Thursday 14 November 2013

Tagged Under: , ,

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிரடி மாற்றம்!

By: Unknown On: 07:31
  • Share The Gag


  • வரும் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கல்வித்துறை  அறிமுகம் செய்கிறது.

    ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.  கடந்த பொதுதேர்வுகளில் தேர்வு எழுத மாணவர்களுக்கு மெயின் சீட் வழங்கப்பட்டது.

    மேலும் கூடுதலாக அடிஷனல் ஷீட் வழங்கப்பட்டது. புதிய நடைமுறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30 பக்கங்களும் வழங்கப்பட உள்ளது. இவை மொத்தமாக பைண்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு அடிஷனல் ஷீட்டிற்கு எழுந்து நிற்க தேவையில்லை.

     தேர்வு எழுதும் மாணவரின் முன் அல்லது பின் அமர்ந்துள்ள மாணவர்கள் அடிஷனல் ஷீட் வாங்கி காப்பி அடிக்கும் நிலை தடுக்கப்படும்.  ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சமாக 400 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும். அதற்கு மேல் மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவார்கள் அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும்.

    தற்போது, ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே மட்டுமே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் வெளியாகிவிடும் என்ற குற்றசாட்டும் எதிர்காலத்தில் நிகழாது. இந்த புதிய நடைமுறைகள் வருகின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமல்படுத்தப்படும் என பள்ளி, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    0 comments:

    Post a Comment