவதிப்படுவார்கள். மூட்டு வலி விட்டு விட்டோ அல்லது தொடர்ந்து நாள்பட்டோ இருக்கலாம். பொதுவாக சுமார் 55 வயதில் ஆண்களைவிட பெண்களுக்கே இப்பிரச்னை அதிகமாக உள்ளது.


    காரணம்: இதற்கு வளர்சிதை மாற்றம், மரபு, உடல் பருமன், தசைகளின் பலவீனம் மற்றும் இதர மூட்டுக் கோளாறுகளைக் காரணமாகக் கூறலாம். இடுப்பு, கைகள், விரல்கள், கணுக்கால், கழுத்து, பின் கழுத்து, முழங்கால் போன்ற இடங்களில் வலி அதிகமாக இருக்கலாம்.


    பரிசோதனைகள்: மூட்டுகளில் வலியும் இறுக்கமும் இருப்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டு அறியலாம். மேலும் இரத்த சிவப்பணுக்கள் தொடர்பான சோதனை (உநத), புரோட்டீன் சோதனை, மூட்டுகளிலுள்ள வழுவழுப்பான திரவத்தை சோதித்தல், இரத்த அணுக்களைச் சோதித்தல் என பல சோதனைகளைச் செய்யலாம். சிலவேளைகளில் சாதாரண எக்ஸ்-ரே மூலம் குறுத்தெலும்பு தேய்மானம், மூட்டுகளுக்கிடையில் குறைந்துள்ள இடைவெளி, திரவத்தின் அளவு போன்றவை தெரியவராது. அந்த நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் மூட்டுகளின் நிலையைக் கண்டறியலாம்.


    வழக்கமான சிகிச்சைகள்: வலியைக் குறைத்து மூட்டுகளில் இறுக்கத்தை இலகுவாக்கி இயல்பாகச் செயல்பட வைக்கவும், மேலும் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் வலிநிவாரண மாத்திரைகளும், ஸ்டீராய்டு மாத்திரைகளுமே வழங்கப்படுவதால் தாற்காலிக நிவாரணமே கிடைக்கும். இதில் பக்கவிளைவுகள் நிறைய உண்டு.


    புதிய எமிட்ரான் பிஎஸ்டி (Pulsed Signal Therapy) சிகிச்சை: அதிநவீன, அறுவை சிகிச்சையற்ற, புதுமையான ஒரு சிகிச்சை முறைதான் பிஎஸ்டி. அதாவது, எமிட்ரான் எனும் சாதனம் மூலம் மிகக் குறைந்த சக்தி கொண்ட மின்காந்த அதிர்வலைகள் பாதிக்கப்பட்ட மூட்டுகள் பகுதியில் செலுத்தப்படும். இதனால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, பாதிக்கப்பட்ட திசுக்களை சீரடையச் செய்கிறது அல்லது புதிய திசுக்களை ஏற்படுத்துகிறது. இயல்பான முறையில் குணமடையும் சக்தியை அதிகரிக்கிறது.


    சிகிச்சைக்கு நல்ல பலன்: ஆக்ஸிமெட் மருத்துவமனையின் எலும்பு மருத்துவப் பிரிவில் இந்த எமிட்ரான் சிகிச்சை கடந்த 5 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது. இது அறுவை சிகிச்சையல்ல. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. பதினைந்து நாள்களுக்கு தினம் ஒரு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த செலவில் சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை பலனளித்துள்ளது.


    கட்டணச் சலுகை: உலக மூட்டுவலி விழிப்புணர்வு தினத்தையொட்டி சிகிச்சைக்கான பரிசோதனைக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.


    மேலும் விவரங்களுக்கு...
    ஆக்ஸிமெட் மருத்துவமனை, அண்ணா சாலை, நந்தனம், சென்னை.

    0 comments:

    Post a Comment