Saturday 16 November 2013

Tagged Under: , , ,

மின்மினிப் பூச்சிக்கு வெளிச்சம் எப்படி வருகிறது?

By: Unknown On: 22:10
  • Share The Gag

  • கிராமத்து வயல்காட்டில் அடர் செடிகள் இரவில் வண்ண ஒளியால் தகதகக்கும். இதில் ஒளிப்பாய்ச்சலுக்கு காரணம் விளக்குப்பூச்சி எனப்படும் மின்மினிப் பூச்சிகளே. இந்த வெளிச்சம் எப்படி உருவாகிறது.

    பொதுவாக ஒரு பொருள் ஒளி விடும் போது அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90 சதவீத வெப்பமும், 10 சதவீத ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த சிறியப்பூச்சி வெந்து கருகிவிடாதா? அப்படி எல்லம் நடப்பது இல்லை.

    மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி (cold light), உயர் ஒளி (bioluminescence) என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்தப் பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும். சிறிதுகூட வெப்பம் தருவதில்லை. அதாவது மின்மினியிலிருந்து வரும் ஒளியில் 100 சதவீத ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே, மின்மினியின் வயிற்றுப் பகுதியில் ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளி செல்கள் உள்ளன.

    இதில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியின் உடலுக்குள் வரும் காற்றுக்  குழாயிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. பின் லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ் என்ற நொதியினால் இணைந்து, ஆக்சிலூசிபெரிலின் என்ற பொருளாக மாறுகிறது. அப்போதே ஒளியையும் கக்குகிறது மின்மினியின் வயிற்று செல்கள்.

    0 comments:

    Post a Comment