Thursday 26 December 2013

Tagged Under: , , , ,

இனி எஸ் எம் எஸ் -கூட அதிகாரப்பூர்வ செய்தி! மத்திய அரசு முடிவு?

By: Unknown On: 00:58
  • Share The Gag



  • இனி இந்தியாவில் பணப்பரிமாற்றம், பதிவு செய்வது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் குறுஞ் செய்தியையே ஆதாரமாக ஏற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.


    பொதுமக்கள் கொடுத்த 241 மனுக்களை, 100 துறைகளுக்கு அனுப்பி தங்களின் குறுஞ்செய்தி சோதனையை இன்று அதிகாரிகள் மேற்கொண்டனர். பொதுமக்கள் தங்கள் மனுக்களில் தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி பற்றிய விவரங்களை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்த “மொபைல் சேவா” திட்டத்தை அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், 90 ஆயிரம் மொபைல் சந்தாதாரர்கள் உள்ள நிலையில் ரெயில்வே நிர்வாகத்தை போன்று பரிமாற்றம் தொடர்பான விவரங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை அதிகாரப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


    ஆறு மாதங்களுக்குள் அரசின் அனைத்து துறைகளிலும் எச்.டி.எம்.எல் 5 என்ற பயன்பாடு நிலைநிறுத்தப்படும். அப்போது அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய வழி ஏற்படும் என தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    0 comments:

    Post a Comment