Tuesday 12 November 2013

Tagged Under:

புரோகிராம்களை முறையாக மூடிட புதிய மென்பொருள்!

By: Unknown On: 23:18
  • Share The Gag
  • விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.



    சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், ""அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடவும்'' என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.


    இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம்.


    இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது.


    "x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப் (kill) படுகின்றன”.


    இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும். ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை



    என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

    0 comments:

    Post a Comment