Wednesday 27 November 2013

Tagged Under:

கூகுள் பற்றி நீங்கள் அறியாதவை..

By: Unknown On: 22:06
  • Share The Gag
  • இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான்.கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.

    இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.


    1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

    2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

    3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.

    4. ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது.

    5. ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.

    6. கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது.

    7. கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது.

    8. இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

    0 comments:

    Post a Comment